Author: நலன் விரும்பி
முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்- அரசு அறிவிப்பு
முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்- அரசு அறிவிப்பு
முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை மத்தியமுகாம்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நேற்று(6) காலை முதல் வீதியால் வருவோர்
இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.
முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள் எனவும்
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள் வாகன உரிமையாளர்கள் பஸ்களில் பயணிப்பவர்கள் சுகாதார
நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு
யாழ்ப்பாணம், தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு
வட மேல் மாகாணத்தின் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரையில் மூடுமாறு வட மேல் மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி
நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி உட்பட துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திலேயே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களை நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது
12 பேர் கழுத்துவெட்டி படுகொலை- உலகை உலுப்பிய பயங்கரம்
12 பேர் கழுத்துவெட்டி படுகொலை- உலகை உலுப்பிய பயங்கரம்
மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகம்.
இந்த கும்பல்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுவது அங்கு வெகுசாதாரணம்
. இந்தநிலையில் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் வில்லா டி ரமோஷ் என்கிற
நகரில் உள்ள சாலையில் 2 வேன்கள் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தன.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வேன்களை சோதனையிட்டபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
2 வேன்களிலும் தலா 6 பிணங்கள் கிடந்தன. 2 பெண்கள் உள்பட 12 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.
அவர்கள் அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அமெரிக்க முப்படை தலைமை தளபதிக்கு கொரனோ
அமெரிக்க முப்படை தலைமை தளபதிக்கு கொரனோ
அமெரிக்க கடலோர காவல்ப்படை துணைதளபதிக்கு கொரோனா உறுதியானதையடுத்து அந்நாட்டின் முப்படைகளின் தலைமை
தளபதி உள்பட பாதுகாப்புபடையின் முக்கிய தலைவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
கடலோர காவல்ப்படை துணைதளபதிக்கு கொரோனா – தனிமைப்படுத்திக்கொண்டார் அமெரிக்க முப்படை தலைமை தளபதி
முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வெள்ளைமாளிகையை தொடர்ந்து தற்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையிடமான பென்டகனிலும் கொரோனா வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.
வெள்ளைமாளிகையில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவே
அதிபர், உள்பட முக்கிய அதிகாரிகளுக்கு கொரோனா பரவுவது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி வெள்ளைமாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க கடலோர காவல்ப்படை
துணைதளபதியான சார்லஸ் ரே பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடமான பென்டகனில் நடந்த நிகழ்ச்சிகளிலும் சார்லஸ் பங்கேற்றார்.
பென்டகன் நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முப்படை தலைமை தளபதி
ஜெனரல் மார்க் மில்லி, முப்படை துணைதளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அந்நாட்டின்
பாதுகாப்புத்துறையின் அனைத்து தலைமை தளபதிகளும், மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்பிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், வெள்ளைமாளிகை நிகழ்ச்சியில்
பங்கேற்ற கடலோர காவல்ப்படை துணைதளபதி சாரலசுக்கு கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த
பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, பென்டகனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க முப்படை தலைமை தளபதிஹ் ஜெனரல் மார்க் மில்லி,
முப்படை துணைதளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் வந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்படை தலைமை தளபதி உள்பட அமெரிக்க
பாதுகாப்புத்துறையின் தளபதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடத்திலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அதிகாரிகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
முடங்கிய இலங்கை – ஊரடங்கு அமூல் – பீதியில் மக்கள்
முடங்கிய இலங்கை – ஊரடங்கு அமூல் – பீதியில் மக்கள்
கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீண்டும்
அறிவிக்கும்வரையில் இன்று காலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு
வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 1897 ஆம் ஆண்டு இலக்கம்
03 இன் கீழான தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகத்தினால் பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய 2020.10.06 மாலை 6.00 மணி தொடக்கம்
அமுலில் உள்ள வகையில் மறு அறிவித்தல் வரையில் கீழ் கண்ட பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
கம்பஹா நிர்வாக மாவட்டத்தில் கம்பஹா பொலிஸ் எல்லைப் பகுதி
கீழ் குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
- திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவு
- மினுவாங்கொட பொலிஸ் பிரிவு
- வேயாங்கொட பொலிஸ் பிரிவு
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும். இதேபோன்று
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் இந்த பிரதேசத்திற்குள் பிரவேசித்தல்,
அதேபோன்று பிரதேசத்தில் இருந்து வெளியேறுதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இந்த பிரதேசத்தின் ஊடாக பயணிக்க முடிந்த போதிலும் இந்த
பகுதிகளில் பஸ்களை நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்குதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை
ஏற்றுவதற்காகவோ அல்லது இறக்குவதற்காகவோ ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைபவங்கள், ஊர்வலங்கள், களியாட்டங்கள் முதலானவற்றிற்கு தடை
வைபவங்கள், ஊர்வலங்கள், களியாட்டங்கள் முதலானவற்றிற்கு தடை
மினுவாங்கொடை பிரதேசத்தில் கொவிட் 19 நோய்த் தொற்று பரவலை
அடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மகாநாடு, உரைகள்,
கண்காட்சி இசை நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், ஊர்வலங்கள்,
பெரகர வீதி உலா மற்றும் அத்தியாவசியமல்லாத கூட்டங்கள் போன்றவற்றை
நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர்
நாயகத்தினால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு சுகாதார அமைச்சின் இணையத்தளத்தை
பயன்படுத்துமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா
வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் (6 ஆம் திகதி) இரவு 9.40 மணியளவில் திவுலுப்பிட்டிய
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவர்கள் அனைவரும்
மினுவங்கொடை தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். என்றும்
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 76பேர் பலி – 14,542 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 76பேர் பலி – 14,542 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி எழுபத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர், மேலும் 14,542 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் சுமார் வழமைக்கு மாறாக ஐரண்டாயிரம் பேர் அதிகமாக பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் வாரம் முதல் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேர் பாதிக்க
படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
,இவ்வாறு நோயின் தாக்குதல் அதிகரித்தால் முற்று முழுதாக பிரிட்டன்
முடங்கும் நிலைக்கு செல்லும் என அபாயம் வெளியிட பட்டுள்ளது
சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டனில் 250 பேருடன் இடம்பெற்ற இந்தியர் திருமணம்
சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டனில் 250 பேருடன் இடம்பெற்ற இந்தியர் திருமணம்
பிரிட்டனில் கொரனோ நோயின் காரணாமாக நிகழ்வுகளில் பதின் ஐந்துபேருக்கு
மேல் கலந்து கொள்ள கூடாது என தடை சட்டம் விதிக்க பட்டுள்ளது
அவ்வாறு மீறுபவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகிறது
ஆனால் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை 250 பேரை
கூட்டி மிக பிரமாண்டமாக செய்துள்ளதுடன் ,அங்கு அவர்களது
நிகழ்வை பெரும் திரையில் காண்பித்துள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் ,.சட்ட விதிகளை
மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் தண்டமும் அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இத்துடன் இவர்கள் திருமணம் உலக புகழ் பெற்ற ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது




சர்ச்சையை ஏற்படுத்திய
லண்டனில் மனைவி பிள்ளையை வெட்டி கொன்ற தமிழர்
லண்டனில் மனைவி பிள்ளையை வெட்டி கொன்ற தமிழர்
இன்று லண்டன் பிரெண்டபோர்ட .பகுதியில் தமிழர் ஒருவர் தனது 36 வயது மனைவி
மற்றும் மூன்று வயது மகனை கத்தியால் கோரமாக குத்தி படுகொலை
செய்து ,தன்னை தானும் குத்தி தற்கொலை செய்துள்ளார்,
தற்கொலை செய்து கொண்ட கணவர் 42 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
இந்த கொலைக்கான உடனடி கரணம் தெரியவரவில்லை ,இரத்த வெள்ளத்தில்
கிடந்த சடலங்கள் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
மனநோயின் தாக்குதல் அதிகரிப்பு காரணமாக இவ்வாறான படுகொலை
சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது,இந்த வருடத்தில்
இடம்பெற்ற நூறாவது கொலையாக இவர்களது படுகொலை சம்பவம் பதிய பெற்றுள்ளது என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்
அயலவர்களோ பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் ,அழகான குழந்தை ,
சிரித்த முகத்துடன் செல்வார்கள் ,அவர்களுக்கு நடந்துள்ள இந்த செயல்
தம்மை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்

லண்டன் லூசியம் பகுதியில் சிதறிய தமிழர் கார் – வீடியோ
லண்டன் லூசியம் பகுதியில் சிதறிய தமிழர் கார் – வீடியோ
சற்று முன்னர் லண்டன் லூசியம் ,சிட்னம் சயன்ஸ் பெரி முன்பாக ஆடம்பர
அவுடி கார் ஒன்று வேகமாக வந்த பரா ஊர்தியில் (லொறி ) யில் மோதி
சிதறியது ,இதில் அதில் பயணித்தவர்கள் உரசல் காயங்களுடன் தப்பித்து கொண்டனர் .
இந்த விபத்தினால் அவ்வழி சாலை போக்குவரத்து சற்று நெரிசல் ஏற்பட்டது .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதுடன் ,அந்த சாலைவழி போக்குவரத்து நெரிசல் தவிர்க்க பட்டுள்ளது
குறித்த காணொளியானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 52 பேர் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 52 பேர் கைது
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள திவுலபிட்டி, மினுவாங்கொடை,
வியாங்கொடை பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 52 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரணில் மீது குண்டு வெடிப்பு விசாரணை
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்
விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
வாக்குமூலமளிக்க வருமாறு அவருக்கு கடந்த 22ஆம் திகதி ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று(06) முன்னிலையான ரணில் விக்கிரமசிங்க ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவரை எதிர்வரும் 13ஆம் திகதி ஆணைக்குழுவில் மீண்டும்ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல்
தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (05) முன்னிலையாகியிருந்தார்.
அவரை மீண்டும் 12 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை – கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 321
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை – கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 321
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும்
220 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று அரசாங்க தகவல்
திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இந்த ஆடைத் தொழிற்சாலையில் மொத்தமாக 321 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்..
உயர்தர பரீட்சை குறித்து நாளை இறுதி முடிவு
உயர்தர பரீட்சை குறித்து நாளை இறுதி முடிவு
கொவிட் – 19 தொடர்பான தற்போதைய நிலைமைகளை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் கிடைக்கவுள்ள பி.சி.ஆர் பிரிசோதனைக்கு அமைவாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்
என்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் தெரிவித்தார்.
இதேபோன்று இந்த மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி தராதர உயர்தர
பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
பரீட்சைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதுவரையில் கிடைத்துள்ள
பி.சி.ஆர் பரிசோதனை பெறுபேறுகளுக்கு அமைவாக 321 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்படிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான பெறுபேற்று அறிக்கை நாளை கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு
இன்று (6) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இதன்போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்
பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு
பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு
பொலீஸ் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோணா அச்ச நிலைமை தொடர்பில்
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சர் தலைமையிலான யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்ட போதே பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்தார்
.யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என்றும் அவர் இதன்போது கூறினார்.
பிரான்சில் கொரனோ – நிகழ்வுகள் நடத்த தடை – பார்கள் பூட்ட உத்தரவு
பிரான்சில் கொரனோ – நிகழ்வுகள் நடத்த தடை – பார்கள் பூட்ட உத்தரவு
பிரானில் மீள வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து
தற்போது நிகழ்வுகள் நடத்த தடை விதிக்க பட்டுள்ளது ,மக்கள் ஒன்று
கூடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,மேலும் பார்களில் விசேட நிகழ்வுகள் நடத்தவும்
இன்று முதல் தடைகள் விதிக்க படுகிறது என அரசு அறிவித்துள்ளதும் .
நோயின் தாக்கம் அதிகரித்தால் மேலும் தடை உத்தரவுகள் இறுக்கம் பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது ,
பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள் ,தண்ட பணம் அறவீடு அதிகரிக்க உள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் பாடசாலையில் உணவு உட்கொண்ட 13 சிறார்கள் வைத்தியசாலையில்
பிரிட்டனில் பாடசாலையில் உணவு உட்கொண்ட 13 சிறார்கள் வைத்தியசாலையில்
பிரிட்டன் La Sainte Union Catholic பாடசாலையில் காலை உணவை உட்கொண்ட 13 சிறுவர்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளன
இவர்கள்
உட்கொண்ட சுவீட் நச்சு தன்மையடைந்ததினால் இவ்வாறு சுகவீனம் அடைந்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டனில் அதிகரித்துள்ள கொரனோ தாக்கம் -22,961 பேர் பாதிப்பு
பிரிட்டனில் அதிகரித்துள்ள கொரனோ தாக்கம் -22,961 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸின்
தாக்குதலினால் சிக்கி 22,961 ஒரே நாளில் கடந்த தினம் பாதிக்க பட்டுள்ளனர் ,
இம்மாத இறுதியில் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேர் பாதிக்க படுவார்கள்
என எச்சரிக்கை பட்டு இருந்த நிலையில் இந்த தோற்று அதிகரித்துள்ளது ,
எதிர்வரும் மூன்று வாரத்திற்குள் நாடு முழு லொக்கடவுன் நிலைக்கு செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
காலநிலை சீற்றத்தின் காரணமா இந்த நோயின் பரவல் அதிகரிப்பு தீவிரம்
பெற்று வருவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது ,மக்களே எச்சரிக்கை ம், பொருட்களை
கொள்வனவு செய்து வைத்து கொள்ளுங்கள் ,விரைவில் அடித்து பூட்டும் நிலை ஆரம்ப மாகலாம்
பிரான்ஸ்,இத்தாலி ,எல்லையில் மிதக்கும் மனித சடலங்கள்
இத்தாலியில் இடிந்து வீழ்ந்த 100வீடுகள் – பிரான்ஸ்,இத்தாலி
,எல்லையில் மிதக்கும் மனித சடலங்கள்
இத்தாலி பிரான்ஸ் எல்லையில் ஏற்பட்ட பாரிய வெள்ள பெருக்கு
மண்சரிவில் சிக்கி நூறு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன
இதில் ஏழுக்கு மேற்பட்ட சடலங்கள் குறித்த இரு நாட்டு எல்லையில் காண படுகின்றன
மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க
படுகிறது ,உயிர் சேதங்கள் அதிகரிக்கலாம் என நம்ப படுகிறது
,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன








