தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து பலி
தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து பலி
மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து வந்த 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி நேற்று (15) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வாளி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்
பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்
08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர், 08 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1000 கைதிகளை விடுவி இஸ்ரேலை அலற விட்ட ஹமாஸ் நிபந்தனை
சீன இராணுவத்தளம் மறுத்தது இலங்கை அமெரிக்க உளவுத்துறை
சீன இராணுவத்தளம் மறுத்தது இலங்கை அமெரிக்க உளவுத்துறை
சீன இராணுவத் தளத்தை இலங்கை மண்ணில் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள கூற்றுக்களை இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித
பண்டார தென்னகோன் மறுத்துள்ளார். மேலும், இலங்கை தனது எல்லைக்குள் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு அரசாங்கங்களுடன் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இராணுவ தளங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை சீனா ஆராய்ந்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தனது வருடாந்த அச்சுறுத்தல் மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது. எனினும்,
இலங்கையில் சீன இராணுவத் தளம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அமெரிக்க புலனாய்வு அறிக்கை தவறானது என்பதோடு இந்த கூற்றுக்களை கடுமையாக மறுக்கிறோம் என்றும் பிரேமித பண்டார
கூறியுள்ளார். அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது எல்லைக்குள் இராணுவத் தளங்களை நிறுவுவதற்கு எந்தவொரு வெளிநாட்டையும் இலங்கை அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு உடனே பதவி விலகு மக்கள் அரசியல் கட்சிகள் போர்க்கொடி
மக்கள் போராட்டத்தின் எதிரொலி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் போராட்டத்தின் எதிரொலி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல் மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண.
கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட ‘மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்’ (ஜனஅரகலயே தோங்காரய) எனும் நூல் நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ‘இடைவிடாத போராட்டத்தின் உண்மைக் கதை’, ‘சிங்கள மருத்துவத்தின் மறைவு’, ‘நைடிங்கேள் குணாதிசயம்’, ‘ஜெனிவா நெருக்கடியின் எதிரொலிகள்’, ‘ரன் ஹிய’ மற்றும் ‘இருளுக்கு வெளியே’ ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
கெடமான்னே குணானந்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நூல் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு
முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பொலிஸார் சந்தேகநபரை நேற்று (14) கைது செய்துள்ளனர்.
டிப்பரின் சக்கரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை தடுத்து நிறுத்தியதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த டிப்பர் வாகனம் பொலிஸாரை விபத்திற்குள்ளாக்க முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்
ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு நேற்று (13) விஜயம் செய்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு மிகவும் மோசமாக சீரழிந்த நிலையில் உள்ளது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளையும், இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளையும் சாப்பிடும் வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளில் மாணவர்கள் மரணிக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் வாழும் மக்கள் பிரதானமாக விவசாயத்தை மையமாக கொண்டு வாழ்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்
நோயுற்ற நிலையில் வைத்தியசாலை செல்லும் போது அங்கு மருந்துகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் பலர் மரணிக்கும் நிலை உள்ளது. சுகாதார அமைச்சராக இருந்த ஒருவர் ஊழல் மோசடி செய்து சிறையில் உள்ளார்.
போசாக்கு இன்றி குழந்தைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றனர். இந்தநிலைக்கு தற்போதைய அரசாங்கமும் பதில் சொல்ல வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஏனையவர்களும் எமது குழந்தைகள் தொடர்பில் சிந்திக்காது தமது அரசியல் குறித்து சிந்திக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல்கள் வர இருக்கின்றது. மொட்டு சின்னமோ அல்லது ரணிலோ வந்தால் தற்போதைய நிலை தான் நீடிக்கும். ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும். கடந்த கடந்த காலத்தில் மக்கள் வீதிக்கு இறங்கி மகிந்த ராஜபக்ஸ, கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினர். ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என தெரிவித்தார்.
சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள்
சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள்
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (14) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்களை இலங்கை அரசாங்கம்,அதனுடன் சேர்ந்த திணைக்களங்கள் மற்றும் புத்த பிக்குகள் மிகவும் மோசமாக வன்முறையை உறுவாக்குவதற்காகவும் எமது இனத்தை இல்லாது ஒழிப்பதற்குமான செயல்பாட்டை செய்து வருகின்றனர்.
இந்த நிலையிலே,தற்போது உச்ச கட்டமாக சிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டிற்காக சென்ற எம் உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் மீது பொலிஸார் வண்முறையை உபயோகித்துள்ளனர், குறித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.
15 இந்திய மீனவர்கள் கைது
15 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மீனவர்கள் இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இந்திய மீனவர்களை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது சஜித் பிரேமதாசா
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது சஜித் பிரேமதாசா
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது நாட்டின் எழுந்துள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் பதில் நாடு பெறும் டொலர்களும் ரூபாக்களையும்
கொண்டே அமைகிறது. டொலரையும், ரூபாவையும் ஈட்டுவதற்கு முறையான வேலைத்திட்டம் இல்லாமல் வெறும் பேச்சுக்களை வைத்து பதவிக்கு வர யாராவது யோசித்தால்,
நாட்டு மக்கள் இரண்டாவது அவலத்தை எதிர்நோக்குவர். 2019 ஆம் ஆண்டைப் போன்று 2024 ஆம் ஆண்டிலும் மக்கள் பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உண்மை, யதார்த்தம், தரவு, அறிவியல் மற்றும் பரிசோதனைகள், பகுப்பாய்வுகள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்த கொள்கை உருவாக்கத்திற்கு ஒரு நாடாக நாம் முன்னேற வேண்டும்.
கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை செயல்படுத்துதல், கண்காணித்தல், பின்தொடர்தல் மற்றும் மீளாய்வு செய்தல், பின்னூட்டம் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறானதொரு
வேலைத்திட்டத்தை தயாரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 122 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அநுராதபுரம் கே.பீ.ரத்நாயக்க மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு 13 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இப்பாடசாலையில் நடன மற்றும் அரங்கேற்றங்கள் குழுவிற்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியுதவியை பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வாக்குறுதியளித்தார்.
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது சஜித் பிரேமதாசா
பொருளாதார அபிவிருத்தியின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும், நாட்டின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்த ரூபாக்களும் டொலர்களும் தேவை, இந்த டொலர்களை பொருளாதார
அபிவிருத்தியின் மூலம் மட்டுமே ஈட்டிக்கொள்ள முடியும். அறிவை மையமாகக் கொண்ட, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரம், நேரடி அன்னிய முதலீடு முறைமையின் ஊடாகவே, விழுந்து கிடக்கும் தேசத்தை மீண்டும் பெருமைக்குரிய தேசமாக கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சித்
தலைவர் தெரிவித்தார். கல்விக்கு முதலிடம், பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் Education First என்ற கொள்கையாகும். கல்விக்கு முதலிடம் வழங்குவதே தனது பிரதான இலக்கு என்றாலும், இந்த கல்வி முறை
நவீனமயப்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் டிஜிட்டல் ஸ்ரீலங்கா என்பது உயரடுக்கு வர்க்கத்தின் பிள்ளைகளுக்கு மட்டுமே! உயரடுக்கு பெரும் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கே டிஜிட்டல் ஸ்ரீலங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இலவசக் கல்வியை போதிக்கும் 10,126 அரச பாடசாலைகளில் 41 இலட்சம் பிள்ளைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் போக்கை காண்பதிற்கில்லை.
இந்த பிள்ளைகளின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்பட்டு வருகின்றன. காலாவதியான கல்வி முறைமையினால் ஒரு சில துறைகளைத் தவிர, பெரும்பாலான துறைகளைச் சேர்ந்தவர்கள்
வேலையின்மை வரிசையில் நிற்கிறார்கள். தனியார் துறையில் கூட அவர்களால் வேலைவாய்பை எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இது பெரும் துரதிஷ்டம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக் காட்டினார்
ஹவுதிகள் புதிய விமானம் hypersonic missile சோதனை
ஹவுதிகள் புதிய விமானம் hypersonic missile சோதனை
ஹவுதிகள் புதிய விமானம் மற்றும் hypersonic missile சோதனை செய்துள்ளனர்
,தமது ஏவுகணைகள் விமானங்கள் சோதனை வெற்றிகரமாக முடைவடைந்துள்ளதாக ஹவுதி அன்சர் அல்ல அறிவித்துள்ளன
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தியுள்ள கனடா
ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்
ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்
ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்
அலறும் செங்கடல் ,முடங்கும் கப்பல் போக்குவரத்து ,திணறும் அமெரிக்கா பிரிட்டன் ,
பெரிய வெங்காய விலை தொடர்பில் இணக்கப்பாடு
பெரிய வெங்காய விலை தொடர்பில் இணக்கப்பாடு
பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தங்களுடைய கையிருப்புகளை 450 முதல் 500ரூபாய்க்கு இடையில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
வர்த்தக அமைச்சருடனான கலந்துரையாடலின் போது, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பில், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுக்கும் வர்த்த அமைச்சருக்கும் இடையில் நேற்று அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக கூறினார்.
சரக்கு கப்பல் சிறை பிடிப்பு தாக்குதலை நடத்தும் புது படை
சரக்கு கப்பல் சிறை பிடிப்பு தாக்குதலை நடத்தும் புது படை
சரக்கு கப்பல் சிறை பிடிப்பு தாக்குதலை நடத்தும் புது படை .
செங்கடல் போன்று புதிய களமுனை திறப்பு ,அதிரும் சர்வதேச பெருங்கடல் ,
திணறும் கப்பல் போக்குவரத்து
IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் தேசிய மக்கள் சக்தி
IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் தேசிய மக்கள் சக்தி
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று (14) சந்திக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தவுள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் தேசிய மக்கள் சக்தி
இதேவேளை, உத்தேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு சட்டமூலத்தை கைவிடுமாறும், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை தடை செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் நியமங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிவில் சமூகத்தை கடுமையாக ஒடுக்கும் மற்றும் நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையிலான சட்டமூலங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் தனது வேலைத்திட்டத்தின் நம்பகத்தன்மையையும் வினைத்திறனையும் பாதுகாப்பதற்காக குறித்த உத்தேச சட்டமூலங்களை திருத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்து
லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்து
அனுராதபுரம் திரப்பனை பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார், லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (14) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த மூவரும் லொறியின் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளடன் லொறியும் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
ஹோமாகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று(14) காலை விபத்துக்குள்ளானது.
NSBM பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு இவ்விபத்தில் சிக்கியுள்ளது.
NSBM பல்கலைக்கழகம் அருகே சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதில் சுவரின் ஒரு பகுதியில் மோதி உடைத்துக்கொண்டு சென்றிருந்தது.
விபத்தின் போது பேருந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பயணித்த போதிலும், விபத்தில் அவர்களுக்கு காயம் எதுவம் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் பேருந்து சேதமடைந்ததுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பலாங்கொடை பொலிஸ் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை பொலிஸ் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை – பொனதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாதாள உலக உறுப்பினரான ‘சமன்கொல்லா’ என்ற அகம்பொடி சஜித் சமன் பியந்தவின் வீட்டின் மீதே இன்று (14) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை பல தோட்டாக்கள் தாக்கியுள்ளதுடன், சம்பவத்தின் போது சமன்கொல்லாவின் தாயும் மூன்று சகோதரிகளும் உடனிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


























