யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தி தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ. மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றி பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.

சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 24 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்டப்டனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

No posts found.
கடற்கரை மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடற்கரை மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி மீட்பு

கடற்கரை மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி மீட்பு

கடற்கரை மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸார், இன்று (14) காலை கடற்கரைப்பகுதில் கண்டெடுக்கப்பட்ட குறித்த மிதிவெடி பழையதா அல்லது வேறு இடம் ஒன்றில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளதா என்ற விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய
தகவலுக்கமைய குறித்த மிதிவெடி மீட்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது

No posts found.
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நள்ளிரவு முதல் புகையிரத வேலைநிறுத்தம்

நள்ளிரவு முதல் புகையிரத வேலைநிறுத்தம்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் லோகோமோட்டிவ் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) நள்ளிரவு முதல் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

No posts found.
பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை படைத்த இலங்கையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை படைத்த இலங்கையர்கள்

பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை படைத்த இலங்கையர்கள்

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளை. இதில் பெங்களூரைச் சேர்ந்த, பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா ஆகிய நான்கு நீச்சல்

வீரர்கள், சுமா ராவ், சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி, மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய மூன்று நீச்சல் வீராங்கனைகள் என பயிற்சி பெற்ற 7 பேரும் இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி க்கு வரையிலும் உள்ள சுமார் 30 கி.மீ

தொலைவிலான பாக் ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு அனுமதி கோரியிருந்தனர்.

பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை படைத்த இலங்கையர்கள்

இந்திய – இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் சுஜேத்தா தேப் பர்மன் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் சென்றனர்.

தலைமன்னாரில் இருந்து நேற்று (13) அதிகாலை 5 மணிக்கு கடலில் குதித்து நீந்த தொடங்கிய 7 பேரும் நேற்று மாலை 3.45 மணி அளவில் (10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை வந்தடைந்தார்.

நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் பொலிஸார், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்.

இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் ஜலசந்தி கடற்பகுதியை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேனியைச் சேர்ந்த ஆர். ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் என்ற ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட சிலர் குறைந்த வயதுகளில் நீந்தி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

No posts found.
இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், விவசாய உற்பத்திகளுக்கு பயன்டுத்தப்படும் இரசாயனங்களே இதற்கான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

No posts found.
கண்டி சம்பவம் - மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கண்டி சம்பவம் – மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகநபர் கைது

கண்டி சம்பவம் – மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகநபர் கைது

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் உதவியுடன் அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் நேற்று முன்தினம் (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டி சம்பவம் – மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகநபர் கைது

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வீட்டில் இல்லை என கணவர் அவரது தாயாருக்கு அறிவித்ததன் அடிப்படையில் அவர் தேடிய போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவருடன் சேர்ந்து கடை ஒன்றை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

நேற்றிரவு 9.50 மணியளவில், தனது கணவர் கடையை மூடிவிட்டு இறுதிச் சடக்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர், அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பியதாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர் காலையில் இருவரும் வசித்த வீட்டின் பக்கத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

No posts found.
ஜனாதிபதி இல்லாவிட்டால் நாடு அதள பாதாளத்திற்குள்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி இல்லாவிட்டால் நாடு அதள பாதாளத்திற்குள்

ஜனாதிபதி இல்லாவிட்டால் நாடு அதள பாதாளத்திற்குள்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதளபாதாளத்திற்குள் விழுந்திருக்கும். இதனால் எமது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

எனவேதான் மக்கள் நலன்கருதியே நாம் ஜனாதிபதியை ஆதரித்தோம். தற்போது அவருக்கு உலக நாடுகள் கைகொடுத்து வருகின்றன. இந்த அரசியலில் ஜீவன் தொண்டமான் பலமான அமைச்சராக இருக்கின்றார்.

அதன்மூலம் மலையகத்துக்கு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கிடைத்து வருகின்றன.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களுக்கு கூடாரங்களும், கதிரைகளும் வழங்கும் நிகழ்வு இலங்கை

தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஷ்வரனின் தலைமையில் தலவாக்கலை, கொட்டகலை, நுவரெலியா போன்ற பகுதிகளில் இடம்பெற்றது.

ஜனாதிபதி இல்லாவிட்டால் நாடு அதள பாதாளத்திற்குள்

தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் சச்சிதானந்தன், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், அமைப்பாளர்கள், தோட்ட தலைவர், தலைவிமார்கள், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

” நானும், எமது தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் பிரதேச சபையில் இருந்துதான் மக்கள் பிரதிநிதித்துவ அரசியலை ஆரம்பித்தோம். அப்போது மக்கள் தமது பிரச்சினைகளை எம்மிடம் எடுத்துரைப்பார்கள்.

நாம் எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறி, தேவையான வேலைத்திட்டங்களை பெற்றுக்கொள்வோம். இவ்வாறு நாம் மக்கள் சேவையாற்றியதால்தான் எம்மை மாகாணசபை முதல் பாராளுமன்றம்வரை மக்கள் அனுப்பி வைத்தனர்.

எனவே, உங்கள் பகுதி பிரச்சினைகளை எடுத்துக்கூறவும் பிரதிநிதி ஒருவர் அவசியம். அதனால்தான் இப்பிரதேசத்திற்கு துடிப்பான இளைஞர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். எனவே, அவருக்கு ஆதரளித்து, அவர்மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பலமானதொரு ஸ்தாபனமாகும். அதன்பொதுச்செயலாளர் பலமான அமைச்சராக இருக்கின்றார்.

எனவே, எம்மால்தான் மலையகத்துக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க கூடியதாக இருக்கும். மக்கள் மென்மேலும் ஆணை வழங்கினால் எமது பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கப்படும்.

அதற்கு இந்த உள்ளாட்சி சபைத் தேர்தலை சிறந்த களமாக பயன்படுத்திக்கொள்ளவும்.

நாட்டை பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவுக்கும் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். எவரும் முன்வரவில்லை. ரணில் விக்கிரமசிங்கதான் அச்சமின்றி பொறுப்பேற்றார். தற்போது நாட்டை படிப்படியாக மீட்டு வருகின்றார். உலக நாடுகள் அவரை ஆதரிக்கின்றன.

அவரை நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால் நிலைமை மோசமாக இருக்கும். நாமும் மக்கள் பக்கம் நின்று – மக்கள் சார்பில் அவரை ஆதரித்தோம்.

அவரின் அரசில் எமது பொதுச்செயலாளர் அமைச்சராக இருக்கின்றார். பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

அண்மையில்கூட உலக வங்கியின் ஆதரவுடன், பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் இலவச சத்துணவு திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.” – என்றார்.

No posts found.
விமலை கைது செய்யுமாறு உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

விமலை கைது செய்யுமாறு உத்தரவு

விமலை கைது செய்யுமாறு உத்தரவு

இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

விமலை கைது செய்யுமாறு உத்தரவு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, ரொஜர் செனவிரத்ன, மொஹமட் முஸம்மில், பியசிறி விஜேநாயக்க உள்ளிட்ட 7 பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகாததை கருத்தில் கொண்டு, பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்த நிலையில் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

No posts found.
ஒஸ்கார் விருதினை வென்ற தமிழ் ஆவணப்படம்
Posted in இலங்கை செய்திகள்

ஒஸ்கார் விருதினை வென்ற தமிழ் ஆவணப்படம்

ஒஸ்கார் விருதினை வென்ற தமிழ் ஆவணப்படம்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது.

முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.

“ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் யானை ரகு கூட இல்லையே என்றுதான் வருத்தமாக இருக்கிறது,” என்று பொம்மன் நெகிழ்ந்து கூறியுள்ளார்.”

தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம்.

ஒஸ்கார் விருதினை வென்ற தமிழ் ஆவணப்படம்

நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.

தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியுளது. எலிபெண்ட் விஸ்பரரர்ஸ் என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.

காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும் அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ்.

தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன், வால் வெட்டுபட்டு, இறக்கும் தருவாயில் ஒரு குட்டி யானை காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது. காப்பகத்தில் இருந்த பலரும் இனி அதை காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என ஒதுங்கி கொள்ள பொம்மன் மட்டுமே அதனை என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி தன்னுடன் அழைத்து வருகிறார்.

யானையை வளர்ப்பதற்கு அவருக்கு துணையாக பெள்ளியும் வருகிறார். அந்த யானைகுட்டிக்கு ரகு என பெயர் சூட்டி தனது குழந்தையை போலவே பராமரித்து வந்த அவர், தான் சொன்னது போலவே அந்த குட்டியை இயல்பான உடல்நிலைக்கு தேற்றிவிட்டார். அதன்பின் அவருக்கு துணையாக வந்த பெள்ளிக்கு அம்மு என்ற பெண் குட்டி யானையை பராமரிக்க கொடுக்கிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் 50 வயதை கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள். இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் இத்தகைய நிபந்தனையற்ற அன்புதான் எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இப்போது இந்த ஆவணப்படம் ஒஸ்கார் விருதையும் வென்றுள்ளது.

ஒஸ்கார் விருதினை வென்ற தமிழ் ஆவணப்படம்

ஆனால் இத்தனை பெரிய வரவேற்பு தங்களின் கதைக்கு கிடைக்குமென பொம்மன், பெள்ளி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும்போல் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் முதுமலையில் தங்களது அன்றாட வேலையை பார்த்து வருகின்றனர்.

ஒஸ்கார் பரிந்துரையில் இடம்பெற்றபோது பொம்மன், பெள்ளியிடம் பேசுவதற்காக பிபிசி தமிழ் அவர்களை தொடர்புகொண்டபோதும் பொம்மன் யானையுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தார். நேரம் ஆகிருச்சு சீக்கிரம் கிளம்பு என்று பெள்ளியின் குரல் மட்டும் பிண்ணனியில் ஒலித்தது.

யானையுடன் சென்றுகொண்டே பொம்மன் நம்மிடம் பேசியபோது, “இந்த ஆவணப்படத்தை எடுத்த கார்த்திகி என்னும் பெண் எனக்கு நீண்டநாட்களாக தெரிந்தவர்தான். அவரும் அவருடைய நண்பர்களும் அடிக்கடி முதுமலை வருவார்கள். அப்படி ஒருமுறை ரகுவை நான் எடுத்து வளர்க்க துவங்கிய காலத்தில் அவர்கள் வந்திருந்தார்கள். அப்போதுதான் இந்த குட்டியானையுடன் சேர்த்து உங்களை ஒரு படம் எடுக்கிறோம் எனக் கூறி இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பை அவர்கள் ஆரம்பித்தனர்,” என்று கூறினார்.

“இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து இந்தப் படப்பிடிப்பை மேற்கொண்டனர். ஒவ்வொரு முறை வரும்போது வெவ்வேறு எண்ணிக்கையிலான ஆட்கள் வருவார்கள். அவ்வபோது முதுமலைக்கு வரும் அவர்கள் காலையில் சிறுது நேரம், மாலையில் சிறுது நேரம் என படப்பிடிப்பைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் மும்பையிலிருந்து வந்தவர்கள் என நினைக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சர்வதேச அளவில் முக்கியமான விருதாகக் கருதப்படும் ஒஸ்கார் தற்போது இந்த ஆவணப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

அதுகுறித்துப் பேசியவர், “அவர்கள் எங்களை படம் பிடித்து வந்த நேரத்தில் நாங்கள் அதை மிகவும் சாதாரணமாகத்தான் நினைத்தோம். இது இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காட்டிற்குள் நாங்கள் எப்போதும் போல எங்களது வேலையைப் பார்த்து வந்தோம். எங்களை இன்று உலகம் முழுக்க பார்க்கச் செய்திருக்கிறார்கள். இது அனைத்திற்கும் இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்,” என்று நெகிழ்கிறார் பொம்மன்.

ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்துப் பேசிய பொம்மன், “என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒஸ்கார் விருதைப் பெறும் என்று எதிர்பாக்கவே இல்லை. மிக மகிழ்ச்சியாக உள்ளது.

ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ரகுவும் அம்முவும் தற்போது எங்களுடன் இல்லை என்பதும் சிறிது வருத்தமாக உள்ளது,” என்றார்.

No posts found.
கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி

கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்த ரயில் பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான வீதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு நோக்கி வரும் சில ரயில்களில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி ரயிலை மீண்டும் தண்டவாளத்தில்
இணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

No posts found.
உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் இளைஞன் பலி
Posted in இலங்கை செய்திகள்

உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் இளைஞன் பலி

உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் இளைஞன் பலி

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் இளைஞன் பலி

குறித்த வயலில் சம்பவதினமான இன்று பிற்பகல் உழவு இயந்திரத்தால் உழும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வயலில் உழவு இயந்திரத்தின் பின்பக்க ரயர்கள் புதைந்ததையடுத்து உழவு இயந்திர

முன்பகுதி மேல் எழுந்து தலைகீழக கவிழ்ந்ததில் அவர் கீழ் விழுந்ததில் கலப்பையில் தலை அடிபட்டு படுகாயமடைந்ததையடுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரை பொலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
வெட்டுக் காயங்களுடன் மனித சடலம்
Posted in இலங்கை செய்திகள்

வெட்டுக் காயங்களுடன் மனித சடலம்

வெட்டுக் காயங்களுடன் மனித சடலம்

வெட்டுக் காயங்களுடன் நேற்று முன்தினம் (10) மீட்கப்பட்ட சடலத்தின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ருவன்வெல்ல – நிட்டம்புவ வீதியில் கொட்டங்கஸ்ஹந்திய பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

இவர் கொடகவெல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளதுடன் கொலைக்கான காரணம் அல்லது கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

No posts found.
16 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

16 இந்திய மீனவர்கள் கைது

16 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகை பட்டனத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டிய மீனவர்களே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் காரைநகர் கடற்பரப்பில் நான்கு மீனவர்ளும் பருத்தித் துறை கடற்பரப்பில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுடைய இரு படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் 4 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

No posts found.
வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம் - 5 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம் – 5 பேர் கைது

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம் – 5 பேர் கைது

வவுனியா, பூவரசன்குளம், மணியர்குளம் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பூவரசன்குளம், மணியர்குளம் குளக்கட்டின் அருகில் வெட்டு காயங்களுடன் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என்பவர் கடந்த 09 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பூவரசன்குளம் பொலிசார் குறித்த இளைஞருடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட 5 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும்,
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

No posts found.
4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு

4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் மரணம் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வவுனியா பொலிசார் நேற்று (11) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை (07) காலை தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 42 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரின் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை புதன்கிழமை (08) இரவு

மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. ஆனால் அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு

இதனையடுத்து, உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் முடிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும். அதன் முடிவுகள் வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும். குறித்த சம்பவம் தொடர்பில் சிசிரிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No posts found.
நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி
Posted in இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி

நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி

மேலும் நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர்.

அதற்கமைய, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் வழிமொழிந்தார்.

அதேபோன்று, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரன நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச வழிமொழிந்தார்.

நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி

இதேவேளை, வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாளக பண்டார கோட்டேகொட நியமிக்கப்பட்டார்.

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன அதனை வழிமொழிந்தார்.

மேலும், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தனித்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா வழிமொழிந்தார்.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வா ஆகியோர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

No posts found.
கடலில் மூழ்கும் அபாயம் - தலைநகரை மாற்றும் நாடு
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கும் அபாயம் – தலைநகரை மாற்றும் நாடு

கடலில் மூழ்கும் அபாயம் – தலைநகரை மாற்றும் நாடு

நிலநடுக்கம், ஜாவா கடலில் மூழ்கும் அபாயம் என பல அச்சுறுத்தல்கள் காரணமாக, தலைநகர் ஜகார்த்தாவை கைவிட்டுவிட்டு, இந்தோனேசிய தலைநகராக போர்னியோவை மாற்றும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, நெரிசல், காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜகதார்த்தாவுக்கு நிலநடுக்கம் மற்றும் கடலில் மூழ்கும் அபாயங்களும் காத்திருப்பதால் விரைவில் தலைநகர் என்ற அந்தஸ்திலிருந்து ஓய்வுபெறும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியா 2022 ஆம் ஆண்டு மத்தியிலேயே புதிய தலைநகரை கட்டமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டது.

கடலில் மூழ்கும் அபாயம் – தலைநகரை மாற்றும் நாடு

தற்போது, இந்தோனேசிய அரசானது, ஜகார்த்தாவை காலி செய்துகொண்டு போர்னியோ தீவை நோக்கி நகர்கிறது.

பசுமையான தீவுப் பகுதியை தலைநகராக மாற்றுவதற்கு ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். வனப்பகுதி அழிக்கப்பட்டு, வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

எனினும் தலைநகரை மாற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

ஜகார்த்தா வேகமாக கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், 2050 ஆம் ஆண்டுக்குள் நகரின் மூன்றில் ஒரு பங்கு கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் நிலத்தடி நீர் மற்றும் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No posts found.
போதையில் அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதி
Posted in இலங்கை செய்திகள்

போதையில் அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதி

போதையில் அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதி

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி கொடிகாமம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் இரண்டு மாடுகள் உயிரிழந்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம் பெற்ற தினம் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி மது போதையில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் அவர் தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக, மனைவி வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுத்ததற்கு அமைய, தொலைபேசியில் உரையாடிக்கொண்டு அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமையும் தெரியவந்துள்ளது

No posts found.
இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்

1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிச் வந்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 159 சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதுடன் அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் நீளமுள்ள கப்பல் தாய்லாந்தில் இருந்து வந்துள்ளதாகவும், கப்பல் இன்று இரவு துபாய்க்கு புறப்பட உள்ளதாகவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No posts found.
வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய தாய்
Posted in இலங்கை செய்திகள்

வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய தாய்

வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய தாய்

ராகம பிரதேசத்தில் வளர்ப்பு மகளை உடல்ரீதியாக சித்திரவதை செய்த பெண்ணொருவர் மார்ச் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராகம – குருகுலேவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்து 39 வயதுடைய குறித்த பெண், 17 வயதுடைய வளர்ப்பு மகளை தாக்கியுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் உயிரிழந்ததையடுத்து தந்தை மறுமணம் செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தாக்கியதாக கூறப்படும் பெண்ணுக்கு 09 வயதில் ஒரு பெண் பிள்ளை இருப்பதாகவும்,
தந்தை வெளிநாட்டில் தொழில்புரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.