Author: நிருபர் காவலன்
ஐ.எம்.எப். பணியாளர் குழு நாட்டுக்கு விஜயம்
ஐ.எம்.எப். பணியாளர் குழு நாட்டுக்கு விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறது.
குறித்த குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் பிற்பகுதியின், முதலாவது மீளாய்வு பணிக்கு முன்னதாக, இலங்கையுடனான வழமையான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது
ஜிகாத் 300 ஏவுகணை தாக்குதல் எரியும் இஸ்ரேல்
ஜிகாத் 300 ஏவுகணை தாக்குதல் எரியும் இஸ்ரேல்,|
வெடித்த போலீஸ் வாகனம் பலர் காயம்
வெடித்த போலீஸ் வாகனம் பலர் காயம்
சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் உள்ள காவல்துறை நிலையத்தில்
காவல்துறை வாகனம் ஒன்று திடீரென வெடித்து சிதறியது .
இதன் பொழுது ஐந்து போலீசார் காயமடைந்தும் ,
வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது ,
அருகில் உள்ள கட்டடங்களும் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது
இந்த குண்டு வெடிப்பு எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடர்பிலான,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை போலீசாராருக்கு ஏற்படுத்தியுள்ளது
மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை
மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர் பகுதியில் உள்ள ஏ.ரி.எம்.இயந்திரத்தில் பணத்தினை எடுத்துவிட்டு வீதியால் நடந்து சென்ற பெண்ணின் பணப்பையினை உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (09) பதிவாகியுள்ளது.
பணத்தை பறிகொடுத்த குரவில் பகுதியினை சேர்ந்த குறித்த பெண் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
தன்னிடம் இருந்த பணம் உட்பட 2 இலட்சத்து 80,000 ரூபாய் வரையான பணத்தினை கைப்பையில் கொண்டு சென்றவேளை இந்த கொள்ளை சபம்வம் இடம்பெற்றுள்ளது.
கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை
கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை
மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி
மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி
கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவி ஒருவர் நேற்று (9) பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் குறித்த மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி
குறித்த மாணவி ஒரு மாணவர் தலைவர் எனவும், கட்டுகஸ்தோட்டை – களுகமுவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய CT ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதன் பின்னர் மேலதிக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு
ரஷ்ய இராணுவம் உக்கிரைன் படைகளிற்கு இடையில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன .
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மோதலில் ,
690 ரஷ்ய வீர்கள் பலியாகியும் , 2 டாங்கிகள் மற்றும் 6 விமானங்கள்,
சுட்டு வீழ்த்த பட்டுளதாக உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
மேலும் பக்மூட் பகுதியில் ரஷ்ய பீரங்கி படைகளின் கட்டு பாட்டில்,
இருந்த பகுதிகளில் ஒன்றை
மீட்டெடு அங்கு தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகள் மீட்க பட்டுள்ளதாக,
உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன .
தொடர்ந்து பக் மூட் பகுதியில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த குழந்தை
கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த குழந்தை
இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ். இளவாலை வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.
நேற்று (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குழந்தையின் சடலம், உறவினர்களிடம் இன்று (10) கையளிக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
டொனால்ட் டிரம்புக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
டொனால்ட் டிரம்புக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும் 5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் ஈ ஜீன் கரோல் என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நியுயோர்க் நகரத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் நடுவர் மன்ற விவாதத்தின் முதல் நாளில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது பங்கேற்காத டொனால்ட் டிரம்ப், கரோலை ஒருபோதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அவரை அறிந்திருக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த தீர்ப்பானது அவமானம் என்று தமது சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் மிரட்டும் ஆயுதம் பதட்டத்தில் இஸ்ரேல்
ஈரானின் மிரட்டும் ஆயுதம் பதட்டத்தில் இஸ்ரேல்
ஈரானின் புதிய மிரட்டும் ஆயுதம் இஸ்ரேல்
அமெரிக்காவை பதற வைத்துள்ளது ,உலகத்தில் சக்தி வாய்ந்த ஆயுதமாக இது மாற்றம் .
ஈரானின் மிரட்டும் ஆயுதம் பதட்டத்தில் இஸ்ரேல்
இஸ்ரேல் அழியும் காமாஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் அழியும் காமாஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் அழியும் காமாஸ் ஜிகாத் அறிவுப்பு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
தொடரும் யுத்தம் படத்த்தில் இஸ்ரேல் பலஸ்தீனம் .
இஸ்ரேல் அழியும் காமாஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
எரியும் பக்மூட் அடித்து நொறுக்கும் ரஷ்ய படைகள்
எரியும் பக்மூட் அடித்து நொறுக்கும் ரஷ்ய படைகள்
ரஷ்ய இராணுவம் பக்மூட் இறுதி வாயிலை மீட்கும்
கடும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை
மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
கடந்த 24 மணித்தியாத்தில் ,பகமூட்டின் நான்கு முனைகள் ஊடக முப்பது ,
ஊடுறுப்பு முன்னேற்ற நகர்வை மேற்கொண்டனர் .
இதில் கணிசமான முன்னேற்றத்தில் ரஷ்ய இராணுவம் ,
வெற்றியை கண்டுள்ளதாக தெரியவருகிறது .
லைமன், பாக்முட், அவ்திவ்கா மற்றும் மரின்கா முனைகளில் ,
தொடர்ந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
எரியும் பக்மூட் அடித்து நொறுக்கும் ரஷ்ய படைகள்
இன்று எதிர் பாராத திடீர் ஆக்கிரோச தாக்குதலைகளை ரஷ்யா
இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
இவ்வாறு நீண்டு சென்றால் பக் மூட் முற்றாக ரஷ்ய ,
படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .
தாம் பின் வாங்கிய பகுதிகள் யாவற்றையும் மீளவும் மீட்கும்
அதிரடி தாக்குதல்களை ரஷ்ய படைகள் நடத்த தயாராகி வருகின்றனர் .
அதனை தடுக்கும் அணைத்து நகர்விலும் ,
அமெரிக்கா நேட்டோ நாடுகள் ஈடுபட்டு
வருகின்றன .
மேலதிக புதிய ஏவுகணைகள் , டாங்கிகள் என்பனவற்றை வழங்க ,
அமெரிக்கா தீவிர கவனம்
செலுத்தி வருகிறது .
இதன் மூலம் உக்ரைனில் போரை நடத்துவது ,
அமெரிக்கா மேற்குலக நாடுகள் தான் என்பது
மீளவும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது .
இம்ரான் கான் கைது வெடித்த மக்கள் போராட்டம்
இம்ரான் கான் கைது வெடித்த மக்கள் போராட்டம்
பாகிஸ்தானை முன்னாள் அதிபர் இம்ரான் கான் ,
லஞ்ச ஊழல் குற்ற சாட்டில் நீதிமன்ற வளாகத்திற்குள்
வைத்து கைது செய்ய பட்டுள்ளார் .
இவர் பயணித்த கார் கண்ணாடிகளை உடைத்த போலீசார் ,
அதற்குள் இருந்த இம்ரான் கானை இழுத்து சென்றனர் .
இம்ரான் கான் கைது வெடித்த மக்கள் போராட்டம்
மேலும் இவருடன் பயணித்த சட்ட தரணியில் மீதும் தாக்குதல்,
நடத்த பட்டுள்ளதுடன் ,இம்ரான் கான் பாதுகாவலர்கள் மீதும் ,
வன்முறை தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டுள்ளன .
இம்ரான் கான் மீதான கைது சட்டவிரோதமானது என
ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
நாடு பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில் ,
பழிவாங்கும் அரசியலை ஆளும் அரசு நடத்தி கொண்டு இருக்கிறது .
கோட்டபாஜா ராஜபக்ஸவை போலவே,
ஆளும் அதிபர் விரட்டியடிக்க படுவார்கள் என உலகளாவிய ,
பாகிஸ்தான் மக்கள் முழக்கம் இட்டு வருகின்றனர் .
இஸ்ரேல் அழியும் காமாஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் அழியும் காமாஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் அழியும் காமாஸ் ஜிகாத் அறிவுப்பு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
தொடரும் யுத்தம் படத்த்தில் இஸ்ரேல் பலஸ்தீனம் .
டைனமைட் வெடி 07 மீனவர்களுக்கு விளக்கமறியல்
டைனமைட் வெடி 07 மீனவர்களுக்கு விளக்கமறியல்
மன்னார்– வங்காலை கடற்பரப்பில் வைத்து டைனமைட்வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த 07 மீனவர்களையும், எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான், நேற்று (09) உத்தரவிட்டார்.
மன்னார் வங்காலை கடற்பரப்பில் வைத்து டைனமைட் வெடி பொருட்களுடன் மன்னாரைச் சேர்ந்த 7 மீனவர்களை திங்கட்கிழமை (8) வங்காலை பிரதேச கடற்படை கைது செய்து மன்னார் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் ஊடாக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
டைனமைட் வெடி 07 மீனவர்களுக்கு விளக்கமறியல்
இதன்போது மீனவர்களிடம் இருந்து இருந்து டைனமைட் வெடி பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.
மீன்கள் அற்ற நிலையில் வெடி பொருட்கள் மட்டும் உடமையில் இருந்ததால் வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வங்காலை பொலிஸார் விசாரணையின் பின் குறித்த மீனவர்களை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
திருகோணமலை மினி சூறாவளி
திருகோணமலை மினி சூறாவளி
திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று (09) மாலை வீசிய மினி சூறாவளியுடள் கூடிய மழையினால் பல்வேறு வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பட்டிமேடு, புதுக்குடியிருப்பு, குன்சப்பந் திடல் உள்ளிட்ட பல வீடுகளும் பயன்தரு மரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மினி சூறாவளி
அத்துடன், இரு மணித்தியாலயங்களுக்கும் அதிகமான நேரம் மின் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
மின் கம்பமும் சேதமாக்கப்பட்டதன் காரணத்தால் மின் தடைப்பட்டிருந்து. இந்நிலை, மின்சார சபை மூலமாக சீர் செய்யப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியது.
தென்னை, வாழை மற்றும் பலா உள்ளிட்ட மரங்கள் முறிந்து வீட்டுக்கூரை உட்பட வீதியோரங்களிலும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த காற்றுடன் கூடிய மழையினால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன
முட்டை விலை மேலும் குறையும்
முட்டை விலை மேலும் குறையும்
முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
ஒரு வெள்ளை முட்டை மொத்த விலையில் 40 ரூபாய்க்கும், பழுப்பு முட்டை 41 ரூபாய்க்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பேக்கரிகளில் இருந்து 44-45 ரூபாய்க்கு முட்டை கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
வெள்ளை முட்டை ஒன்றிற்கு 44 ரூபாவும், பழுப்பு நிற முட்டை ஒன்றிற்கு 46 ரூபாவும் நுகர்வோர் அதிகாரசபை கட்டுப்பாட்டு விலையை பிறப்பித்துள்ள போதிலும், இம்மாத இறுதிக்குள் முட்டையின் விலை மேலும் குறைவடையும் எனவும், குறிப்பிட்டுள்ளார்
2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெரிய தந்தை கைது
2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெரிய தந்தை கைது
இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, அவ்விரு சிறுமிகளின் பெரிய தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட பகுதியில் 12 மற்றும் 13 வயதான இரண்டு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிக் கைது செய்யப்பட்ட பெரிய தந்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போதே ஹட்டன் நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரண்டு சிறுமிகளின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இவர்களின் தந்தை மறுமணம் முடித்துள்ளார் இந்த இரண்டு சிறுமிகளும் பெரிதந்தையின் பாராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர்.
2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெரிய தந்தை கைது
பெரிய தந்தையானால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி வந்தமை தொடர்பில் இவ்விரு சிறுமிகளும் தனது வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளனர். அதனை அடுத்து பாடசாலையின் நிர்வாகத்தின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையினை பெற்றுகொள்வதற்காக டிக்கோயா -கிளங்கன் ஆதாரவைத்திய சாலையில் இவ்விரு சிறுமிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த நோர்வூட் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்
வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை
வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை
மழையுடனான வானிலையுடன் வீதிகளின் தன்மைகளை புரிந்துகொண்டு வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக அதிவேக வீதிகள் மற்றும் மலையக வீதிகளில் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், கற்பாறைகள் சரிந்து வீழ்தல் மற்றும் மண்சரிவு ஏற்படலாம் என்பதால் மலையக வீதிகளில் அவதானத்துடன் வாகங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யா விமானி நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு
ரஷ்யா விமானி நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு
உக்ரைன் போர் முனையில் தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய உலங்குவானூர்தி
உக்காரன் படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டது .
அவ்வாறு சுட்டு வீழ்த்த பட்ட வானூர்தியின் விமானி பாராசூட் மூலம் ,
குதித்து தப்பிக்க முயன்றார் .
ஆனால் சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில்
நீர் தேக்கத்தில் வீழ்ந்து பலியாகியுள்ளார் .
இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ,
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர்,
பைலட் ரோமன் மான்கிஷேவின் சடலம்
கியேவ் நீர்த்தேக்கத்தின் கரையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
வீழ்ந்தவர் ரஷ்ய ஹெலிகாப்டரின் தளபதி என்று
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .





























































