கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா – தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு
கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு
உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை
- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது
- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்
- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது
















