திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ்
திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ் ,கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மாதம்பே-கவுடுவாவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார் 50 பயணிகள் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பஸ் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

- கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

- போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்

- பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்








