முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.
கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.
இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.
எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












