Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு
நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.
இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம் மயானத்திற்கு அருகில் இருந்து பிரதீபா மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை மற்றும் ஜும்மா சந்தி வழியாக சங்கராஜ சுற்றுவட்டத்தின் ஊடாக பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது
மஹிந்த மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை
மஹிந்த மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை
2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மனு தொடர்பான அடிப்படை சமர்ப்பணங்களை பரிசீலித்த எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன் பின்னர், குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்ததுடன், சமூக செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்
வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்
தமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி இலங்கை திரும்பியவுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அறிவித்த போதிலும் இதுவரையில் நடைபெறவில்லை என சுகாதார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பை சூழவுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
மாணவர்களுக்கு பாடசாலை முக்கிய அறிவிப்பு
மாணவர்களுக்கு பாடசாலை முக்கிய அறிவிப்பு
மாணவர்களுக்கு பாடசாலை முக்கிய அறிவிப்பு ரத்துச்செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய
பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பரீட்சார்த்திகள் இரத்து செய்யப்பட்ட பரீட்சைக்கு தோற்றிய அதே பரீட்சை நிலையத்தில் புதிய வினாத்தாளுக்கு தோற்றினால், அனுமதி அட்டை தேவையில்லை என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உயர்தர விவசாய வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, வினாத்தாளை முழுமையாக ரத்து செய்ய பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி அந்த பாடத்தை மட்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி விசேட பரீட்சையாக நடத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 08.30 மணி முதல் 11.40 மணி வரையிலும், முதல் பகுதி பிற்பகல் 01 மணி முதல் 3 மணி வரையிலும் நடைபெறும்.
மேலதிக தகவல்களை பரீட்சை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
களனி நிர்வாக கட்டிடம் மாணவர்களால் முற்றுகை
களனி நிர்வாக கட்டிடம் மாணவர்களால் முற்றுகை
களனி பல்கலைக்கழகத்தில் சுமார் 350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று (29) இரவு பல்கலைக்கழகத்திற்கு அருகில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டு போராட்டத்தைக் கலைத்தனர்.
இந்த போராட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதி முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது
அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது
அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
“கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு என்ற வகையில், இந்த ஆண்டு விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்திக்கான இலக்கு நோக்கிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
2023 ஆம் ஆண்டில், நாட்டில் சிறு போகத்திலும் பெரும் போகத்திலும் உரங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி மானியங்களுக்காக சுமார் 22 பில்லியன் ரூபாவை செலவிட்டோம். அத்துடன் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 13 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது
அதன்படி 2022ஆம் ஆண்டு 8 மெட்ரிக் டொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் 2023ஆம் ஆண்டு அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை. நம் நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசியை இந்த நாட்டு மக்கள் வருடம் முழுவதும் உட்கொண்டார்கள் என்றே கூற வேண்டும். நெருக்கடியான நிலையிலும், அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த ஆண்டு அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஆண்டைப் போலவே வறட்சி மற்றும் வெள்ளத்தால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. வறட்சியால் 65,000 ஏக்கரும், கனமழையால் 100,000 ஏக்கரும் சேதமடைந்துள்ளன. வறட்சியினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. சுமார் 700 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழையால் பாரிய அளவில் மரக்கறிப் பயிர்கள் அழிந்ததே மரக்கறி விலை உயர்வுக்கு காரணமாகும். சில விவசாயிகள் ஒரே விவசாய நிலத்தில் பலமுறை காய்கறி விதைகளை பயிரிட்டனர். ஆனால் அவை மழையால் அழிந்துவிட்டன. ஆனால், விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கிய “நெட் ஹவுஸ்’களில் பயிர் செய்தததால், ஓரளவுக்கு மரக்கறிகள் சந்தைக்கு வந்தன.
இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும். 2024 ஆம் ஆண்டில், நமது தேசிய நுகர்வு இலக்கை அடைய நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய 4 வகையான பயிர்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏனைய பயிர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு, இந்த 4 வகைப் பயிர்களை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம்.
பெரிய வெங்காய பயிர்ச் செய்கையுடன், சின்ன வெங்காய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. எனவே, இந்த ஆண்டு மீண்டும் சின்ன வெங்காய பயர்ச் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, மொணராகலை தெலுல்ல, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் மொரகொல்லாகம, நியந்தகம ஆகிய இடங்களில் சின்ன வெங்காயச் செய்கையை பிரபலப்படுத்த தீர்மானித்துள்ளோம்.
இதற்கு இணையாக பெருந்தோட்டத் துறையில் பல முக்கிய தீர்மானங்களை இவ்வருடம் நடைமுறைப்படுத்துகின்றோம். அதன் முதல் கட்டத்தை கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளோம். அதன்படி, தேயிலை கொழுந்துகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக பி 60 கொள்கை அமுல்படுத்தப்பட்டது.
மேலும், தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு இரண்டு அரசாங்க உர நிறுவனங்களின் மூலம் உரங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பிக்க உள்ளோம். இதன் கீழ் தேயிலைக்காக தயாரிக்கப்பட்ட விசேட உரம், மானிய விலையில் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
தேயிலைப் பயிர்ச்செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்காக, அனைத்து தேயிலை உரங்களையும் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களான கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் லங்கா உர நிறுவனம் மூலம் உற்பத்தி செய்ய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாவனல்லையில் தீ விபத்து – 30 கடைகள் நாசம்
மாவனல்லையில் தீ விபத்து – 30 கடைகள் நாசம்
மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
விரைந்து செயல்பட்ட பொலிஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பழங்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் இந்த தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்பார்.
இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவிஉயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்
புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்
24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் 24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 836 சந்தேக நபர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 142 கிராம் ஹெரோயின், 95 கிராம் ஐஸ் மற்றும் 1,650 போதை மாத்திரைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்
முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் உறவினர்களுடன் புதுமாத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று (28) நீராடச் சென்ற போதே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு 10 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார்.
கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது
மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது
.சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுடைய மொரவக, ருக்கஹவில, அலுஹ்தாராம, இமதுவ மற்றும் கிடலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதல் ,இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கை வவுனியா வலய பணிமனை அருகில் இடம்பெற்ற பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதியதில் ஏற்படட விபத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளனர் .
மோட்டார் சைக்கிள் பேரூந்து மோதி தள்ளியதில் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
வவுனியாவில் இவ்விதமான பேரூந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்,மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கலே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் .
மேலும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஒரு கப்பலில் 7 இலங்கை மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 இலங்கை மீனவர்களும் இருந்தனர் ,அனைவரும் மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து
இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து
இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்திற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுக்களை கலைக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க கராத்தே டோ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக நடத்துவதற்கு இடைக்கால குழுவை நியமித்தார்.
இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து
இது தொடர்பான இடைநிறுத்தத்தை ஏற்படுத்திய வர்த்தமானியை தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் இரத்துச் செய்து, கராத்தே டோ சம்மேளனத்தின் விடயங்கள் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ரொஷான் ரணசிங்க கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி இடைக்கால குழுவொன்றை நியமித்திருந்தார்.
தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் இரத்துச் செய்து சங்கத்தின் செயற்பாடுகளை முன்னைய அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தியதில் 803 பேர் கைது செய்யப்பட்டனர் .விசேட பொலிஸ் நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .
யுக்திய நடவடிக்கையின் தொடர்ச்சியே இந்த கைது நடவடிக்கை என பொலிசார் தெரிவித்துள்ளனர் .கைதானவர்கள் பலர் தேட படும் குற்றவாளிகளாக காணப்பட்டனர் .
யாவரும் நீதிமன்றில் பரப்படுத்த சிறை தணடனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
போதைவஸ்து ஒழிப்பு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,தமிழ் தேசிய வாதிகளிற்கு தெரியாது என கூறும் சுமந்திரன் புலம்பல்கள் இது என்றே மக்கள் .கூறுகிறார்கள்
2009 ஆம் ஆண்டு தமிழர்கள் அழிக்க பட்டதன் பின்னர் ,அதன் பின்னர் ஆண்ட ஆளும் கட்சிகளின் உயிர் நாடியாக அங்கம் வகித்த சுமந்திரன் ,தமிழ் தேசிய விடுதலை பெற்று கொடுக்கவில்லை .
தமிழன் அழிக்க பட்ட 14 வருடங்களில் தமிழர்களுக்கு இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை கூற வக்கற்ற சுமந்திரன், தானே தமிழர்களின் தலைவனாக மகுடம் சூட முனைகிறார் .
சட்டத்தை வைத்து அரசியல்வாதிகளை உள்ளக ரீதியாக மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபடுகிறார் , இவ்வாறான குற்ற சாட்டுக்களை சமுக வலைத்தளங்களில் முன் வைக்க படுகிறது
சுமந்திரன் தமிழர்கள் நேசிக்கிறார்கள் என்றால் கனடாவில் கூழ் முட்டை அடிவாங்கி ஓடியது ஏன் ..?
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
சாணக்கியன் சுமந்திரன் ஆகியோரை மக்கள் விரட்டியடித்தனர் .தனது பித்தலாட்டத்தை நிரப்பும் கூழ்முட்டையாக சுமந்திரன் உள்ளதை அந்த கூழ் முட்டையடி விவரங்கள் காணபடுகிறது
வந்திருந்த நாடுகளில் வந்திருந்து தமிழர்களை மிரட்டும் நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டார் .
இது தொடர்பாக பலமுறை பேட்டி காண முற்பட்டு அழைத்த பொழுது அவர் அழைப்புக்கு பதில் தரவில்லை .
வாங்க சார் எமது அழைப்புக்கு பதில் தாருங்கள் தமிழ் தேசியம் முதல் பல விடயங்கள் வரை பேசுவோம் .
உப்பு சப்பற்ற பேச்சுக்களைபேசி காலத்தை கடத்தி ஏமாற்றும் இந்த பித்தலாட்ட நாடகத்தை சுமந்திரன் நிறுத்த வேண்டும் .
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி சட்டத்தரணியாக உள்ள இவர் தமிழர்கள் தேசியம் பேசுகிறாராம் .
இப்பொழுது ஸ்ரீதரன் ஆட்சியை ஏற்க முடியாது அவருக்கு முட்டு கட்டை போட்டு குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
பொது மக்கள் அரசியல் கட்சியாக பரிணாமம் பெற்றுள்ள இவர் மக்கள் விமர்சனகள் மாற்று கருத்துக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் .
அதைவிடுத்து தனது அதிர்வு குழுக்கள் ஊடக பேசுவதை நிறுத்தி எம்மோடு பேசுங்கள் கேட்க நிறைய இருக்கு மிஸ்ட்டர் சுமந்திரன் .
தொடராக மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி நிலையான் அரசியலை நடத்துங்கள் .
சிங்கள ஏயன்சியாக உள்ள நீங்கள் ஆண்ட சிங்க முகமூடியை கழற்றி எறிந்து விட்டு முதலில், மனிதனாக மனித பண்புடன் வாழ முற்படுங்கள் மிஸ்டர் சுமந்திரன் .
புலிகள் காலத்தில் நீங்கள் எங்கு இருந்தீர்கள் ,கதிர்காமர் உங்கள் மாமா என்கின்ற விடயத்தை கூற மறைப்பது ஏன் என்பதை தெரிவியுங்கள் …?
கதிர்காமர் என் மாமா என்பதை நீங்கள் ஏற்கவிளையா..? அல்லது அது பொய்யா ?அதனையும் பகிரங்க வெளியில் பேசலாமே அப்போது நீங்கள் யார் என்பது மக்களுக்கு தெளிவாக புரியும் .
Grid
கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
கோடி மோசடி பணம் திருட்டு அம்பலம் ,500 கோடி கொள்ளையடித்த தம்பதிகள் கைதுசெய்ய பட்டுள்ளனர் .
பிரமிட் திட்டத்தின் கீழ் இந்த மோசடியில் தம்பதிகள் ஈடுபட்டனர் என குற்றம் சாட்ட பட்டுள்ளது .
மோசடி பணம் கொள்ளையில் ஈடுபட்ட தம்பதிகள் மறைந்திருந்த நிலையில் இவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இந்த மோசடி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்ட நிலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு
வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு
வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் என சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் ,தலைவராக பதவி ஏற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்து தமிழர் விடுதலையின் முக்கியதத்துவத்தை எடுத்துரைத்தார் .
எமக்கு வடகிழக்கு இணைந்த தாயாக பகுதியே தமிழருக்கு அதிகம் பொருந்திய ஒன்றாக காணப்படும் என தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்து, அந்த நிர்வாக அலகை கடை பிடித்து வந்தனர் .
அவ்வாறான நிலையில் ஒன்றிணைந்த இலங்கைக்குள் ,ஒன்றித்து வாழும் சம்ஸடி முறையிலான அதிகாரம் ,தமிழருக்கும் வேண்டும் என சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார் .
தமிழருக்கு வடகிழக்கு இணைந்த தீர்வை யார் தருகிறார்களோ அவர்களுக்கு எமது ஆதரவு வழங்க படும் என ,சிவஞானம் சிறிதரன் தெரிவித்து ,இப்பொழுதே சிங்கள கட்சிகளுக்கு போடு ஒன்றை போட்டுள்ளார் .
விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன
விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன
விபத்துக்கள் அதிகம் சாலைகளில் ஏற்பட சாரதிகளே கரணம் என பந்துல குணவர்தனதெரிவித்தார் ,இவ்வாறான விபத்துகளினால் சாரதிகள் இறப்பதுடன் காயமடைந்து வருவதாக பந்துல குணவர்தன கவலை வெளியிட்டார் .
வீதி விபத்துக்களை தடுக்க பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,ஆண்டு தோறும் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .
கல்வி முறையில் இருந்து வீதி போக்குவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்தினால் மட்டுமே இந்த விபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என தெரிவிக்க படுகிறது .









































