அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்
அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்
அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனி மழை பொழிவினால் ,
50 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 10 மில்லியன் மக்கள் ,மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .
அதிக குளிர் நிலவுவதால் ,மேலதிகமாக,
ஐந்து லட்சம் போர்வைகள் வழங்க பட்டுள்ளன .
எனினும் மக்களை காப்பாற்ற முடியா நிலையில்,
அமெரிக்கா சிக்கி தவித்து வருகிறது .
வீடுகள் மேல் மூன்று அடிக்கு மேல் சினோ குவியலாக காணப்படுவதால் ,
அதிக குளிரில் பல வீடுகள் சிக்கியுள்ளன .
வயதானவர் முதல் சிறுவர்கள் வரை ,
இந்த சினோவின் அதிக குளிர் காரணமாக பலியாகி வருகின்றனர் .
கடந்த ஆறு நாட்களில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இவ்வாறே காலநிலை பயணித்தால்,
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்
சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர்களது உறவினர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் அங்குலான பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த உறவினர்களுடன் சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இவ்வாறு தப்பிச் சென்ற குறித்த இரு சந்தேகநபர்களும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவினர்
ஜோன்டியா மற்றும் கலயா என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைத்தொலைபேசி தொடர்பில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து அதனை சமரசம் செய்து கொள்வதற்காக அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் கைது செய்ததாகவும், பின்னர் அவர்களது உறவினர்கள் குழுவொன்று வந்து சந்தேக நபர்களை அழைத்துச் செல்ல முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன்போது அங்கு பதற்றமான சூழல் உருவானதுடன், நிலைமையை கட்டுப்படுத்த முற்பட்ட போது அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.
அவர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பதற்றமான நிலைமையைக் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின்
அதிகாரிகளும் அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இரட்டைக் குடியுரிமையைப் பெற பெருமளவான கோரிக்கை
இரட்டைக் குடியுரிமையைப் பெற பெருமளவான கோரிக்கை
2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேர் உட்பட இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன்,
நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இதன்படி, குறித்த நபர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மண் சரிவு எச்சரிக்கை
மண் சரிவு எச்சரிக்கை
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த நிலை தொடர்நதும் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் சிரேஷ்ட புவியியல் விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் அறிவிக்கப்பட்டிருந்த அனர்த்த எச்சரிக்கை நேற்று (27) இரவு 9.00 மணி தொடக்கம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவு எச்சரிக்கை
இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பர, உடுநுவர, கங்க இயல கோரல, பாத்த ஹேவாஹெட்ட, கங்கவட்ட கோரல, அக்குரண ஹரிஷ்பத்துவ, தும்பனே, பூஜாப்பிட்டி மற்றும் யட்டிநுவர ஆகிய பிரதேச செயலாளர்
பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, ரம்புக்கண, மாவனெல்லை, புலத்கோப்பிட்டி, கேகாலை, அரநாயக்க மற்றும்
ருவான்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, பொல்காவலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை
மாவட்டத்தில் ரத்தொட்ட, மாத்தளை, யட்டவத்த, உக்குவெல்ல, நாவுல, லக்கல, பல்லேகம மற்றும் பல்லேகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மழையில் குளிக்கும் இலங்கை மக்கள் அவதி
மழையில் குளிக்கும் இலங்கை மக்கள் அவதி
இலங்கை நாடு தழுவிய ரீதியில் பலத்த மழை பொழிவு ,இடம்பெற்ற வண்னம் உள்ளன .
வட கிழக்கு பகுதியில் கனத்த மழை பொழிவு இடம் பெறுகிறது .
இந்த சீரற்ற காலநிலையால் மக்கள் வாழ்விடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது ,மக்கள் பெரிதும் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு…
முதலீட்டு ஈர்ப்பு, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் புதிய இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்து….
பாரம்பரிய இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு உலகம் முன்னுரிமை அளித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையின் புதிய தூதுவர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் இடையில் (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் 16 புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் கலந்துகொண்டனர்.
முதலீட்டை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், அனைவருடனும் நட்புறவான, நடுநிலையான அணிசேரா நாடு என்ற நற்பெயரை மேம்படுத்தும் நோக்குடன் செயற்பட வேண்டும் என புதிய தூதுவர்களிடம் பிரதமர் கூறினார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர், உதவிகள் மற்றும் கடனின் மீது தங்கியிருப்பதைப் பார்க்கிலும் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் துரித
அபிவிருத்தியை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு கூட்டாண்மைக்காக உழைக்குமாறு இலங்கை தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
அதிக முதலீடு, வேலை வாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களது சங்கங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
விரைவான பொருளாதார மீட்சியை அடைந்து, விவசாயம், கைத்தொழில், தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், உணவில் தன்னிறைவு அடைவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் தாபிக்கப்பட்ட முதலீட்டு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்களுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் வெளிவிவகார செயலாளர்களான சித்ராங்கனி வாகீஸ்வர (அவுஸ்திரேலியா) மற்றும் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொழம்பகே (இந்தோனேசியா) மற்றும் மனிஷா குணசேகர (பிரான்ஸ்),
எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. மெண்டிஸ் (பஹ்ரைன்), கலாநிதி ஏ.எஸ்.யு. மெண்டிஸ் (வியட்நாம்), வருணி முத்துக்குமாரண (ஜெர்மனி), கபில ஜயவீர (லெபனான்), எம்.எச்.எம்.என். பண்டார (இஸ்ரேல்), கே.கே.தெஷாந்த குமாரசிறி
(எத்தியோப்பியா), கலாநிதி சானக எச்.தல்பஹேவா (பிலிப்பைன்ஸ்), பிரியங்கிகா விஜேகுணசேகர (ஜோர்தான்), பி.காண்டீபன் (குவைத்), ஹிமாலி அருணதிலக்க (ஜெனீவா),
உதய இந்திரரத்ன (ஐக்கிய அரபு இராச்சியம்) மற்றும் சந்தி சமரசிங்க (மெல்பர்ன்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தந்தையை அடித்து கொன்ற மகன்
தந்தையை அடித்து கொன்ற மகன்
மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவர் நேற்று (25) இரவு மனைவியுடன் தகராறு செய்ததாக தெரியவந்துள்ளது.
தந்தையை அடித்து கொன்ற மகன்
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த தந்தையின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கொலையாளியின் மகன் இன்று (26) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் பறந்த கோட்டபாய ராஜபக்ச
அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் பறந்த கோட்டபாய ராஜபக்ச
இன்று காலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் அமெரிக்கா சென்றுள்ளனர் .
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ச, மருமகள் செவ்வந்தி ராஜபக்ச, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக்குழந்தைகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.
தேர்தல் வரும் நிலையில் ,தாம் கைது செய்யப்படலாம் என்கின்ற பீதியில் அமெரிக்கா பறந்துள்ளார் கோட்டபாய .
அமெரிக்காவில் தங்கியுள்ள கோட்டாபய, போர்க்குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய தென்கொரியா
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய தென்கொரியா
தென்கொரியா தமது போர் விமானம் ஒன்றை தாமே சுட்டு வீழ்த்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .
வடகொரியாவின் இந்த உளவு விமானங்கள் ,தென்கொரியாவுக்குள் நுளைந்தன .
இதனை கண்ணுற்ற தென் கொரியா இராணுவத்தினர், நூற்றுக்கு மேற்பட்ட குண்டுகளை சப்பி துப்பின .
அவ்வேளை வடகொரியா விமானத்தை தேடி பறந்த தென்கொரியா விமானத்தில் ஒன்றை ,தவறுதலாக எதிரி விமானம் என நினைத்து தென்கொரியா சுட்டு வீழ்த்தியுள்ளது .
எனினும் தமது விமானம் விபத்தில் சிக்கியது என்கின்ற கதை வசனம் எழுதி ,தென்கொரியா செய்தியை வெளியிட்டுள்ளது .
தாய்வானுக்குள் நுழைந்த 71 சீனா விமானங்கள் 7 போர் கப்பல்கள்
தாய்வானுக்குள் நுழைந்த 71 சீனா விமானங்கள் 7 போர் கப்பல்கள்
தாய்வானுக்குள் சீனாவின் 71 விமானங்கள் மற்றும் ஏழு கப்பல்கள் என்பன நுழைந்து சென்றுள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் இந்த அத்து மீறல் இடம்பெற்றுள்ளதாக தாய்வான் அறிவித்துள்ளது .
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தெரிவித்து வரும் நிலையில் ,இந்த அத்து மீறல் மிரட்டல் நடவடிக்கையை ,சீனா மேற்கொண்டுள்ளது .
சீனாவின் இந்த அத்து மீறலினால் ,தாய்வான் ,சீனாவுக்கு இடையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது .
ரசியா இலங்கைக்கு இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பம்
ரசியா இலங்கைக்கு இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பம்
ரசியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையின் உல்லாச பயண துறையை கட்டி எழுப்பும் நோக்குடன் ,இந்த Red Wings விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வராம் தோறும் இரண்டு முறை இந்த Red Wings சேவைகள் நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது .
இந்த Red Wings சேவைகள் December 28, 2022 முதல் ஆரம்பிக்க படும் என தெரிவிக்க படுகிறது.
வடகொரியா விமானங்கள் மீது தென்கொரியா தாக்குதல் VIDEO
வடகொரியா விமானங்கள் மீது தென்கொரியா தாக்குதல் VIDEO
தென்கொரியா எல்லைக்குள் நுழைந்த வடகொரியா விமானங்கள் மீது தென்கொரியா தாக்குதல் ,ரசியா விமான தளம் மீது உக்கிரேன் தாக்குதல் ,விமானம் சுட்டு வீழ்த்தல் ,ரசியா படைகள் காயம் .
காணொளியை முழுமையாக பார்க்க பத்து செய்திகள் உள்ளே
இதில்; அழுத்தி புதிய காணொளி செய்திகள் பார்க்க
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
லண்டன் Abbey Wood காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனை வேட்டையின் பொழுது ஆயுதங்கள் சிக்கின .
மிக பெரும் ஆயுத குழுக்கள் ,ஆயுதங்களை ,ஆயுத தொழில் சாலைகளில் கொள்வனவு செய்து அதனை ,
குழுக்களுக்கு விற்று வந்துள்ளனர் .
இவ்விதமான தகவலை மேப்பம் பிடித்த குற்ற தடுப்பு காவல்துறையினர் ,
சந்தேகத்திற்கிடமான woodland. பகுதியை சுற்றி வளைத்தனர் .
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
இந்த முற்றுகையின் பொழுது எட்டு கை துப்பாக்கிகள் ,
மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன ,புதிய பொதிகளுடன் மீட்க பட்டன .
ஆயுதங்கள் மீட்க பட்டதை அடுத்து ,
தொடர் புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இவர்களினால் ஆயுதங்கள் வழங்க பட்ட குழுக்களை,
மடக்கி பிடிக்கும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
குறித்த துப்பாக்கி மீட்பு காட்சிகளை ,
போலீசார் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர் .

மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
அமெரிக்காவில் நத்தார் தினமான காலை வேளை, தோர்ன்டன், கொலராடோ உள்ள ,யெகோவா தேவாலயத்தில் கணவன் தனது மனைவியை ,
சுட்டுக் கொன்றுவிட்டு ,துப்பாக்கியால் சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் ,
சோதனைகளை நடத்தினர் ,
அப்பொழுது அங்கு சில வெடி பொருள் சாதனங்கள் காணப்பட்டன .
மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
இந்த படுகொலை சம்பவத்திற்கான ,
கரணம் தெரிவிக்கப்படவில்லை .
தொடர்ந்து குற்றப்புலனாய்வு துறையினர்
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
ஜேசு பாலன் பிறப்பை, குதுகலமாக கொண்டாடி கொண்டிருந்த மக்களுக்கு ,
இந்த் சூட்டு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி
பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி
வட மேற்கு ஸ்பெயின் பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்குள்,
பயணிகள் பேரூந்து வீழ்ந்து நொறுங்கியது .
இந்த விபத்தில் ஆறுபேர் பலியாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
ஸ்பெயின் நாட்டின் Lugo பகுதியில் இருந்து Vigo பகுதிக்கு
பயணித்து கொண்டிருந்த பேரூந்து ,ஆற்றுக்கு மேலால் அமைக்க பட்ட ,
உயரமான பாலத்தை கடக்க முற்பட்ட வேளை ,
சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து ,பாலத்தின் பாதுகாப்பு கம்பிகளை
உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கியது .
பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி
இதன் பொழுது 63 வயதுடைய சாரதி உள்ளிட்ட
நால்வர் நீரில் அடித்து செல்ல பட்ட நிலையில்,
தீயணைப்பு வீரர்களினால் காப்பாற்ற பட்டு ,
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
விபத்தினை ஏற்படுத்திய சாரதி மீது,
நடத்த பட்ட சோதனையில் ,அவர் மதுவோ ,போதைவஸ்துக்களோ ,
அருந்தி இருக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து ,
தப்பியவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இலங்கை நூரைச்சேலை பகுதியில் வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப் பட்டுள்ளார் .
உள்ளக முரண்பாடு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிவடைந்துள்ளது .
இருவரும் அதிக போதையில் காணப்பட்ட நிலையில் ,இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது .
பலியானவர் முப்பத்தி ஐந்து வயதுடைய, ஆண் என அடையாளம் காணப் பட்டுள்ளார் .
இந்த கொலையினை புரிந்த ஐம்பத்தி நான்கு வயதுடைய ,நபர் கைது செய்யப்பட்டு ,நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளார் .
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ,புத்தளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் காரணமாக இதுவரை 1500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம்களில், தங்க வைக்க பட்டு பராமரிக்க பட்டு வருகின்றனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பருவகால மழை காரணமாக குளங்கள் நிரம்பி வழிகின்றன .
இதனால் குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளன .
தாழ்நில பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள், வெள்ள நீர் புகுந்ததினால் ,மக்கள் பாதிக்க பட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
உயிர் ,உடமை இழப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .பரவலாக இலங்கை எங்கும் இந்த வெள்ள பெருக்கு காணப்படுகிறது .
பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவசர நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது .
மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
இலங்கை மாத்தளை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ,53 குடும்பங்களை சேர்ந்த 263 மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த கால நிலை சீர்கேட்டால், பாதிக்க பட்ட மக்கள் ,தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்ட மக்களுக்கு ,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது .
மேலும் அந்த பகுதியில் ,மண்சரிவு எச்சரிக்கை அபாயம் விடுக்க பட்ட வண்ணம் உள்ளது .
அதிக மழை வீழ்ச்சியே ,இந்த மண்சரிவுக்கு காரணமாக மாற்றம் பெற்றுள்ளது .
ராஜபக்ச விமான நிலைய செலவுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
ராஜபக்ச விமான நிலைய செல்வுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
இலங்கை மாத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் 2021 ஆண்டுக்கான செலவுகள் வரவை விட 21 மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது .
இந்த விமான நிலையம் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நிறுவ பட்டு ,அவரால் அந்த விமான நிலையத்திற்கு அவரது பெயர் சூட்ட பட்டது .
கோட்டபாய ராஜபக்ச ஆட்சியில் குறித்த விமான நிலையத்தின் வருமானம் ,அதனை விட 21 மடங்கு பெரும் இழப்புடன் முடிவடைந்துள்ளது .
இது கோட்டபாய ரடாஜபக்ச குடும்பத்தால் நடத்த பட்ட ,பெரும் மோசடி என நம்ப படுகிறது .
இந்த இழப்பு மற்றும் பண கையாடல் தொடர்பிலான, விசாரணைகள் ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ராஜபக்ச விமான நிலைய செலவுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
நாட்டை கொள்ளையடித்து ,இன்று பிச்சைக்கார நாடக மாற்றியுள்ள ராஜபக்ச ஆட்சியின் ,லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.
என ,இலங்கை மக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கையை வைத்து வருகின்றனர் .
அவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டால் ,ராஜபக்சாக்கள் மோசடிகள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா
கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஆண்கள் கழிவறையில் ,துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
காவல்துறையினருக்கு விடயம் தெரிவிக்க பட்ட நிலையில் ,துப்பாக்கி தோட்டா மீட்டு செல்ல பட்டுள்ளது .
விமான நிலையத்தில் உள்ள கமராக்கள் மூலம் சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த தோட்டாவை கழிவறையில் வீசி சென்ற நபரை ,கைது செய்யும் வேட்டையில் ,குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர் .









































