Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி
ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர் இணையத்தளத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் நேற்று அறிவித்துள்ளனர்.
ரோஹிதவின் கிரெடிட் கார்டில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 7, விஜேராம மாவத்தை, இலக்கம் 117 இல் வசிக்கும் ரோஹித ராஜபக்ஷ, மார்ச் 3 ஆம் திகதி மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த போது தனது கடனட்டை காணாமல் போனதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பரிவர்த்தனை தொடர்பான வங்கி கணக்கு அறிக்கைகளை வழங்குமாறு தனியார் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்
59% குடும்பங்கள் உணவின்றி தவிப்பு அறிக்கை
59% குடும்பங்கள் உணவின்றி தவிப்பு அறிக்கை
2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்தொன்பது (59) வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அத்துடன், “இலங்கையில் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்” என்று தெரியவந்துள்ளது.
விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, பூச்சிகளால் ஏற்படும் பயிர் அழிவை குறைந்தபட்சமாக குறைப்பது, அறுவடைக்குப் பிந்தைய பயிர் அழிவைத் தடுப்பது மற்றும் விவசாயத் துறையில் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் உணவைப் பெறுவதற்கான நம்பகத்தன்மையை அதிகரிப்பது ஆகியவை மாற்று வழிகளாக எடுத்துக்காட்டப்பட்டன.
மேஜர் ஜெனரலுக்கு பங்கேற்க தடை
மேஜர் ஜெனரலுக்கு பங்கேற்க தடை
இலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு ICPPG ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள்
தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர்
ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களைப் போன்ற சர்வதேச அரசு சார்பற்ற மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆணடு கார்த்திகை மாதம் 7ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம்
திகதி வரை குலதுங்க ஜோசப் முகாம் (SFHQ-W) தளபதியாக இருந்தார். இந்த காலகட்டத்தில் ஜோசப் முகாமில் சித்திரவதைக்கு ஆளான பலர் பிரித்தானியா மற்றும் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.
மேஜர் ஜெனரலுக்கு பங்கேற்க தடை
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ICPPG அவர் பங்கேற்பதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறது. 2016 இல் குலதுங்கவின் முன்னோடியான சிசிர மென்டிஸ் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு
அனுப்பப்பட்டது போது பெலிஸ் கெயர் செய்ததைப் போல குறைந்தது அவரது பங்கு பற்றி அவரிடம் வினா எழுப்புமாறு ஐ.நா மனித உரிமைகள் கு
ழுவை கோரியுள்ளதுடன் முன்னாள், தற்போதைய மற்றும் எதிர்கால குற்றவாளிகளுக்கு ஒரு தீவிரமான செய்தியை அனுப்புமாறும் கோரியுள்ளது. இது மற்றவர்கள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும்.
ICPPG பணிப்பாளர் திருமதி அம்பிகை செல்வகுமார் குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளை
ஒன்றிணைத்து ஐ.நாவை வலியுறுத்துமாறு அழைப்பு விடுத்ததுடன் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மீளாய்வு
செய்வதற்கு எவ்வாறு ஐ.நா போர்க்குற்றவாளியை அனுமதிக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் பணம் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
700 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபர் திருகோணமலை
பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மரண விசாரணை அதிகாரியின் வருகைக்காக சடலம் தற்போதும் அதே இடத்தில் காணப்படுகின்றது
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் மரணங்கள் அதிகரித்து செல்வதுடன் மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியா கற்குழி பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் உயிரிழந்த முறையில் சடலமாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
பேருந்தில் இளைஞன் மீது கத்திக் குத்து
பேருந்தில் இளைஞன் மீது கத்திக் குத்து
தனியார் பயணிகள் பேருந்தில் சென்ற இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
பிலியந்தலையில் இருந்து கஹபொல நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணிகளின் பணப்பையொன்றை இருவர் இணைந்து திருட முற்பட்ட நிலையில் அதனை அவதானித்த நடத்துனர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விசாரணையில், வாக்குவாதம் முற்றி, சந்தேகநபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடத்துனரை தாக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது நடத்துனருக்கு உதவிக்கு வந்த இளைஞர் ஒருவர் மீது குறித்த கத்திக் குத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பேருந்தில் இளைஞன் மீது கத்திக் குத்து
படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள், சந்தேகநபர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் தப்பியோடியுள்ளார். மற்றைய சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிலியந்தலை மடபாத பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவனை கொடூரமாக தாக்கியதாக ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு
மாணவனை கொடூரமாக தாக்கியதாக ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு
ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கற்கும் ஐ. அப்துல் ஹாதிக் எனும் மாணவனே இவ்வாறு ஆசியரால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை – குறித்த பாடசாலையில் வைத்து ஐ.எம். பஹாரி எனும் ஆசிரியர் தனக்கு பிரம்பால் ஒரு தடவை அடித்ததாகவும், இன்னொரு தடவை தனது ‘சேர்ட் கொலரை’ பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தன்னை தூக்கி வீசியதாகவும் மாணவர் ஹாதிக் தெரிவிக்கின்றார்.
தற்போது பாதிக்கப்பட்ட மாணவர் நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அக்கரைப்பற்றுக் காரியாலயம் ஆகியவற்றில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அங்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே – மனித உரிமை ஆணைக்குழுவில் தாங்கள் முறையிட்டதாகவும் மாணவனின் தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) கூறுகின்றனர்.
மாணவனை கொடூரமாக தாக்கியதாக ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு
மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வந்திருந்த மாணவன் ஹாதிக் ஊடகவியலாளருடன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசினார்.
“சம்பவ நேரத்தில் எனது வகுப்பு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் மேசையில் தலை வைத்து படுத்திருந்தேன். அப்போது பக்கத்து வகுப்பில் இருந்த பஹாரி என்கிற ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து விளையாடிய மாணவர்களுக்கு அடித்தார். அப்போது எனக்கு ஏன் அடிகவில்லை என்று ஒரு மாணவன் கேட்டான். அதனால் பிரம்பால் எனக்கு இரண்டு தடவை ஆசிரியர் அடித்தார்” என்று, அன்று நடந்த விடயத்தை மாணவன் ஹாதிக் கூறத் தொடங்கினார்.
“பிறகு தகரத்தில் யார் அடித்தது என்று சேர் கேட்டார். அதற்கு இரண்டு மாணவர்களின் பெயரைக் கூறி அவர்கள்தான் என்றேன். அப்போது மீண்டும் என்னை அடிப்பதற்கு ஆசிரியர் வந்தார். அப்போது ஏன் சேர் திரும்ப திரும்ப அடிக்கிறீங்க என்று கேட்டேன். அதற்கு ‘அறப்படித்த வாப்பாக்கு மூத்த கதை கதைக்காதே’ என்று கூறிவிட்டு – எனது சேர்ட் கொலரைப் பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தூக்கி வீசினார்” என அந்த மாணவன் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக தனது கால் அடிபட்டு சதை உடைந்து, முழங்கால் சில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தனக்கு நடக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது பாரம்பரிய முறிவு வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் ஹாதிக்கின் காலில் ‘பற்று’ போடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மூன்றாந் தவணை பரீட்சை ஆரம்பித்துள்ள நிலையில், பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் சென்று – பரீட்சைக்குத் தோற்றி விட்டு, தனது தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) ஆகியோருடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஹாதிக் சென்றிருந்தார்.
தனது புத்தகப் பையை பாடசாலையிலேயே – தான் விட்டு வந்ததாகவும், அதனை எடுத்து வருமாறு சிலரை அனுப்பிய போதும், தங்கள் குடும்பத்தவர்கள் வந்தால் மட்டுமே புத்தகப் பையை வழங்க முடியும் என, அங்குள்ள ஆசிரியர் ஒருவர் கூறியதாகவும் மாணவன் ஹாதிக் தெரிவித்தார். இதனால், பரீட்சைக்காக படித்து தயாராக முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் சகோதரர் யு.எல். முபாஹித் கூறுகையில்;
“சம்பவம் நடந்து 06 நாட்களின் பின்னர் எனக்கும் எனது பெரியப்பா மற்றும் அவரின் மகனுக்கும் எதிராக பாடசாலையின் அதிபர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாங்கள் அவரை அச்சுறுத்தியதாக அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது பொய்யான முறைப்பாடு” என்றார்.
“அதிபரின் முறைப்பாடு தொடர்பில் கடந்த 04ஆம் திகதி அக்கரைப்பற்று பொலிஸார் எம்மை அழைத்திருந்தார்கள். நாங்கள் சென்றோம். ஆனால் முறைப்பாடு செய்த அதிபர் வரவில்லை. நாங்கள் வாக்குமூலத்தை வழங்கி விட்டு – வந்து விட்டோம்” எனவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட தனது தம்பியான மாணவன் ஹாதிக்கை தனது முச்சக்கர வண்டியிலேயே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவன் ஹாதிக்கின் தாய் ஆத்திக்கா உம்மா இச் சம்பவம் குறித்து பேசுகையில், தனது மகனை ஆசிரியர் அடித்து, அவரைத் தூக்கி வீசியதாகக் கூறினார். இதன்போது தனது மகனின் சட்டை பொத்தான்கள் அறுந்து போனதாகவும், அதனை கட்டுவதற்காக பக்கத்து வீட்டுக்கு ஊசி – நூலை ஆசிரியர்கள் கேட்டு அனுப்பியிருந்ததாகவும் கூறினார். “விடயத்தை நான் அறிந்ததும் பாடசாலைக்குச் சென்றேன். அங்கு எனது பிள்ளையை பார்ப்பதற்கு ஆசிரியர்கள் முதலில் அனுமதிக்கவில்லை. பின்னர் நான் வாக்குவாதப்பட்டுத்தான் பிள்ளையை பார்த்தேன். அதன் பிறகு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்”.
“சம்பவம் நடந்த போது எனது பிள்ளையிடம் அதிபர் சென்று – என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஆசிரியர் தன்னைத் தாக்கியதாக மகன் கூறியுள்ளார். அப்போது, ‘சேர் அடித்திருக்க மாட்டார், நீ சறுக்கி விழுந்திருப்பாய்’ என்று அதிபர் கூறியிருக்கிறார். அதனால்தான் பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல நாங்கள் முடிவு செய்தோம்” எனவும் மாணவனின் தாயார் கூறினார்.
“அக்கரைப்பற்று வைத்தியசாலையில் எனது மகன் அனுமதிக்கப்பட்ட போதும், அங்கு அவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனக் கூறி – ‘டிக்கட்’ வெட்டி அனுப்பி விட்டனர். ஆனால், மகனுக்கு நடக்க முடியவில்லை. அதனால் மகனை காத்தான்குடியிலுள்ள தனியார் மருத்துவ நிலையமொன்றுக்கு அழைத்துச் சென்று வைத்தியர் ஒருவரிடம் காட்டினோம். அவர் மருந்து வழங்கினார். அதைப் பாவித்த போதும் மகனுக்கு குணமாகவில்லை. இதன் பிறகு நீலாவணையிலுள்ள பாரம்பரிய முறிவு வைத்தியர் ஒருவரிடம் கொண்டு சென்றபோது, பிள்ளையின் முழங்கால் சில்லில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சதை நொறுங்கியுள்ளதாகவும் கூறி – பத்து போட்டுள்ளார்” என மாணவனின் தாயார் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, அந்த மாணவனை தான் தாக்கவேயில்லை என்கிறார் ஆசிரியர் பஹாரி.
மாணவன் மற்றும் அவரின் குடும்பத்தாரின் குற்றச்சாட்டு குறித்து ஆசிரியரைத் தொடர்பு கொண்டு வினவியபோதே, அவர் இந்தப் பதிலை வழங்கினார். குறித்த மாணவனின் பக்கத்து வகுப்பில் தான் கற்பித்துக் கொண்டிருந்தாகவும், சம்பந்தப்பட்ட மாணவனின் வகுப்பில் மாணவர்கள் குழப்படி செய்தமையினால் அவர்களை அதிபரிடம் செல்வதற்கு தான் அழைத்த போது, மாணவன் ஹாதிக் தவறான வார்த்தைகளைக் கூறி, முடியாது எனச் சொன்னதாகவும் ஆசிரியர் பஹாரி தெரிவித்தார்.
“இதன் போது அந்த மாணவனின் சேட்டில் எனது விரல் தவறுதலாகப் பட்டதால், அவரின் சேர்ட் பொத்தான்கள் அறுந்து விட்டன. வேறு அவரை நான் தாக்கவில்லை” எனவும் குறிப்பிட்டார். ஹாதிக் எனும் மேற்படி மாணவனின் பெரியப்பா மற்றும் அவரின் மகன்மார் இந்தப் பாடசாலை நிர்வாகத்துடன் சில காலங்களுக்கு முன்னர் பிரச்சினைப்பட்டதாகவும், அது குறித்து அவர்களுக்கு எதிராக அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறும் ஆசிரியர் பஹாரி, அதற்குப் பழி வாங்குவதற்கான சந்தர்ப்பமாக தற்போதைய விடயத்தை மாணவன் ஹாதிக்கின் குடும்பத்தினர் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், ஹாதிக் எனும் மாணவனின் பெரியப்பா குடும்பத்தினர் பாடசாலை நிர்வாகத்துடன் பிரச்சினைப்பட்ட சம்பவம் நடக்கும் போது, இந்தப் பாடசாலையில் தான் கடமையாற்றவில்லை என்றும், அதற்கு சில காலத்துக்குப் பின்னரே தான் இந்தப் பாடசாலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
07 வகையான பொருட்களின் விலைகள் குறைப்பு
07 வகையான பொருட்களின் விலைகள் குறைப்பு
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 07 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி, காய்ந்த மிளகாய், சிவப்பு பருப்பு, கோதுமை மா, வெள்ளை சீனி, சிவப்பு பச்சரிசி (உள்ளூர்), வெள்ளை நாடு (உள்ளூர்) மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய விலைப்பட்டியல் மேலே

நாய் போல காட்டுக்குள் முன்னாள் போராளி
விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளி காட்டுக்குள் ,கொக்கு அணில்களை வேட்டையாடி உண்டு வாழும் பரிதாபம் .
வெளி நாடுகளில் உள்ள புலி குழுக்கள் ,போராளிகளுக்கு என காசு சேர்க்கும் தொலைக்காட்சி வானொலிகள் கொள்ளையடித்து ஏப்பம் இடுகின்றன .
தமிழா பார் இவர்கள் நிலையை .இப்போ புதிய மடலாய் YOUTUBE இவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் கேவலம் .
யாரிடம் போயி இதை சொல்லி அழ .
அண்ணன் வளர்த்த வளர்ப்பில் வளந்தவர்கள் கதறிய பெண் போராளிகள் .
கண்ணீர் வீடியோ
லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்
லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்
இலங்கையில் ,இலங்கை அரச இராணுவத்தால் மேற்கொள்ள படும் ,கடத்தல்,கொலை,கற்பழிப்பு ,சித்திரவதை ,மனித உரிமை மீறல்கள் ,அச்சுறுத்தல் என்பனவற்றை நிறுத்த கோரி ,பெண்கள் தினத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது .
இன்று 08|03|2023 மதியம் 13.00 முதல் 15.00மணிவரை இந்த போராட்டம் இடம் பெறுகிறது .கொட்டும் மழையிலும் ,உறை பனி குளிரில் நனைந்த வண்ணம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை காரிகளினால் ,இந்த போராட்டம் முன்னெடுக்க பட்டு வருகிறது .
இலங்கையில் நாள் தோறும் பெண்கள் ,மற்றும் மக்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
லண்டனில் இலங்கை தூதரகம் மக்களினால் முற்றுகை |இலங்கை செய்திகள்
கடந்த தினம் வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ,
மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில்
சடலங்களாக மீட்க பட்டனர் .
மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட நிலையிலும் ,
கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவை மர்ம கும்பலினால் இவ்வாறு ,கொலை செய்ய பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .
நாள் தோறும் நீரேரிகள் ,காடுகள் உள்ளிருந்து ஆண் ,பெண்கள் சடலமாக மீட்க பட்டு வரும் பயங்கரம் இடம்பெற்று வரும் நிலையில் ,
இந்த போராட்டம் இன்று லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெறுள்ளமை குறிப்பிட தக்கது .
தப்பிச் செல்ல முற்பட்ட கைதி சுட்டுக் கொலை | இலங்கை செய்திகள்
தப்பிச் செல்ல முற்பட்ட கைதி சுட்டுக் கொலை | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கேகாலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த கைதி சிறைச்சாலையின் பணிகளுக்காக அதிகாலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கைதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது .
மகிந்தாவுக்கு விதிக்க பட்ட வெளிநாட்டு பயண தடை நீக்கம் | இலங்கை செய்திகள்
மகிந்தாவுக்கு விதிக்க பட்ட வெளிநாட்டு பயண தடை நீக்கம் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |நீக்கம் இலங்கை முன்னாள் ஜனாதிபதி விதிக்க பட்டிருந்த தடை நீக்க பட்டுள்ளது .
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வேளை ,
ராஜபக்ஸ குடும்பம் நாட்டை விட்டு தப்பி ஓட முடியா நிலையில் தடைகள் விதிக்க பட்டிருந்தன .
அவ்வாறான தடையே தற்போது நீக்க பட்டுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை| இலங்கை செய்திகள்
கொலை சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று (08) குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
03.07.2014 அன்று கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லால் தாக்கி நபர் ஒருவரைக் கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தபால்மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு | இலங்கை செய்திகள்
தபால்மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமால் ஜி.புஞ்சிஹேவாவிடம் ´அத தெரண´ வினவியபோது, எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த
திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) அறிவித்தது
கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க நடவடிக்கை | இலங்கை செய்திகள்
கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க நடவடிக்கை | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| பல மாத காலத்திற்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க, இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடன் வசதி இந்த ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இதுவரை பெறப்பட்ட கடன் வசதியில், மூன்றில் இரண்டு பங்கு மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு பேரூந்துகள் நேரெதிர் மோதல் -23 பேர் காயம் | இலங்கை செய்திகள்
இரு பேரூந்துகள் நேரெதிர் மோதல் -23 பேர் காயம் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கொழும்பு – கண்டி வீதியின் மாவனெல்லை கனேதென்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 23 பேர்
காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார்
பேருந்து ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுமே
இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்
போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின்
மாணவர்கள் போராட்டத்த்தை நடத்தி வருகின்றனர் .
இதன் பொழுது அந்த போராட்டத்த்தை அடக்கிட ,
கணீர் புகை மற்றும் நீரை பீச்சி அடித்து காவல்துறை ,
ஆராயக்கத்தில் ஈடுபட்டு வருகிறது .
ரணில் அரசுக்கு எதிராக மக்கள் வீதி
இரங்கி போராடும் நிலை மீள எழுச்சி பெறும்
என்பதை வை மீள எடுத்துரைத்துள்ளன .
அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு
அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கூடிய வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக, குறித்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களையும் வெளிப்படைத் தன்மையுடனும் ஒப்பீட்டுத் தன்மையுடனும் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்க திறைசேரி செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத் திட்டத்திற்கான அனைத்து நிபந்தனைகளையும் இலங்கை தற்போது பூர்த்தி செய்துள்ளதுடன், இந்த மாதத்துக்குள் கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பார்த்தசாரதி – சஜித் சந்திப்பு
பார்த்தசாரதி – சஜித் சந்திப்பு
இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும், ஊடகவியலாளரும், புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (06) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
சைப்ரஸ், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அவர் கடமையாற்றிருந்தார். பிரதமர் ராஜீவ் காந்தியின் உத்தியோகபூர்வ தொடர்பாளராக இருந்ததோடு, பிரதமரின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியவராவார்.
அக்காலப்பகுதியில் அவர் இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், இந்தியா புதுடில்லி காற்றாலைச் சக்தி கற்கைகள் மையத்தின் பனிப்பாளராகவும் கடமையாற்றிவருகிறார்.
பார்த்தசாரதி – சஜித் சந்திப்பு
கடந்த இருபது ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் பிரச்சினைகள் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அலைவரிசைகளில் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் வலுவான இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.
கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி | இலங்கை செய்திகள்
கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குனரான சீனா, மார்ச் 6 ஆம் திகதி அந்நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.


























