Author: நிருபர் காவலன்
தப்பி ஓடிய 776 இராணுவத்தினர் மீள இணைவு
தப்பி ஓடிய 776 இராணுவத்தினர் மீள இணைவு
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய சுமார் 772 இராணுவத்தினர் மீளவும் படையில் இணைந்துள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது
ஜனாதிபதியினால வழங்க பட்ட பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் மீளவும் படையில் இணைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
புலிகளுடனான போரில் தாக்கு பிடிக்க முடியாது தமது உயிர்களை பாதுகாத்து கொள்ளும் முகமாக இவர்கள் தப்பி ஓடி இருந்தமை குறிப்பிட தக்கது
குவைத்தில் இருந்து 46 வீட்டுப் பணிபெண்கள் நாடு திரும்பினர்
குவைத்தில் இருந்து 46 வீட்டுப் பணிபெண்கள் நாடு திரும்பினர்
குவைட் நாட்டிற்கு வீட்டுப்பணிப் பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 46 இலங்கைப்
பணிப்பெண்கள் இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.
இவர்களில் அதிகமானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தான் பணிபுரிந்த வீடுகளின் எஜமான்களால் இடம்பெற்ற துன்புறுத்தல்கள், இன்னல்களை தொடர்ந்தும்
பொறுத்துக் கொள்ள முடியாமல் குறித்த வீடுகளில் இருந்து தப்பிச் சென்ற போது அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் அவர்களில் 13 பேர் அந்நாட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும்
ஏனைய 33 பேரும் குவைட்டிற்கான இலங்கை தூதரகத்தின் “சுரக்ஷா” தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த நிலையிலும், தற்காலிக கடவுச்சீட்டின் கீழ் இந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலை 6.20 மணியளவில் குவைட்டில் இருந்து வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான
யூ.எல்.230 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.

திடீர் நோய் 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
திடீர் நோய் 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கந்தகெடிய, கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்கள் இன்று
(14) காலை கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலையின் வகுப்பறை ஒன்றை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது மாணவர்களின் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள்
ஏற்பட தொடங்கியதன் காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
12 மாணவர்களும் மற்றும் 3 மாணவிகளும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி காமினி மத்துமகே அவர்களை தொடர்பு கொண்டு வினவியதில், மாணவர்களுக்கு ஒவ்வாமை
ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சஜித் ரணில் இன்று சந்திப்பு – என்ன பேச போறாங்க …?
சஜித் ரணில் இன்று சந்திப்பு – என்ன பேச போறாங்க …?
இலங்கையின் யானைக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு இடையில் இன்று அவசர சந்திப்பு இடம்பெறுகிறது .
எதிர்வரும் தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிடும் சஜித் யானை தலைவருடன் என்ன பேச போறார் என்ற கேள்வியே பரவலாக எழுந்துள்ளது
குள்ள நரி ரணில் இவரை தேர்தலில் வெல்ல விடுவாரா என்பதே இனறைய கேள்வியாக உள்ளது video

உதயங்க வீரதுங்க இலங்கை வந்தார் – விசாரணைகள் தீவிரமாம்
உதயங்க வீரதுங்க இலங்கை வந்தார் – விசாரணைகள் தீவிரமாம்
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று இலங்கை வந்துளளர்
இலங்கை வந்துள்ள இவரிடம் வான்நிலையத்தில் வைத்து குற்ற புலனைவு பிரிவினர் டெஹெவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
வருகை தந்த இவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த படலாம் என கருத படுகிறது
.இவரது வழக்கை தள்ளுபடி செய்து விடுதலை அளிக்கும் நகர்வில் கோட்டா ஈடுபட்டுள்ளதாக நம்ப படுகிறது
வவுனியாவில் ஆலயத்திற்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா -பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது .
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பொழுது பிச்சை எடுத்து தனது வாழ்வை ஒட்டி வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் தெரியவரவிலை
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்
தினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்
நம்மிடம் உள்ள சில பழக்க வழக்கங்கள் கூட புற்று நோய் வர காரணமாக அமையும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
தினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்
புற்றுநோய்
நம்மிடம் உள்ள சில பழக்க வழக்கங்கள் கூட புற்று நோய் வர காரணமாக அமையும். அவற்றில் சிலது உணவுப்பழக்கமாக கூட இருக்கலாம். சில அழகுப்
பொருட்களையும் நாம் தொடர்ந்து உபயோகிக்கும் போது நமக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. அதை பற்றி இங்கு காண்போம்.
புற்று நோய் எப்படி ஏற்படுகிறது என அனைவருக்கும் சந்தேகம் இருக்கும். நம் டி,என்,ஏ வில் ஏற்படும் மரபணு மாற்றத்தின் காரணமாகதான் புற்று நோய் ஏற்படுகிறது.
நம்முடைய செல்களானது கட்டுப்பாடற்ற முறையில் வளர்ந்து முறியவும் செய்யும். அப்படி முறியும் செல்கள்
கட்டிகளாக வளரும் போது தான் புற்று நோய் நமக்கு ஏற்படுகிறது. இது சில சமயங்களில் பரம்பரை நோயாகவும் மாறி விடுகிறது.
எனவே கீழே உள்ள செயலில் நீங்கள் தொடர்ச்சியாக ஏதேனும் செய்தால் உங்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
- சிகரெட் குடிப்பது தவறு என்றும் தெரிந்தும், சிலர் அதற்கு அடிமையாகி உள்ளனர். இதிலும் சந்தைக்கும் இ சிகரெட் என்ற ஒன்றை புதுசாக
- அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த இ சிகரெட்டுகளில் புகை மற்றும் தார் போன்ற பொருள்கள் இல்லை
- என்றாலும், நிகோடின் மற்றும் பிற சுவைகளை அது தருகிறது. எனவே சிகரெட் மற்றும் ஏ-சிகரெட்
- குடிப்பர்வர்களுக்கு புற்றுநோய் வர கண்டிப்பாக வாய்ப்புள்ளது. எப்பொழுதாவது ஒரு முறை பயன்படுத்தினால் சரி, இதற்கு அடிமையாக இருப்பவர்களுக்கு புற்று நோய் வரும் அபாயம் உள்ளது.
- ஹாம், பன்றி, சலாமி போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்ணும் போது நமக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவை டைப் ஒன்று புற்றுநோயை உருவாக்கி விடும். சிவப்பு இறைச்சி குழுவான மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, மற்றும் பன்றி இறைச்சி ஆகிய உணவுகள் புகையூட்டப்பட்டும், பதப்படுத்தி உண்ணும் போதும் டைப் 2 புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
- சூடான தேநீர் மற்றும் காபி நாம் அருந்துவதால் நம் உணவுக்குழாய் பாதிப்படைகிறது. இதனால் புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 700 மிலி டீ அல்லது காபி குடிப்பதால், உணவுகுழாய் பாதிக்கப்பட்டு 90% புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
- தங்கள் முடியை அழகுபடுத்துவதற்காகவும், தங்கள் தோற்றத்தை வேறுபடுத்தி காண்பிக்கவும் பெரும்பாலான பெண்கள் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இவற்றில் சில நிரந்தரமாக தலையில் ஒட்டிக்கொள்ளும். முடியின் ஸ்டைலை மாற்றுவதற்கு ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் பயன்படுத்துவதால் முடியின் வடிவமைப்பே மாறிவிடுகிறது. இதை அதிகமாக உபயோகிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா
மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா
பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் நடித்திருந்த விஷால் – ஆர்யா, தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர்.
மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா
ஆர்யா, விஷால்
ஆக்ஷன்’ படத்தைத் தொடர்ந்து ‘சக்ரா’ மற்றும் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதில் ‘சக்ரா’ படத்தின் இறுதிக்கட்டப்
படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ‘துப்பறிவாளன் 2’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டும்
முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஷால்.
இதனைத் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கவும் உள்ளார். தற்போது இந்தப் படத்தில் விஷாலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று
வருகிறது. இதில் நாயகியாக ரீத்து வர்மாவும், வில்லனாக ஆர்யாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யா, விஷால்
விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் நடித்துள்ளனர். அந்தப்
படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படமாக ஆனந்த் ஷங்கர் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.
கமல், சிவாஜியை மிஞ்சிய விக்ரம்
கமல், சிவாஜியை மிஞ்சிய விக்ரம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் அதிக வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கமல், சிவாஜியை மிஞ்சிய விக்ரம்
விக்ரம்
நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது
விக்ரம், ‘கோப்ரா’ படத்தில் 12 வேடங்களில் நடிக்கிறார். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை
இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும்
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் பிப்ரவரி 14-ந் தேதியான காதலர்
தினத்தன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விக்ரம்
ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையெடுக்கும்- செல்வம் எம்.பி.
அரசுக்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையெடுக்கும்- செல்வம் எம்.பி.
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதனூடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும்
சோதனைச்சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி
தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வட மாகாணம் இன்று இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம்
ஆட்சிப்பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
வடக்கில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் ஓமந்தை, கொள்ளர் புளியங்குளம், மாங்குளம், ஆனையிறவு என அனைத்து இடங்களிலும்
சோதனைக்குட்படுத்தப்படுவதுடன் மக்களும் பேரூந்துகளில் இருந்து இறக்கி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையை சிங்களப்பகுதிகளில் செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாரா? மதவாச்சியில் வைத்து சோதனை செய்து காட்டட்டும். சிங்கள மக்கள் தமக்கு எதிராக
கொந்தளிப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே இந்த அரசாங்கம் தமிழர் பகுதிகளில் இவ்வாறான இராணுவ
சோதனைச்சாவடிக்களை அமைத்து தமிழ் மக்களை இன்னல் படுத்துகின்றது.
எனவே எதிர்வரும் காலங்களில் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் மக்கள் பிரதிநிதிகளாக தமிழர்கள்
உருவாக்குவார்களேயானால் இராணுவ சோதனைச்சாவடிகளே மிச்சமாக இருக்கும் என்பதனை எமது தமிழ் மக்கள் உணர வேண்டும்.
எப்போதும் தமிழ் மக்களுக்கான துணையாக இருக்கப்போவது தமிழ் தேசியக்கூட்டப்பினரே என்பதனை மக்கள் காலத்திற்கு காலம் உணர்த்தி வரும் நிலையிலேயே
தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இடப்பெற்ற குழப்ப நிலையை தடுத்து நிறுத்திய வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் photo
வவுனியாவில் இடப்பெற்ற குழப்ப நிலையை தடுத்து நிறுத்திய வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்
வவுனியா 04கட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாம் மைதானமாக பயன்படுத்திய பகுதியை இன்று
(வியாழக்கிழமை) துப்புரவாக்க சென்றபோது வனவள திணைக்களம் அதற்கு தடையை ஏற்படுத்தியமையால் சற்றுநேரம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியை விளையாட்டு மைதானமாக
பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் 2007 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்த நிலையில் அதில் சிறிய இராணுவசாவடி
ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த பகுதியை அபகரிப்பதற்கு பலர் முயற்சி செய்தபோதும் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது குறித்த பகுதி பற்றை வளர்ந்து காடுகளாக இருப்பதை அவதானித்த இளைஞர்கள் அவ்
காணியை மீண்டும் மைதானமாக பயன்படுத்துவதற்காக நேற்றையதினம் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி அதனை துப்புரவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் போது அப்பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள், இது தமது திணைக்களத்திற்கு உரிய பகுதி
என்று தடை ஏற்படுத்தியமையால் இளைஞர்களிற்கும் அவர்களிற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.
இன்று காலை (13.02.2020) சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்ன வருகை தந்து இரு தரப்புடனும்
கலந்துரையாடிய குறித்த பகுதியை மைதானமாக பயன்படுத்துவதற்கான வேண்டுகோளை எழுத்து மூலமாக வழங்குமாறு தெரிவித்ததுடன், அதனை மாவட்ட
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இன்று முன்வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டமைக்கமைய சுமூகமான நிலை ஏற்பட்டது.






வவுனியாவில் தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறந்து வைப்பு photo
வவுனியாவில் தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்கம் திறந்து வைப்பு photo
தென்னை பயிர்ச்செய்கையாளர் அபிவிருத்தி சங்க அலுவலகம் வவுனியா சமயபுரம் கிராமத்தில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் இ.யோ.கேமன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னைபயிர்செய்கை சபையின் வலய இணைப்பாளர்
ஜெயந்த பமுனுஆராட்சி முதன்மை அதிதியாக கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
கிராம மட்டங்களில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காகவும் தென்னையின் மூலம்
மேற்கொள்ளப்படும் உற்பத்திகளை அதிகரித்து அதனால் வரக்கூடிய உப வருமானங்களை பெருக்குவதுடன், தொழில்
வாய்ப்பினை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு குறித்த சங்கம் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் உதயச்சந்திரன், தென்னை
அபிவிருத்தி சங்கங்களின் இணைப்பாளர் மா.ரோய் ஜெயக்குமார், பயிர்ச்செய்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




வியட்னாமில் 10,000 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிப்பு
வியட்னாமில் 10,000 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிப்பு
வியட்னாமில் இதுவரை சுமார் பத்தாயிரம் பேர் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் ,அந்த
நோயின் அறிகுறியில் இவர்கள் சிக்கியுள்ளனர் என அந்த நாட்டு சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது
மேலும் இதுவரை 19 பேர் அந்த நோயின் தாக்கத்தில் உள்ளது கண்டு பிடிக்க பட்டுளள்து ,மேலும் இந்த நோயின்
தாக்குதல் எதிரொலி அதிகரிக்க படும் என அஞ்ச படுகிறது
இந்த நோய் தாக்கத்தில் சிக்கி இதுவரை லட்ச்சக்
கணக்கான மக்கள் பலியாகியுள்ளதாகவும் சீனா அதனை மறைத்து வருவதாக குற்றம் சுமத்த படுகிறது

கொரனோ வைரஸ் தாக்குதல் 1355 பேர் பலி – ஒரே நாளில் 252 பலியான அதிர்ச்சி
கொரனோ வைரஸ் தாக்குதல் 1355 பேர் பலி – ஒரே நாளில் 252 பலியான அதிர்ச்சி
சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 1355 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 48 ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர் .
ஆனால் குவான் மாகாணத்தில் ஐந்து மில்லியன் மக்கள்
வரை காணமல் போயுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.
நேற்று மட்டும் ஒரே நாளில் 252 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது
மனிதர்களை சுட்டு கொன்று சீனா அரசு எரித்து வரும்
காட்சிகள் வெளியாகியுள்ளன ,இவை பார்ப்பவர்களை மிரள வைக்கிறது
ஆனால் சீனா அரசோ அதனை மறுத்து வருகிறது

வாடகைக்கு வீட்டில் இருந்த பெண்ணை தும்பு தடியால் தாக்கிய பெண்
வாடகைக்கு வீட்டில் இருந்த பெண்ணை தும்பு தடியால் தாக்கிய பெண்
இலங்கை – நுகோடை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு அமர்த்திய பெண் ஒருவர் மாதம் இருபதாயிரம்
ரூபா தொகையை செலுத்தியுள்ளார் ,இந்த பணத்தை அவர் மொத்தமாக செலுத்தியுள்ளார் .
இதனை அடுத்து தினம் தோறும் வீட்டுக்கு வரும் அந்த வீட்டு உரிமையாளரான பெண்மணி அந்த பெண் வீடடை சரியாக வைத்து கொள்ளவில்லை என குறை கூறி வந்துள்ளார் .
இதனால் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்து அந்த பெண்ணை தும்பு தடி கொண்டு தாக்கியுள்ளார் .
அவர் அடித்த அடியில் மயக்கும் உற்று வீழ்ந்த பெண்ணை அயலவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர் .இவர்
வழங்கிய முறைப்படடினை அடுத்து வழக்கு இடம்பெற்று வந்தது .
தீர்ப்பு வழங்க பட்டது ,அதில் எயமானிக்கு ஆறு மாதங்கள் சிறை தணடனையும் ஒரு லட்சம் ரூபா பாதிக்க பட்ட
பெண்ணுக்கு நாஷ்டா ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது

நுவரெலியா – கட்டன் பகுதியில் காடுகள் மீண்டும் எரிகிறது
நுவரெலியா – கட்டன் பகுதியில் காடுகள் மீண்டும் எரிகிறது
இலங்கை நுவரெலியா காட்டன் பகுதியில் உள்ள
மலைக்காடுகள் மீது விஷமிகள் தீ வைக்க பட்டு அது மீண்டும் எரிந்து வருகிறது ,
மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்று வருகிறது ,
மகிந்த ஆட்சியில் இவ்விதம் காடுகள் தொடராக எரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
கிறிஸ் மனிதர்கள் ,மர்ம மனிதர் ,ஆவா குழு போன்றவற்றை கோட்டா உருவாக்கி விட்டுள்ள நிலையில்
இந்த காடுகளும் எரிந்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

மூன்று காவல்துறை அதிகரிகளுக்கு திடீர் இடமாற்றம்
மூன்று காவல்துறை அதிகரிகளுக்கு திடீர் இடமாற்றம்
இலங்கையில் மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் செய்ய பட்டுள்ளது ,
போலீஸ் ஆணையத்தின் அதிரடி உத்தரவில் உடனடி
நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மாற்றங்கள்
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பெரட்டாசி தோட்டத்திற்கு மேலும் ஒரு அபிவிருத்தி திட்டம் photo
பெரட்டாசி தோட்டத்திற்கு மேலும் ஒரு அபிவிருத்தி திட்டம் photo
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவிற்கு நுவரெலியா
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின்
பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்
நிர்மாணிக்கபட்ட சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு பிரதம
அதிதியாக கலந்துக் கொண்டு கையளிக்கப்பட்டது. இதன்
பொழுது இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன



பிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைப்பது எப்படி?
பிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைப்பது எப்படி?
தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.
பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?
பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?
பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. சில தாய்மார்களுக்கு தொப்பை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத்
தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.
இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், பிரெட் இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் தானே… இதெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பழ உணவுகளுக்கு மாறுங்கள்.
காலை உணவு பழங்களாக சாப்பிட்டு பாருங்கள். கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும்.
எண்ணற்ற பழங்கள் இருக்கின்றன. பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.
கொள்ளு ரசம் வாரம் ஒரு நாள் வைத்து சாப்பிட்டு வர, தொப்பைக் கரையும். அதேசமயம் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். கொள்ளு துவையல் அல்லது
கொள்ளு சுண்டல் கூட சாப்பிடலாம். கவனம், கொள்ளு சூடு என்பதால் வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடலாம்.
மாதவிடாய் தொல்லை இருப்பவர்கள் கொள்ளு சாப்பி மருத்துவர் அனுமதியுடன் சாப்பிடலாம்.
எலுமிச்சை தோலை நறுக்கி, சின்ன சின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 1 ½ டம்ளர் தண்ணீரில் இதைப்
போட்டு கொதிக்க வைக்கவும். ¾ டம்ளராக சுண்டியதும் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து
பருகவும். கொழுப்பு, அடைப்பு போன்றவை நீங்கிவிடும். கழிவுகள் வெளியேறும். ரத்தம் சுத்தமாகும், தொப்பைக் குறையும்.
தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி, சிறுதானியங்கள், பாலிஷ் செய்யப்படாத
அரிசியைத் தொட்டு சாப்பிடுங்கள். காய்கறிகள்தான் பிரதான உணவு. அரிசி போன்ற தானியங்கள் குறைவான அளவாக இருக்க வேண்டும்.
பாலை விட அதிக கால்சியம் தரும் உணவுகள் நிறையவே உள்ளன. கேழ்வரகு, எள்ளு, ஆரஞ்சு, புரோக்கோலி,
வெண்டைக்காய், அத்தி, காராமணி, பாதாம் இன்னும் பல… பால் இல்லாத டீ, காபி சாத்தியம் என்றால் அதைக்
குடியுங்கள். ஆசைக்கு வேண்டுமென்றால் ஒரு டம்ளர் நீர்த்த மோர் குடிக்கலாம்.
காய்கறி, கீரைகள், பழங்களிலிருந்து உங்களுக்கு நார்ச்சத்துகள் கிடைக்கும். ஒரு நாளைக்குத் தேவையான 25 கிராம் நார்ச்சத்து கிடைக்காததால் கொழுப்பு சேர்கிறது.
எனவே காய்கறிகளும் பழங்களும் பிரதான உணவாக்கிக் கொள்ளுங்கள். தினசரி கீரை அல்லது வாரம் 5 முறை கீரை சாப்பிடுங்கள்.
பாயில் அல்லது யோகா மேட்டில் நேராக படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையைத் தொட்டவாறு இருக்கட்டும். 2-3 இன்ச் அளவுக்கு இரு கால்களையும் முட்டி
மடங்காமல் தூக்கவும். உயரத்தில் காலைத் தூக்கத் தேவையில்லை. வயிறு நடுங்குவதை உங்களால் உணர முடியும். முடியாத போது காலை கீழே இறக்கி வைத்துவிட்டு
ஓய்வெடுங்கள். பிறகு மீண்டும் பயிற்சியை செய்யுங்கள். இதுபோல 5 முறை செய்யவும். வெறும் வயிற்றில், காலை
மற்றும் மாலை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால் தொப்பைக் குறையும்.
அருகில் உள்ள யோகா மையத்துக்கு செல்லுங்கள். மூச்சு பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாள்தோறும் மூச்சு
பயிற்சி செய்யுங்கள். தொப்பை இருக்கவே இருக்காது. மீண்டும் கொழுப்பு உடலிலும் சேராது.
அந்த நடிகையை காப்பியடித்த சமந்தா
அந்த நடிகையை காப்பியடித்த சமந்தா
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் நடிகை கரீனா கபூரை காப்பியடித்ததாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

கரீனா கபூர், சமந்தாவிஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடித்து வெளியான 96 படத்தின், தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த்
மற்றும் சமந்தா நடித்துள்ளனர். பிரேம் குமார் இயக்கி உள்ளார். படம் பிப்ரவரி 7ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்
கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரமோஷன் பணிகளில் சமந்தா தீவிரமாக செயல்பட்டார்.

அதன் ஒரு பகுதியாக ஜானு என பிரிண்ட் செய்யப்பட்ட புடவையை அணிந்து நடிகை சமந்தா காட்சி அளிக்கும்
புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இது ரசிகர்கள கவர்ந்துள்ளது. இருந்தபோதும், அது ஏற்கனவே
நடிகை கரீனா கபூரால் செய்யப்பட்ட ஒரு விஷயம் என, சிலர் இதை கிண்டலும் செய்கின்றனர்.







