Posted in இலங்கை செய்திகள்

தனக்கு நியமனம் மொட்டிலா, நாற்காலியிலா என்றுக்கூட தெரியாத எஸ்பி. திசாநாயக்க, இராதாவை பற்றி உளறுகிறார்.மனோ கணேசன்

தனக்கு நியமனம் மொட்டிலா, நாற்காலியிலா என்றுக்கூட தெரியாத எஸ்பி. திசாநாயக்க, இராதாவை பற்றி உளறுகிறார்.மனோ கணேசன்

எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், எமது கூட்டணியின் சார்பில் நாம் உருவாக்கிவரும் புதிய எதிரணி கூட்டணியில் நுவரேலியா மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறுவார். அதை நமது கூட்டணியும், கூட்டணி கட்சியான மலையக மக்கள் முன்னணியும், நமது மக்களும் கவனித்து கொள்வார்கள்.

எஸ்.பி.திசாநாயக்க, தனக்கு எங்கே வேட்பாளர் நியமனம் கிடைக்க போகின்றது என்பதை பற்றி கவலை பட வேண்டும். அவரது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை,

பொதுஜன பெரமுன கழற்றி விட்டு விட்டது. எனவே மொட்டுக்கும், நாற்காலிக்கும் இடையில் வௌவால் போல பரிதவித்து தொங்கும் எஸ். பி. திசாநாயக்க, முதலில்

தன்னை பற்றி கவலைப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் எம்பி, தங்களுடன் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்துகிறார் என முன்னாள்

அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கூறியிருந்தார். அவருக்கு பதிலளித்த கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் எம்பி, திசாநாயக்காவின் கூற்றை

மறுத்து, தான் அத்தகைய எந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை என மறுத்து தான் கூட்டனியின் வேட்பாளாராக புதிய எதிரணி கூட்டணியிலேயே

போட்டியிட போவதாக கூறியிருந்தார். இதுபற்றி கூட்டணி தலைவர் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த தேர்தலில் தோல்வியடைந்து, பின்னர் நாம் பதவிக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபாலாவின் தோளில் தொங்கி, தேசிய பட்டியல் நியமனம் பெற்று, பாராளுமன்றம்

வந்து, எமது அமைச்சரவைக்குள்ளும் நுழைந்து எமது அரசை நாசம் செய்த எஸ்.பி.திசாநாயக்க, தேர்தலில் வெற்றி

பெற்று வந்த எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது.

எஸ்.பி.திசாநாயக்க, அரசியல் தகிடுதத்தம் செய்து இந்த முறையும் எவரது தோளிலாவது சவாரி செய்து

பாரளுமன்றம் வர எத்தனிப்பது நன்கு தெரிகிறது. இம்முறை தோள் பாய்ச்சலுக்கு இடம் கிடையாது. சொந்த முயற்சியில்தான் வர வேண்டும்.

இந்த முறை எஸ். பி. திசாநாயக்கவுக்கு தேசிய பட்டியல் நியமனம் எதுவும் கிடைக்க போவதும் இல்லை என்பது

நிச்சயம். மொட்டா, நாற்காலியா என்ற இறுதி தீர்மானமும் இதுவரை இல்லை. இந்நிலையில் தனது எதிர்காலமே

கேள்விக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் அடுத்தவரை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு, தன்னை பற்றி அவர் கவலைப்பட வேண்டுமென நினைக்கிறேன்.

Posted in சினிமா

போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி

போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய்பல்லவி, போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி
சாய் பல்லவி


பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய

மொழிகளில் பிரபலமானவர் விஜய் இயக்கிய தியா என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து தனுசுடன் ‘மாரி 2’

படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. யுடியூப்பில் அதிகமானோர் பார்த்த பாடலாகவும் ரவுடி பேபி சாதனை படைத்தது.

இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள, 30 அண்டர் 30 என்ற தொகுப்பில் நடிகை சாய் பல்லவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது வேறு யாருக்கும்

கிடைக்காத பெருமை. வேறு எந்த தென்னிந்திய நடிகையின் பெயரும் இந்த வருட பட்டியலில் இடம்

பெறவில்லை. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 பெண்களில் இவரும் ஒருவர்.

சாய் பல்லவி

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நடிகை சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தன்னைப் பெருமைப்படுத்திய போர்ப்ஸ்

இதழுக்கு நன்றி தெரிவித்துள்ளார், நடிகை சாய் பல்லவி. இதுபற்றி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர்,

இதன்மூலம் தான் பெருமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.2 கோடி மதிப்புள்ள முக அழகு கிரீம் விளம்பர ஒப்பந்தத்தையும் ரூ.1 கோடி மதிப்புள்ள மற்றொரு ஒப்பந்தத்தையும் நடிகை சாய் பல்லவி நிராகரித்தவர்

என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது, நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விரத பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி
Posted in இலங்கை செய்திகள்

கோட்டாபய வெலிக்கடை சிறைக்கு திடீர் பயணம்

கோட்டாபய வெலிக்கடை சிறைக்கு திடீர் பயணம்

இலங்கை ஆளும் ஜனாதிபதி வெலிக்கடை சிரைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார் .

இவரது இந்த பயணம் ஏன் என தெரிவிக்க படவில்லை .பழிவாங்கும் அரசியல்வாதிகளை அங்கு அடைக்கும் நோக்குடன்

சிறை அறைகளை தயார் படுத்தும் நோக்குடன் அங்கு சென்றாரா என தெரியவில்லை என தெரிவிக்க படுகிறது

கோட்டாபய வெளிக்கடை சிறைக்கு
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலில் 8 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலில் 8 பேர் பாதிப்பு

பிரிட்டனில் சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரையில் எட்டு பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் .

மேலும் பல டசின் பேர் இந்த நோய் அறிகுறிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இதுவரை 900 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் .

இதன் எணிக்கை இறப்பு வீதம் பல லட்சங்களை எட்டும் என்கின்ற செய்தியும் பரவி வருகிறது

பிரிட்டனில் கொன்றானோ வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம்: இருந்த இடம் விசமிகளால் உடைப்பு photo

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் மாயம்: இருந்த இடம் விசமிகளால் உடைப்பு photo

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளது.

இன்று காலை வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்த போதே குறித்த மாதா சொரூபம் காணாமல் போயிருந்தது. வவுனியா, பூந்தோட்டம், சாந்தசோலை வீதியில்

தனியாருக்கு சொந்தமான வீட்டு வாயில் முன் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் இருந்த பகுதி

விஷமிகளால் உடைக்கப்பட்டு சொரூபத்தை தூக்கிச் சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் இச்செயற்பாடானது குறித்த பகுதியில் சற்று பதற்றத்தை

உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக வவுனியா காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது

தொடர்பில் வவுனியா பொலசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் பகுதியில்
Posted in இலங்கை செய்திகள்

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக கல்விப்பணிப்பாளர் நியமனம்photo

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக கல்விப்பணிப்பாளர் நியமனம்photo

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நியமனம்

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி

கல்விப்பணிப்பாளர் சுப்பையா அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில்

வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் இடம் இருந்து இதற்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

வவுனியாவில் பல பாடசாலைகளில் அதிபராகவும், வவுனியா தெற்கு பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும்

கடமையாற்றி கடந்தமாதம் ஓய்வு பெற்ற நிலையிலேயே வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் விரைவில் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண பயணிகள்
Posted in உளவு செய்திகள்

கமாஸ் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் அகோர தாக்குதல்

கமாஸ் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் அகோர தாக்குதல்

பலஸ்தீனத்தில் தளம் அமைத்து போராடி வரும் கமாஸ் போராளிகள் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தொடர் தாக்குதலை தொடுத்தன ,

அந்த அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் பலியாகி உள்ளனர் என இஸ்ரேல் அறிவித்துள்ளது

முக்கிய தளபதிகளை கொன்று அந்த அமைப்பை செயல் இழக்க வைக்கும் முக்கிய நகர்வை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

அதன் உடைய உளவு திட்டமிடல்கள் அவ்வாறே அமைந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது

கமாஸ் இராணுவ முகாம்கள்
கமாஸ் இராணுவ முகாம்கள்
https://www.youtube.com/watch?v=CKupdkguXVo&list=PLaP0pLxA2cX9mTEUBZ-UAgJfKYBeIe4X9
Posted in உளவு செய்திகள்

500,000 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு -10 மில்லியன் பேர் ஆபத்தில்

500,000 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு -10 மில்லியன் பேர் ஆபத்தில்

சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் ஐந்து லட்ச்சம் பேர் பாதிக்க

பட்டுள்ளதாக புதிய திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன

குறித்த நோய் பரவிய குவான் மாகாணத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கு அதிகமானவர்களுக்கு இந்த நோய் பரவியுள்ளதாகவும்

மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க படலம் எனவும் ,ஒருலட்ச்சம் மக்கள் வரையில் பலியாக கூடும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது

இருபது பேரில் ஒருவருக்கு இந்த நோய் பரவியுள்ளதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது .

மேலும் குவான் மாகாணத்தில் பத்து மில்லியன் மக்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர் என அந்த அறிக்கை மேலும் மிரள வைக்கிறது

சீனா அரசு இந்த நோய் தாக்கத்தின் பாதிப்பை மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

500 000 பேருக்கு கொரனோ
https://www.youtube.com/watch?v=CKupdkguXVo&list=PLaP0pLxA2cX9mTEUBZ-UAgJfKYBeIe4X9
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோ வான் நேரெதிர் மோதல் ஒருவர் பலி

ஆட்டோ வான் நேரெதிர் மோதல் ஒருவர் பலி

மாத்தறை ரி பிரதான வீதியில் ஆட்டோ மற்றும் வான் ஒன்று நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் .

கதிர்காமம் நோக்கி பயணித்து கொண்டிருந்த வானே ஆட்டோவுடன் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ஆட்டோ வான் நேரெதிர் மோதல்
ஆட்டோ வான் நேரெதிர் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்களை மீட்ட இராணுவம்

ஆயுதங்களை மீட்ட இராணுவம்

அரலகங்வில பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மெகசின் ரக துப்பாக்கிகள் மற்றும் மேலும் பல வெடி

பொருட்களை பொலன்னறுவை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (09) பிற்பகல் 12.30 அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது..

Posted in இலங்கை செய்திகள்

நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையை சார்ந்த 34 பேருக்கு இடமாற்றம்

நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையை சார்ந்த 34 பேருக்கு இடமாற்றம்

வருடாந்த இடமாற்றங்களுக்கு அமைய மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையை சார்ந்த 34 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் காணப்படும் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க குறித்து விசாரித்து அவர் தொடர்பின் தீர்ப்பை

வழங்கியுள்ள நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி வசந்த குமாரவும் இந்த இடமாற்றத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

வட கிழக்கு -மலையக கட்சிகள் ஒன்றாக செயற்பட வேண்டிய நேரம் இது -இராதா

வட கிழக்கு -மலையக கட்சிகள் ஒன்றாக செயற்பட வேண்டிய நேரம் இது -இராதா

வடக்கு கிழக்கு மற்றும் மலையக கட்சிகள் ஒன்றினைந்து தமிழர்களாக செயற்பட வேண்டிய இக் காலகட்டத்தில் வடக்கில் பிரிந்து செயற்படுவது வருத்ததிற்குரியது

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன்

வடக்கு கிழக்கு மற்றும் மலையக கட்சிகள் ஒன்றினைந்து தமிழர்களாக செயற்பட வேண்டிய இக் காலகட்டத்தில் வடக்கில் பிரிந்து செயற்படுவது வருத்ததிற்குரியது என்று

கூறுகின்றார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுபபினரும் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள்

முன்னணியின் தலைவமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பிரச்சனைக்கும் சர்ச்சைக்கும் பல உயிர்கள் காவு கொள்ளபட்ட தற்போதும் இந்த பிரச்சனைகளை

அனுபவித்து வரும் புஸ்ஸல்லாவயில் இருந்கு பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் 22 கிலோமீற்றர் பிரதான பாதையில் ஒரு பகுதி இரண்டு கிலோமீற்றர் தூர பாதை

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் மூன்று கோடி 33 இலட்சம் ரூபா செலவில் காபட் பாதையாக

செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

இன்று நாட்டில் ஏதோ ஒரு வகையில் இனத்துவம் தலை விரித்து ஆடுகின்றது. ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் அதனை நமக்கு கோடிட்டு காட்டியுள்ளது. இவ்வாறான

நிலையில் தமிழ் மக்கள உட்பட சிறுபான்மை மக்களாகிய நாங்கள் ஒன்றுனைந்து செயற்பட வேண்டும். இந்நிலையல் வடக்கின் முன்னால் முதல் அமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

அவர்கள் புதிய கட்சியாக தமிழ் தேசிய அமைப்பாக உறுவாக்கி இருக்கின்றார். இது வடக்கில் தமிழ் மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தும். தற்போது வட

கிழக்கில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை உள்ள நிலையில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

அதற்கான கால அவகாசமும் உண்டு. தமிழர்களின் ஒற்றுமை ஒங்கி நிற்க வேண்டும் என்று மேலும் அவர் கருத்து தெரிவித்தார்.

வட கிழக்கு -மலையக கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

நான் கட்சி மாறுவதாக வெளியான கருத்து உன்மைக்கு புறம்பானது -இராதாகிருஸ்ணன்

நான் கட்சி மாறுவதாக வெளியான கருத்து உன்மைக்கு புறம்பானது -இராதாகிருஸ்ணன்

நான் கட்சி மாறுவதாக வெளியான கருத்து உன்மைக்கு புறம்பானது


எனது மீது பலருக்கு காதல் ஆனால் நான் யாரை காதல் பன்னுரேன்னு
எனக்கு மட்டும் தான் தெரியும்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுபபினர் வே.இராதாகிருஸ்ணன்

வருகின்ற பொது தேர்தலில் நான் மொட்டு கட்சியில் வாக்கு கேட்க போவதாக இந்த கட்சியின் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அவர்கள் கொத்மலை பிரதேசத்தில்

நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியுடனே தேர்தலில் போட்டியிடுவோம்.

இவ்வாறன நிலையில் இவ்வாறு தெரிவித்த இந்த கருத்து உன்மைக்கு புறம்பானது. இதனை நான் முற்றிலும் மறுக்pன்றேன். எனது மீது பலருக்கு காதல் ஆனால் நான்

யாரை காதல் பன்னுரேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் என்று கூறுகின்றார் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற

உறுபபினரும் முன்னால் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் (10.02.2020)

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பிரச்சனைக்கும் சர்ச்சைக்கும் பல உயிர்கள் காவு கொள்ளபட்ட தற்போதும் இந்த பிரச்சனைகளை

அனுபவித்து வரும் புஸ்ஸல்லாவயில் இருந்கு பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் 22 கிலோமீற்றர் பிரதான பாதையில் ஒரு பகுதி இரண்டு கிலோமீற்றர் தூர பாதை

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் மூன்று கோடி 33

இலட்சம் ரூபா செலவில் காபட் பாதையாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும்

நிகழ்விற்கு அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

மலையத்தில் அடிக்கடி என்மீது நான் கட்சி மாறப்போவதாக பலர் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது

வழமையாக போய்விட்டது நான் ஒன்றும் கட்சிமாறவில்லை நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஐ.தே.கட்சியின்

கூட்டணியாகவே தேர்தலில் போட்டியிடுவோம். இதற்காக யாரும் அவசரமாக எதையும் சொல்லாதீர்கள் நான்

தற்போதும் இருக்கும் கட்சியிலும் கூட்ணியிலுமே இருக்கின்றேன் என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

நான் கட்சி மாறுவதாக வெளியான
நான் கட்சி மாறுவதாக வெளியான
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்: றிசாட்

தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்: றிசாட்

தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என

முன்னாள் அமைச்சரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மதீனா நகர், அல் மதீனா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு

உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியையும் கற்றுக் கொடுங்கள். மார்க்க வழியில் சரியான பாதையில் பயணிக்க பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒழுக்கத்துடன்

கற்கப்படுகின்ற கல்வி தான் அவர்களை நல்ல மனிதர்களாக, தலைவர்களாக, கல்விமான்களாக,

வர்த்தகர்களாக, ஆலிம்மாக மாற்றுகின்றது. ஆகவே ஒழுக்க விடயத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

அத்துடன், ஒற்றுமையாக வாழ்ந்து கொள்ளுங்கள். தமிழ் முஸ்லிம் உறவை பலப்படுத்துவதாக இந்தக் கிராமம் வளர்ந்து வருகின்றது. இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களுடைய

குறைகளை, தேவைகளை, வீடில்லா பிரச்சனையை, தொழில்வாய்ப்பு பிரச்சனையை இங்கு வாழ்கின்ற நமது கட்சியினுடைய முக்கியஸ்தர்கள், ஊரவர்கள், பள்ளி

நிர்வாகிகள் என்னிடத்தில் வந்து பேசுவார்கள். இங்கு வாழ்கின்ற மக்களின் வறுமையை போக்குகின்ற திட்டங்களை வகுத்து செயற்படுமாறு சொல்லுவார்கள்.

இவ்வாறு ஒற்றுமையாக வாழும் இந்த நிலை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நிலையை கட்டிக் காக்க வேண்டிய தார்மீக கடமை எல்லோருக்கும் இருக்கிறது.

எனவே தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரினவாத சக்திகள் இந்த சிறுபான்மை சமூகத்தினுடைய

உரிமைகளில் கைவைப்பதை நாங்கள் பார்க்கின்றோம். சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஆள எத்தனிக்கின்ற பல விடயங்களை நாங்கள் பார்க்கின்றோம். பெரும்பான்மை

மக்கள் மத்தியில் சிறுபான்மை தலைவர்கள் பற்றி இல்லாத, பொல்லாத அபாண்டங்களைச் சொல்லி பெரும்பான்மை மக்களிடத்தில் எதிரிகளாக சிறுபான்மை தலைமைகளை

காட்டுகின்ற அசிங்கமான அரசியல் அண்மைக்காலமாக நமது நாட்டில் நடந்து வருகின்றது.

சிறுபான்மையாக வாழுகின்ற நமது மக்கள் தென்பகுதியில் வாழுகின்ற பிரதேசங்களில் சிறு சிறு பிரச்சனைகள் வருகின்ற போது அங்கு வாழுகின்ற எல்லா மக்களையும்

தாக்குகின்ற அசிங்கமான செயற்பாடுகளை நாங்கள் காண்கின்றோம். எனவே கடந்தகால வரலாறுகள் எங்டகளுடைய தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பல

பிளவுகளை ஏற்படுத்தியிருந்தது. எதிர்காலத்தில் நாங்கள் மிக நிதானமாக சிந்தித்து ஒற்றுமையாக ஊரின் உடைய நலனுக்காக, மக்களினுடைய நலனுக்காக, எமது

பிரதேசத்தினுடைய நலனுக்காக, அபிவிருத்திக்காக, எமது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எமது

இருப்புக்காக நாம்ட ஒற்றுமையாக வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.

இருவருக்கு இடையில் பிரச்சனைகள் வந்தால் அந்த இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனையாக பார்க்க வேண்டுமே தவிர, இரண்டு பேரும் வேறு வேறு

சமூகத்தை சார்ந்தவாராக இருந்தால் அதை சமூகப்பிரச்சனையாக அல்லது இனப்பிரச்சனையாக பார்த்து இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்பத்டுத்தும்

அசிங்கமான வேலைகளை செய்யக் கூடாது. கடந்த காலங்களில் எமது ஒற்றுமையால் தான் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வீடுகள், வீதிகள் எல்லாவற்றையும் ஓரளவு

அடைந்து கொண்டோம். எதிர்காலத்திலும் எங்களுடைய தேவைகளை அடைந்து கொள்ள வேண்டுமாக இருந்தால்

அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட சமூகமாக இருந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.

தமிழ் பேசுகின்ற சமூகம்
தமிழ் பேசுகின்ற சமூகம்

Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் புயல் மக்கள் தவிப்பு video

பிரிட்டனில் புயல் மக்கள் தவிப்பு video

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது , கடும் மழை மற்றும் புயல் காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் .

பல்லாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி குளிரில் தவித்து வருகின்றனர் .

இந்த புயல் காரணமாக இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது ,மீட்பு பணிகள் துரிதமாக இடம் பெற்ற வண்ணம் உள்ளது

மேலும் வெள்ள பெருக்கு ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது காணொளியில் முழுமையான விபரம்

https://www.youtube.com/watch?v=M037Vge0Hw4
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் பாலியல் லஞ்சம் PHOTO

வவுனியா வைத்தியசாலையில் பாலியல் லஞ்சம் PHOTO

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு பாலியல் லஞ்சம்

தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தலைமையில் டிரான்ஸ் பேரன்சி இன்டநெசனல் சிறிலங்கா நிறுவனத்தின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில்

நடைபெற்ற குறித்த செயலமர்வில் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் சுஜீத் மற்றும் மங்களா சங்கர் அவர்களும் வளவாளராக கலந்து கொண்டு பாலியல் லஞ்சம்

தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அதற்கான சட்ட ஏற்புகள் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.

இதன்போது பாலியல் லஞ்சம் மற்றும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தல் மற்றும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை

எடுத்தல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இதில் 50க்கு மேற்பட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

வவுனியா வைத்தியசாலையில்
வவுனியா வைத்தியசாலையில்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கூடிய புலிகள் மக்கள் பேரவை; உள்ளே நடந்தது இது தான் photo

வவுனியாவில் கூடிய புலிகள் மக்கள் பேரவை; உள்ளே நடந்தது இது தான் photo

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பாளர்களையும் இணைப்பாளர்களையும்

தெரிவு செய்யும் கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

அதன் பின்னர் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பேரவையின் தலைவர் த.இ.மலரவன்,

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் அரசியல் வேலைத்திட்டங்களும் அரசியல் நகர்வுகளும் மக்களை உள்ளடக்கி மக்களுடைய அலோசணைகளை பெற்றுத்தான்

பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஆகையினால் எதிர்காலத்தில் நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மாணிப்பார்கள் .

இது வரை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாங்கள இணைந்து செயற்பட எவ்வித விருப்பத்தினையும் தெரிவிக்கவில்லை அவர்களும் எமக்கு எவ்வித

அழைப்புக்களும் விடுக்கவில்லை . எதிர்வரும் காலங்களில் போராளிகள் யாவரும் ஒர் அணியாக பணிப்போம் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என தெரிவித்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மகளிர் அணி தலைவி பாவு கஜேந்தினி,

நாங்கள் போராளியாக இருக்கின்ற சமயத்தில் எங்களுக்கு தனித்துவமான ஒர் மரியாதை காணப்பட்டது. ஆனால் தற்போது அது காணப்படுவதில்லை அதன் காரணமாவே

பெண்களுக்கான உரிமையினை வென்றேடுப்பதற்காகவே விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையுடன் இணைந்துள்ளோம்.

பெண் தலமைத்துவ குடும்பங்களை எந்தவோரு அரசியல்வாதிகளோ யாருமே கவனத்தில் கொள்வது இல்லை விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையுடன்

எதிர்காலத்தில் பெண் தலமைத்துவ குடும்பங்களை சமூகத்தில் முதன்நிலைக்கு கொண்டு வருவதற்கு பாடுபடுவோம் என தெரிவித்தார்.

வவுனியாவில் கூடிய புலிகள்
வவுனியாவில் கூடிய புலிகள்
Posted in இலங்கை செய்திகள்

விசமிகளினால் தீயில் எரிந்த 30 ஏக்கர் காடு

விசமிகளினால் தீயில் எரிந்த 30 ஏக்கர் காடு

இலங்கை – கடன் பகுதியில் உள்ள வனப்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது ,இதில் சுமார் 30 ஏக்கர் காடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன

இந்த தீ பரவலால் திட்டமிடப்பட்டு சில விஷமிகளினால் மேற்கொள்ள பட்டுள்ளதாக ,தெரிவிக்க படுகிறது ,

மகிந்த ஆட்சியின் பொழுது இவ்வாறு காடுகள் தீப்பற்றி எரிவது வழமையான ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய 4299 இராணுவத்தினர் மீளவும் இராணுவத்தில் இணைவு

தப்பி ஓடிய 4299 இராணுவத்தினர் மீளவும் இராணுவத்தில் இணைவு

இலங்கையில் விடுதலை புலிகளுடன் மேற்கொள்ள பட்ட யுத்தத்தின் பொழுது உயிர் அச்சம் கருதி இராணுவத்தில்

இருந்து தப்பி ஓடிய சுமார் 4299 இராணுவத்தினர் மீளவும் இணைந்துள்ளதாகக் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது

இவ்வாறு தப்பி ஓடியவர்களுக்கு வழங்க பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்த இராணுவ சிப்பாய்கள் மீளவும் இராணுவத்தில் இணைந்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

குழியில் விழுந்த யானை – மீட்பு பணிகள் தீவிரம்

குழியில் விழுந்த யானை – மீட்பு பணிகள் தீவிரம்

இலங்கை – கொக்கிராவ் பகுதியில் யானை குட்டி ஒன்று குழியில் வீழ்ந்துள்ளது ,இவ்விரு குழியில் வீழ்ந்த யானை

குட்டியை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

தாய் யானை மக்களை தகக்கிட முற்பட்ட பொழுது வெடிகள் எறிந்து விரட்ட பட்டு பின்னர் குட்டி மீட்க பட்டுள்ளது

குழியில் விழுந்த யானை
குழியில் விழுந்த யானை