Author: நிருபர் காவலன்
கால்களை இழந்து சொந்த காலில் நிற்க ஏங்கும் இளைஞனுக்கு நேசகரம் நீட்டுவோம்
கால்களை இழந்து சொந்த காலில் நிற்க ஏங்கும்
இளைஞனுக்கு நேசகரம் நீட்டுவோம்,
நுவரெலியா மாவட்;டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட் வெதமுல்லை லில்லிஸ்டான்ட் தோட்டத்தில் (கயிர்கட்டி தோட்டம்) வசித்து வருபவரே கே.உதயதீபன்
(வயது 26) இவருக்கு 12 வருடங்களுக்கு முன் தரம் 07 இல் இறம்பொட இந்து கல்லூரியில் கல்வி கற்றுக் கொன்டிருந்த காலப்பகுதியில் தனது இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டது. கால்களை இழந்து
குனப்படுத்துவதற்கு பெற்றோர்கள் பல முயற்சிகளை எடுத்த பொழுதும் இது வரைக்கும் வெற்றியளிக்காத நிலையில் இந்த இளைஞன் தற்போதும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றார்.
மிகவும் துடிப்பும் நற்குணமும் மன தைரியமும் தன் நம்பிக்கையும் கொண்ட இந்த இளைஞன் சொந்த காலில் நிற்பதற்கு மலையக இளைஞர்களிடம் உதவிகரம் நீட்டுகின்றார்.
கால்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சுருசுருப்பாக எங்களுடன் கதைத்த உதயதீபனிடன் கருத்துகள் கேட்ட பொழுது.
எனது அம்மா எஸ்.சுந்தரம்பாள் (வயது 53) எனது அப்பா எம்.கனகராஜ் (வயது 52) ஆகிய இருவரும் எனக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டார்கள் அவர்களுக்கும் வயது போய்கின்றது.
இருவரும் தோட்டத்தில் வேலை செய்து விட்டு ஓய்வில் உள்ளார்கள். தற்போது வருமானத்திற்காக மரக்கரி தோட்டங்களில் அன்றாடம் தொழில் செய்கின்றார்கள் அவர்களையும் அரவனைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய நான் இவ்வாறு இருக்கின்றேன்.
எனக்கு கால்களில் தான் பிரச்சனை என் மனதில் அல்ல என் மனம் தற்போதும் துடிப்புள்ள இளைஞனாகவே இருக்கின்றது.
எனக்கு சொந்தமாக சுயதொழில் செய்ய அல்லது வியாபாரம் செய்ய யாரும் உதவி செய்வார்கள் ஆனால் என்னால் எனது அம்மா அப்பாவை பார்க்க முடியும்.
எனது அம்மா அப்பா இருவரும் எனக்காக பிச்சை கூட எடுத்துள்ளார்கள் இவர்களுக்காக ஒரு மகன் என்ற ரீதியில் சேவை செய்ய வேண்டும்.
எனக்கு வீட்டில் வசதிகள் இல்லை சக்கர நாற்காலியும் முறையான மலசலகூட வசதியும் இல்லை.
எனது காலை சுகப்படுத்த ஆரம்பத்தில் பல நல்லுள்ளங்கள் உதவிகள் செய்தன அதனை நான் மறக்கவில்லை. தற்போது எனது காலில் உணர்வுகள் இருக்கின்றன.
இதனை சரி செய்ய போதிய பணம் எனது அம்மா அப்பாவிடம் இல்லை. முறையான மருத்துவ வசதிகள் கிடைக்குமானால் நான் எனது சொந்த காலில் எழும்பி நிற்க முடியும்.
என்னை கவனிக்க அம்மா அப்பாவை தவிர யாரும் இல்லாதாதால் என் நிலை இவ்வாறு ஆகிவிட்டது.
இன் நிலையில் மலையகத்தில் உள்ள இளைஞர்களிடம் நான் சொந்த காலில் நிற்க உதவுமாறு கேட்கின்றேன் எப்படியும் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று கூறினார்.
மலையக இளைஞர்களே இவர் சுயமாக கடை ஒன்று வைத்து வியாபாரம் செய்ய விரும்புகின்றார்.
இதற்கு முறையான தற்காலிக கடை அல்லது இவர் இருக்கும் பிரதேசத்தில் விற்பனை செய்ய கூடிய பொருட்களை உற்பத்தி செய்யும் சுயதொழில் ஒன்றையும் செய்ய விரும்புகின்றார்.
விரும்பியவர்கள் முன் வாருங்கள் இவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்ய


மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீதித்தடை-பழிவாங்கும் கோட்டா அரசு
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீதித்தடை-பழிவாங்கும் கோட்டா அரசு,
மலையக நுவரெலியா மாவட்;டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வெதமுல்லை லில்லிஸ்டான்ட் தோட்டம் ஊடாக கெமிதன் தோட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு லில்லிஸ்டான்ட் தோட்டத்தில் வாகன தடை போடப்பட்டுள்ளது.
நாளாந்தம் இந்த பாதையின் ஊடாக செல்லும் மோட்டார் சைக்கிள்ளுக்கு 100.00 ரூபாவும் முச்சக்கரவண்டிக்கு 100.00 ரூபாவும் காருக்கு 300.00 ரூபாவும் லொரிக்கு 500.00 ரூபாவும் பஸ் போன்றவற்றுக்கு 500.00 ரூபாவும் தோட்ட நிர்வாகத்தினால் அறவிடப்பட்டு வருகின்றன.
இதனால் இந்த பாதையை பாவித்து வரும் பெருந்தோட்ட மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதனை அறவிட வேண்டாம் என மக்கள் சம்பந்தபட்டவர்களுக்கும் பொலிஸிற்கும் முறைபட்ட செய்த போதும் அறவிடுவதினை நிருத்தவில்லை.
மேற்படி தோட்;;;டத்திற்கு செல்லும் பிரதான பாதையின் ஒரு பகுதி அரசியல் பிரமுகர்களின் முயற்சியில் அரசாங்கத்தினால் திருத்தி அமைக்கபட்டதாகும்.
மற்றைய பகுதி போக்குவரத்திற்கு உகந்தாக இல்லை மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த பாதையில் செல்வதால் வாகனங்களே பழுதடையும்.
இவ்வாறான நிலையில் வாகனங்களுக்கு பணம் அறவிடுவது வேதனைக்குறியது.
அது மட்டுமல்ல அரசாங்க நிதியில் அமைக்கபட்ட பாதையில் இந்த நாட்டின் மக்கள் பயணிப்பதற்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேற்படி பாதையை தோட்ட நிர்வாகம் முறையாக திருத்தி அமைத்து பராமறித்து இவ்வாறு அறவீடுகளை மேற்க்கொண்டால் பரவாயில்லை. அதுவும் இல்லை
மேற்படி பாதையினை 150 க்கு மேற்பட்ட பெருந்தோட்ட குடும்பங்களும் 100 க்கு மேற்பட்ட விவசாயிகலும் பாவித்து வருகின்றனர்.
இந்த பிரதேசத்தில் மரக்கரி உற்பத்தி அதிகம் இதற்கு நாளாந்தம் பல வாகனங்கள் சென்று வருவதும் வழக்கம்.
இவ்வாறான நிலையில் பணம் அறவிடுவது தங்களுக்கு மேலும் வாழ்க்கை சுமையை அதிகரித்து உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.
தங்களிடம் சொந்த வாகனம் இல்லை. தனியார் வாகனங்களையே வாடகைக்கு பெற்று வருகின்றோம்.
இந்த வாகனம் வெளியார் வாகனம் என கூறி பணம் அறவிடுவது பொருத்தமானது அல்ல என மேலும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் இந்த நிலைமையை நேரில் ஆராய முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஸ்தலத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டார்.
இதன் போது தோட்ட அதிகாரிகள்¸ பாதிப்புக்கு உள்ளான மக்கள்¸ கொத்மலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர். இதன் போது ஏற்பட்ட வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் இந்த பணம் அறவிடும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொத்மலை பொலிஸ் நிலையத்தில் இதற்கான விசாரணைகள் 30.12.2019 நடைபெற தீர்மாணம் எட்டப் படவுள்ளது என்பதாகும் என .
இந்த விடயம் தொடர்பில் மேற்படி தோட்;டத்தின் உயர் நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய பொழுது. நாங்கள் மேற்படி தோட்ட மக்களுக்கு பணம் அறவிடுவது இல்லை.
வெளியில் இருந்து வரும் வெளி வாகனங்களுக்கே அறவிடுகின்றோம்.
இதில் வரும் பணத்தை கொண்டு இந்த பாதையை பராமரித்து வருகின்றோம். இந் நிலையில் எங்களை குறை கூற வேண்டாம் என்று கூறினார்.


வீட்டை தீயிக்கு இறையாக்கி தவிதவிக்கும் இளம் குடும்பத்திற்கு உதவிகள் photo
வீட்டை தீயிக்கு இறையாக்கி
தவிதவிக்கும் இளம் குடும்பத்திற்கு உதவிகள் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வெதமுல்ல தோட்டம் கெமினதன் தோட்டத்தில் கடந்த
15.12.2019 ஏற்பட்ட தீ வீபத்தில் தங்களது வீட்டையும் வீட்டு பொருட்களையும் அனைத்து ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றது 02 பிள்ளைகளுடன் கூடிய ஒரு இளம் குடும்பம்
வீட்டை தீயிக்கு அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தாலும் வீட்டு பொருட்கள் பிள்ளைகள் ஜனவரி மாதம் பாடசாலைக்கு செல்ல வாங்கிய அனைத்து உபகரணங்களும் சில ஆவணங்களும் உடைகளும் சாப்பாட்டு பொருட்களும் முற்றாக எரிந்து விட்டது.
மனைவி தோட்டத்தில் தொழில் செய்கின்றார்; கணவர் கொழும்பில் கூலி வேலை செய்கின்றார்.
தோட்டத்தில் வீடு தராததினால் சொந்தமாக சிறுகை சேர்த்த பணத்தில் இருந்து தற்காலிகமாக கட்டிய வீடே இது. தற்போது வீடும் எரிந்து விட்டது.
தற்போது தோட்டத்தில் கைவிடப்பட்;ட வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கி வருகின்றனர்;.
கணவர் ஏ.வினாயகமூர்த்தி மனைவி கே.பொண்மலர் மகன்மார்கள் வி.திலக்சன் (12) இவர் இறம்பொடை இந்து கல்லூரியில் தரம் 08 வி.விதுசன் (07) ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயத்தில் தரம் 03 கல்வி பயின்று வருகின்றனர்.
மேற்படி குறித்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு தேவையான எந்தவிதமான பொருட்கள் உடைகள் உபகரணங்கள் எதுவும் இல்லை.
இந்த குடும்பம் தங்களின் வாழ்வை கொண்டு செல்ல நல்லுல்லம் படைத்தவர்களிடம் இருந்து உதவிகளையும் தங்களுக்கான ஒரு பொருத்தமான வீட்டையும் எதிர்பார்க்கின்றனர்.
இந் நிலையில் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் பொழுது பாதிக்கப்பட்ட குடும்பம் தங்களது வீட்டை மேலும் தற்காலிகமாக அமைத்துக் கொள்ள ஒரு தொகை தகரங்களும் கையளிக்கப்பட்டன.
எது எவ்வாறாயினும் இந்த பாகிக்கப்பட்ட இளம் குடும்பத்திற்கு தற்காலிகமாக உதவுவதற்கு பலர் முன் வந்த போதும் நிரந்தரமான
வீடு ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பாதிக்கப்பட்ட இளம் குடும்பத்தினர் கோரிக்கைவிடுக்கின்றனர்.
உலகம் எல்லாம் பரவி வசிக்கும் ஈழத்து தமிழ் உறவுகளே இந்த உறவுகளுக்கு உங்களினால் முடிந்த உதவிகளை புரியுங்கள் .
இவர்கள் கண்ணீரை துடைத்து உதவிட முன் வருமாறு கையேந்தி கேட்டு கொள்கிறோம்



ஒரு நபர் ஆண்டுக்கு 5 கிலோ மிளகாய் சாப்பிடுகிறார்,
வாழ்வில் ஒரு நபர் ஆண்டுக்கு 5 கிலோ மிளகாய் சாப்பிடுகிறார்
உலகில் பெரும்பாலானோர் காரசாரமான உணவுகளை ருசிப்பதை விரும்புகின்றனர். இதன் சுறுசுறுப்பான சுவை பலரையும் கவர்கிறது.
ஏறக்குறைய எல்லா நாட்டு மக்களும் வேறுபாடின்றி காரத்தை விரும்புகின்றனர்.
ஒரு நபர் உலக அளவில் ஒரு நபர் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக ஏறத்தாழ 5 கிலோ மிளகாய் சாப்பிடுகிறார் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
சில நாடுகளில் மிளகாய் சாப்பிடும் அளவு, மற்றவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது.
துருக்கியில் மக்கள் தினம் 86.5 கிராம் மிளகாய் சாப்பிடுகிறார்கள். இதுதான் உலகிலேயே அதிகபட்ச அளவு.
காரமான உணவுகளுக்குப் பிரசித்தி பெற்ற மெக்சிகோவில் இது 50.95 கிராமகளாக உள்ளது.
ஒரு நபர் ஆண்டுக்கு 5 கிலோ மிளகாய் சாப்பிடுகிறார்,
அதைவிட மிக அதிகமான காரத்தை துருக்கி மக்கள் சாப்பிடுகிறார்கள்.
ஆக, காரமான உணவுகளை நாம் ஏன் விரும்புகிறோம்?
காரம் நமக்கு ஏற்படுத்தும் திரில் உணர்வு உள்ளிட்டவை அதற்கான காரணங்களாக இருக்கின்றன.
மிளகாய்க்கு காரமான தன்மையைத் தரும் கேப்சாய்சின் என்ற பொருள் உருவாக்கப்படுவதன் நடைமுறைகள் இன்னும் விவாதத்துக்கு உரியவையாக உள்ளன.
காலப்போக்கில் தாவரங்கள் காரத்தை வெளிப்படுத்தக்கூடியவையாக மாறியுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விலங்குகளும், பூச்சி இனங்களும் தங்களை சாப்பிட்டுவிடாமல் காப்பாற்றிக்கொள்வதற்காக காரமான தன்மையை அவை உருவாக்கிக் கொண்டுள்ளன என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மிளகாய்ச் செடிகளுக்கு இது எப்படி சரியானதாக அமைந்தது என்பதை அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நமது முன்னோர்களைத் தொடர்ந்து, மிளகாய் சாப்பிடும் ஒரே பாலூட்டி இனமாக மனிதன் மட்டும் தொடர்கிறான்.
பூசண எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புக் குணாதிசயங்கள் காரணமாக, காரமான உணவு வகைகள் மனிதனுக்குப் பிடிக்கத் தொடங்கின என்பது ஒரு விளக்கமாக இருக்கிறது.
காரமான ருசி கொண்ட உணவுகள் சீக்கிரம் கெட்டுப் போவதில்லை என்பது மக்களின் எண்ணமாக உள்ளது.
காரமாக இருந்தால் அது கெட்டுப்போகவில்லை என்பதன் அறிகுறி என்று கருதப்படுகிறது.
கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் நிபுணர்கள் ஜெனிபர் பில்லிங், பால் டபிள்யூ ஷெர்மன் ஆகியோர் 1998-ம் ஆண்டில் இந்த விளக்கத்தை முன்வைத்தனர்.
36 நாடுகளில் மாமிசம் சார்ந்த பாரம்பரியமான ஆயிரக்கணக்கான உணவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
உணவு கெட்டுப்போகும் வாய்ப்புள்ள, வெப்பமான காலநிலை உள்ள நாடுகளில் காரமான உணவுப்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
‘‘வெப்பமான நாடுகளில், மாமிசம் சார்ந்த உணவுகள் அனைத்திலும் குறைந்தது ஒரு காரமான உணவுப்பொருளாவது இருக்கும்.
பெரும்பாலானவற்றில் காரமான பொருள்கள், குறிப்பாக மசாலாப் பொருள்கள் நிறைய இருக்கும்.
ஆனால் குளிர் மிகுந்த நாடுகளில் பெரும்பாலான உணவு வகைகளில் இவை குறைவாகவே இருக்கும்’’ என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் காரமான உணவுப்பொருட்களின் பயன்பாடு அதிகபட்ச அளவுக்கு உள்ளது.
சுவீடன், பின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் இது குறைந்தபட்ச அளவாக உள்ளது.
ஒரு நபர் ஆண்டுக்கு காரம் சேர்த்தல், உலர வைத்தல், சமைத்தல், புகையிடுதல், உப்பிடுதல் ஆகிய அனைத்துமே உணவில் ஒட்டுண்ணிகளால் நமக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே இருக்கின்றன.
உணவு ஆராய்ச்சியாளரான கவோரி ஓ’கானர் மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார்.
கரும்பு மற்றும் உருளைக்கிழங்குகளைப் போலவே, மிளகாய்களும் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்கள் அறியாத உணவுப்பொருளாக இருந்து வந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
ஒரு நபர் ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு சென்று, வர்த்தக உறவுகளை ஏற்படுத்திய பிறகுதான், மிளகாய் உலகெங்கும் பரவியது என்கிறார் அவர்.
கதா நாயகியாக நடிக்கும் நட்சத்திரா
கதா நாயகியாக நடிக்கும் நட்சத்திரா
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் நட்சத்திரா, புதிய படத்தில் கதா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
கதாநாயகியாக நடிக்கும் நட்சத்திரா
நட்சத்திரா
வி.பி.டேனியல் இயக்கத்தில், ஆனந்த் நாக், நட்சத்திரா நாகேஷ் ஜோடியாக நடிக்கும் படம்,
வணிகன். படம் குறித்து, நட்சத்திரா நாகேஷ் கூறுகையில், ‘’டிவி தொகுப்பாளினியாக வலம் வரும் நான், இப்படம் மூலம், பெரிய திரையில் அறிமுகம் ஆகிறேன்.
நட்சத்திரா
‘திரில்லர்’ படம் என்றாலும், காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.
செந்தில் விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்களை கேட்ட பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா,
இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார்.
விஜய் தளபதி 64 படத்தில் அரசியல்
விஜய் தளபதி 64 படத்தில் அரசியல்
நடிகர் விஜய்-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் தளபதி 64. இதுவரை 2 கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.
மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக, தற்போது படக்குழு, கர்நாடாகாவின் ஷிமோகாவில் முகாமிட்டிருக்கிறது.
நடிகர் விஜய்யும், அவருக்கு எதிராக வில்லனாக படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கே படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய்
விஜய், ஷிமோகாவில் இருக்க, விரைவில் நடிகர் விஜய் சேதுபதி அங்கு செல்கிறார்.
கல்வி முறைக்கும், அதில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் எதிராக கருத்து மழை பொழியும் கேரக்டரில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
கல்லூரி பேராசிரியர் வேடத்தை நடிகர் விஜய் ஏற்று நடிக்கிறார். வில்லன் விஜய் சேதுபதியுடன், பேராசிரியர் விஜய் சண்டையிடுவது போன்ற காட்சிகள் உள்ளன.
அப்படிப்பட்ட காட்சிகளைத்தான், ஷிமோகாவில் படக்குழு படமாக்கவிருக்கிறது.
பழனியில் தனுஷ் சாமி தரிசனம்
பழனியில் தனுஷ் சாமி தரிசனம்
நடிகர் தனுஷ் நடிக்கும் ‘சுருளி’ படப்பிடிப்பு பழனி அருகே உள்ள கோம்பைபட்டியில் நடந்து வருகிறது.
இதற்காக தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினர் அங்கு தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார்.
நடிகர் தனுஷ்
அவர் ரோப்கார் மூலம் மலைக்கோவில் சென்று, சாமி தரிசனம் செய்தார்.
இதற்கிடையே தனுஷ் வந்ததை அடுத்து கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
பின்னர் அவர் ரோப்கார் வழியே அடிவாரம் சென்று பழனி கோம்பைபட்டிக்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜூம் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
செக்ஸ் படங்களில் நடிக்க அழைத்தார்கள் – நடிகை புகார்
செக்ஸ் படங்களில் நடிக்க அழைத்தார்கள் – ரஜினி பட நடிகை புகார்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே.
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான ஆள் இன் ஆள் அழகு ராஜா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்
ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார்.
நிர்வாண வீடியோ, செக்ஸ் படங்களில் பாத்ரூம் செல்பி என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினாலும் எதையும் கண்டுகொள்ளாமல் சினிமாவில் நடித்து வருகிறார்.
பல்வேறு கவர்ச்சியான வேடங்களில் இவர் நடித்ததால் பாலியல் நகைச்சுவை படங்களில் இவரை நடிக்க வைக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முயற்சித்ததாக சமீபத்தில் கூறியுள்ளார் ராதிகா.
ராதிகா ஆப்தே
அதில் அவர், ‘ஒரு துறையில் கால் வைத்தால் அதேதான் வழியென்பது இல்லை ஆனால் அந்த பாதைக்கே என்னை அழைத்தார்கள்.
ஆனால், அனைத்தையும் நான் தவிர்த்துவிட்டு தற்போது நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
காணமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் எதற்கு – விக்கி காட்டம் .
இலங்கையில் – காணமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் எதற்கு – விக்கி காட்டம் .
இலங்கையில் மகிந்த ஆட்சியின் பொழுது கடத்த பட்டு காணாமல் ஆக்க பட்ட உறவுகளுக்கு அரசு மரண சான்றிதழ் வழங்கி வருகிறது .
காணமல் போனவர்கள் தொடர்பில் திறந்த விசாரணைகளை மேற் கொண்டு அவர்கள் தொடர்பில் விசாரித்து நீதியை நிலை நாட்ட வேண்டும் .
அதனை விடுத்து காணாமல் ஆக்க பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கி வருவது எவ்விதத்தில் நீதியாகும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார் .
இலங்கை வடக்கு தமிழர் பகுதியில் தனித்து போட்டியிட உள்ள நிலையில் விக்கினேஸ்வரன் போர்க்குற்றம் ,மற்றும் இன அழிப்பு தொடர்பில் தனது தீவிர கவனத்தை செலுத்தி வருகிறார் .
இது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள மேற்கொள்ளும் நகர்வா .? அல்லது உண்மையில் மக்கள் மீது கொண்ட கரிசனையா என்பதை பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இப்பொழுதே கூறி வைத்து கொள்ளலாம் .
அரசியல் வியாபாரிகள் மலிந்து போயுள்ள இலங்கை தீவில் இவை எல்லாம் ஒரு வேற்று நாடகம் , கோசம் என மக்கள் மூணு முணுக்கத் தான் செய்கின்றனர் .
நீரில் மூழ்கி தாய் – மகன் பலி
குருநாகலில் -நீரில் மூழ்கி தாய் – மகன் பலி
இலங்கை – குருநாகல் பகுதியில்வாவி ஒன்றுக்குள் நீராட சென்ற தாய் மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த கிராம் மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
43 வயது தாய் மற்றும் அவரது 15 வயது மகனும் இவ்வாறு நீர் சுழியில் இழுத்து செல்ல பட்டு நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் .
இருவரது சடலமும் மீட்க பட்டு மரண பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளது
பலநாள் திருடர்கள் சிக்கினர்
இலங்கையில் -பலநாள் திருடர்கள் சிக்கினர்
இலங்கை – நாடு தழுவிய ரீதியில் ஆடம்பர வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பெறுமதி மிக்க பொருட்களை திருடி வந்த இரகசிய திருடர்கள் கும்பல் ஒன்றை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் .
தொடர் திருட்டினால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள் வழங்கிய தொடர் முறைப்பாடுகள் ,மற்றும் இரகசிய ஒத்துழைப்புக்கள் ஆகியவற்றின் பயனாக குறித்த திருட்டில் சிக்கிய திருடர்கள் இருவர் வசமாக சிக்கினார் .
கைது செய்யப்பட்ட திருடர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
மேலும் திருடர்கள் வசம் இருந்து திருட பட்ட பொருள்களும் மீட்க பட்டுள்ளன .
இவர்களுடன் தொடர்பில் உள்ள மேலும் சிலர் சிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது
சந்திரிக்காவை கைது செய் – பிக்குகள் முழக்கம்
இலங்கையில் -சந்திரிக்காவை கைது செய் – பிக்குகள் முழக்கம்
இலங்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித்தவை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது .
இதனை அடுத்து குற்றவாளியை வீட்டில் மறைத்து வைத்த சந்திரிக்கா வை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பிக்குகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் .
காவிகளை ஏவியே இலங்கையில் இனவாத ஆட்சியை கோட்டபாய நடத்தி வருவதும் அதற்கு ஒரு காவி அமைப்பை அவர் உருவாக்காகி வைத்துள்ளதும் இங்கே குறிப்பிட தக்கது .
இந்த பிக்குகள் போராட்டத்தின் மூலம் சந்திரிக்கா கைது செய்ய படுவாரா என்பதே பரபரப்பாக உள்ளது .
இலங்கை கடலில் மிதந்து வந்த வெள்ளையர் சடலம்
இலங்கை கடலில் மிதந்து வந்த வெள்ளையர் சடலம்
இலங்கை கடல் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த வெள்ளை இனத்தவர் ஒருவருடைய சடலம் ஒன்று மிதந்து கரை ஒதுங்கியுள்ளது .
சாலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர் கடலில் குளிக்கும் பொழுது இறந்தாரா..? அல்லது வெளிநாட்டு கடலில் இறந்த நிலையில் இலங்கை கடலில் கரை ஒதுங்கியதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
சடலம் தொடர்பாக உரிமை கோரவில்லை .

திடீரென பரவும் எலி காய்ச்சால்
நாடு தழுவிய ரீதியில் -திடீரென பரவும் எலி காய்ச்சால்
இலங்கையில் – தற்பொழுது இடம்பெற்று வரும் சீரற்ற காலநிலை காரணமாக எலி காய்ச்சல் மக்கள் மத்தியில் திடீரென பரவி வருகிறது .
குறிப்பாக இவை வயல் வெளிகளில் வேலை புரியும் மக்களை இலக்கு வைத்து அதிகம் பரவி வருகிறதாம் .
இந்த திடீர் தோற்று நோய் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
திடீரென பரவும் எலி காய்ச்சால் தொடர்பாபி மிக அவதானமாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது
துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது
இலங்கையில் -துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது
இலங்கையில் – உக்கிரேன் நாட்டை சேர்ந்த ஒருவர் சடடவிரோதமான முறையில் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நிலையில் துப்பாக்கியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளளார் .
இவருக்கு உதவிய இலங்கையைச சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுளளார் .
இவர்கள் ஏன் இந்த துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
14 தமிழாக மீனவர்கள் கைது
இலங்கை கடலில் -14 தமிழாக மீனவர்கள் கைது
இலங்கை கடல் பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடு பட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடற்படையால் சுமார் 14 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இந்த தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ,மற்றும் மீன் பிடி உப கரணங்கள் ,படகுகள் என்பனவற்றை சிங்கள கடற்படை பறிமுதல் செய்துள்ளது
2.475 சாரதிகள் அதிரடியாக கைது
இலங்கையில் -22.475 சாரதிகள் அதிரடியாக கைது
நாட்டி,ல் இடம்பெற்ற பண்டிகை விழாக்களை முன்னிட்டு திடீர் வீதி மறிப்பு சோதனை நடத்திய காவல்துறையினரால் சுமார் 2.475 சாரதிகள் அதிரடியாக கைது செய்யப் பட்டுள்ளனர் .
மது மற்றும் வீதி விதிமுறையை செம்மையாக கடை பிடிக்காத நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளனவாம் .
அதிக வேகத்தில் மட்டும் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
ராஜித்த வைத்திய சாலையில்
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த தினம் ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர் மற்றும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நிறைவு
செய்யப்படவிருப்பதாக கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிதாக 8 ரயில்கள் சேவையில்
அடுத்த வருடத்தில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இவற்றில் 4 ரயில்கள் புதிதாக அடுத்த மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படும். ரயில் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பணிகளைத் துரிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.







