மீள வருவாயா

மீள வருவாயா
Spread the love

மீள வருவாயா

உன்னைத் தானே தேடுறேன்
உயிரே உன்னால் நானும் வாடுறேன்
கண்ணுக்குள்ள வந்தவளே
காட்சிகளாய் வீழ்ந்தவளே

என்னை மறந்து போனயே
ஏனோ வாடா வைத்தாயோ
தூக்கம் இல்லா தவிக்கிறேன்
துளியாய் கண்ணீர் வடிக்கிறேன்

மறந்து போவதற்கா
மனமே என்னை காதலித்தாய்
எப்படித்தான் முடிந்ததோ
என்னை இன்று மறப்பதற்கு

நான் செய்த தவறென்ன
நீ எனக்கு சொல்லாயா
என்னை புலம்ப வைத்து
என்னை விட்டு போனாயா

நினைத்து பார்த்து பார்த்து
நானும் அழுது தொலைக்கிறேன்
மீள வருவாயா
எனக்கு உயிர் தருவாயா ..!

ஆக்கம் 07-09-2025
வன்னி மைந்தன் – லண்டன்
0044 7536 707793