இரண்டே நாட்களில் 400 கோடி வசூல்
இரண்டே நாட்களில் 400 கோடி வசூல்
இரண்டே நாட்களில் 400 கோடி வசூல் புஷ்பா 2′ திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார்.
அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது.
மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ஆம் திகதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இப்படம் 3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.
அதில் முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம்
வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி வசூலை குவித்திருப்பதாக கூறப்படுகிறது.
வெற்றிப் பெற்ற சிறீதரன்
வெற்றிப் பெற்ற சிறீதரன்
வெற்றிப் பெற்ற சிறீதரன் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற குழுத் தலைவர் சிறீதரன் அவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியல் குழு உறுப்பினராக முன்மொழிந்தார்.
நேற்று (06.12.2024) காலை பாராளுமன்றில், அரசியலமைப்பு குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் எம்.பி வெற்றி பெற்றுள்ளார்.
25 உறுப்பினர்களில் ஒருவரை அரசியலமைப்பு குழுவிற்கு நியமிப்பதற்காக கேட்கப்பட்டது. அப்போது சிறீதரன் எம்.பியை, தமிழ் தேசிய மக்கள்
முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்மொழிய தமிழரசுக் கட்சியினர் வழிமொழிந்துள்ளனர்.
ஜீவன் தொண்டமான் அவர்களை நாமல் நாஜபக்சவும், ரவி கருணாநாயக்கவும் வழிமொழிந்து முன்மொழிந்தார்கள். பின்னர் நடந்த வாக்கெடுப்பில் நால்வர் வாக்களிக்காமல் விலக, 21 வாக்குகளில் 11 வாக்குகளை சிறீதரன் எம்.பியும், 10
வாக்குகளை ஜீவன் தொண்டமான் எம்.பியும் பெற்றனர். 1 வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் எம்.பி அரசியலமைப்பு குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.
தரமற்ற மருந்துகள் குறித்த அரசாங்கம் விளக்கமளிப்பு
தரமற்ற மருந்துகள் குறித்த அரசாங்கம் விளக்கமளிப்பு
தரமற்ற மருந்துகள் குறித்த அரசாங்கம் விளக்கமளிப்பு தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் நேற்று (06) தெரிவித்தார்.
தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த
கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;
” தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும்.
இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தினார்.
எல்லோரும் துரோகி |நான் மட்டும் நல்லவன் அர்ச்சுனா mp |Dr Archuna News
எல்லோரும் துரோகி |நான் மட்டும் நல்லவன் அர்ச்சுனா mp |Dr Archuna News
எல்லோரும் துரோகி |நான் மட்டும் நல்லவன் அர்ச்சுனா mp |Dr Archuna News
அர்ச்சுனா இரகசிய திட்டம் |உடைத்தமுக்கிய புள்ளிகள் | அர்ச்சுனா செய்தி அர்ச்சுனா mp |Dr Archuna News
அர்ச்சுனா இரகசிய திட்டம் |உடைத்தமுக்கிய புள்ளிகள் | அர்ச்சுனா செய்தி அர்ச்சுனா mp |Dr Archuna News
அர்ச்சுனா இரகசிய திட்டம் |உடைத்தமுக்கிய புள்ளிகள் | அர்ச்சுனா செய்தி அர்ச்சுனா mp |Dr Archuna News
பெண்ணொருவர் சுட்டுக்கொலை
பெண்ணொருவர் சுட்டுக்கொலை
பெண்ணொருவர் சுட்டுக்கொலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (05) இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக டி56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மட்டுமே அந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்ஏ.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
குறித்த காலத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் உள்ளுராட்சி சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க
மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க
மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள்
50,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
“நாங்கள் வந்து சிறிது காலத்தில் நாட்டினுள் போதுமான அரிசி உள்ளதாக விவசாயத் திணைக்களத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்தது.
ஆனால் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம்.
“இரண்டு அல்லது மூன்று பேரின் ஏகபோக உரிமைக்கு இது அனுமதிக்கப்படவில்லை.
இப்போது அந்த பலம் அவர்களிடம் உள்ளது. ஏனென்றால் நம்மிடம் கட்டுப்படுத்த எந்த கருவியும் இல்லை.
நாங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்றார்.
காவலாளியை கொலை செய்து கொள்ளை
காவலாளியை கொலை செய்து கொள்ளை
காவலாளியை கொலை செய்து கொள்ளை நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொன்று, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டிப்போவில் காவலராகப் பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான கே.லோகேஸ்வரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிலர் காவலரை கொன்றுவிட்டு டிப்போவின் அலமாரியில் இருந்த சுமார் 9 லட்சம் ரூபாயை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவலர் தனது பாதுகாப்பு அறையில் தங்கியிருந்ததாகவும், அப்போது சிலர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி கொன்று பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்தின் போது டிப்போவிற்குப் பொறுப்பான அதிகாரியும் காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும் அவர்கள் உறங்கிக்
கொண்டிருந்த வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா டிப்போவில் நேற்று (05) ஓடிய பேருந்துகளின் வருமானம், வங்கிப் பணிகளுக்காக அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக நுவரெலியா டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை
அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை
அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை… சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை
நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று (03) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இனவாதத்தை தூண்டும் சதித்திட்டம்
இனவாதத்தை தூண்டும் சதித்திட்டம்
இனவாதத்தை தூண்டும் சதித்திட்டம் வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகளானது கடந்த காலங்களில் வௌிநாடுகளில் நடைபெற்ற
வைபவங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் புலிகளின் கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்ததாக சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விசாரணையில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபட்டது உறுதியானது என்றும், இது தொடர்பாக பலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்கள்
விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்கள்
விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்கள் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான 3 புதிய சட்டமூலங்கள் எதிர்வரும்
காலாண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றச் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் திவால் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தெரிவித்தார்.
புஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் தொலைபேசி உபகரணங்கள்
புஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் தொலைபேசி உபகரணங்கள்
புஸ்ஸ சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திலும் சிறைச்சாலை வளாகத்திலும் ஏராளமான கையடக்க தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படை புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறைச்சாலை வைத்தியசாலை மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை
நடவடிக்கையின் போதே குறித்த உபகரணத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலையில் 5 கையடக்கத் தொலைபேசி சார்ஜர்களும் 8 டேட்டா கேபிள்களும் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
ஒருவருக்கு ஒரு துப்பாக்கி
ஒருவருக்கு ஒரு துப்பாக்கி
ஒருவருக்கு ஒரு துப்பாக்கி தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
துப்பாக்கிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பாதுகாப்பு பகுப்பாய்வு நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனினும், அந்த பகுப்பாய்வின் பின்னர் மற்றொரு துப்பாக்கி வழங்குவதா, இல்லையா? என்பது தொடர்பான இறுதி முடிவு பாதுகாப்பு அமைச்சிடம் தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான ஆய்வுகள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நடத்தப்படுகின்றன.
பொதுமக்களுக்கு 1500இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில நபர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல கசினோ விடுதி சுற்றிவளைப்பு
பிரபல கசினோ விடுதி சுற்றிவளைப்பு
பிரபல கசினோ விடுதி சுற்றிவளைப்பு கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனயை முன்னெடுத்து வந்த பிரபல கசினோ விடுதியொன்று மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுங்கவரியில்லா 100 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றின் மொத்த பெறுமதி 25 இலட்சம் ரூபாவுக்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து மாடிகளைக் கொண்ட விடுதியில் ஒவ்வொரு தளத்திற்கும் வருகை தரும் உறுப்பினர்களுக்கு இலவச மதுபானம் வழங்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், அந்தந்த இடத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உரிமத்தின் மூலம் ஒரு மதுபானக் கூடத்தை மாத்திரமே இயக்க முடியும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில், தலைமை அலுவலகம் மற்றும் கொழும்பு நகர மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், இந்தியாவை “விஷயங்களை முயற்சிப்பதற்கான ஒரு வகையான ஆய்வகம்” என்று குறிப்பிட்டு வெந்நீரில் இறங்கியுள்ளார். இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் பில் & மெலிண்டா
கேட்ஸ் அறக்கட்டளையுடனான அதன் ஒத்துழைப்பை முன்னிலைப்படுத்தும் நோக்கில் அவரது கருத்துக்கள், கேட்ஸ் அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்ட
சர்ச்சைக்குரிய 2009 மருத்துவ பரிசோதனைக்கு புத்துயிர் அளித்துள்ளது – இது ஏழு பழங்குடியின பள்ளி மாணவிகளைக் கொன்றது மற்றும் பலரை கடுமையாக நோய்வாய்ப்படுத்தியது.
திரு கேட்ஸ் சமீபத்திய போட்காஸ்டில் கூறினார், “இந்தியா ஒரு நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு, அங்கு கடினமான விஷயங்கள் ஏராளமாக உள்ளன-உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன, மேலும்
அவை போதுமான அளவு நிலையானவை மற்றும் அரசாங்க வருவாயை உருவாக்குவது மிகவும் சாத்தியம். இன்னும் 20 வருடங்கள் கழித்து மக்கள்
வியத்தகு முறையில் சிறப்பாக இருப்பார்கள். இந்தியாவில் நிரூபித்த பிறகு, நீங்கள் மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய விஷயங்களை முயற்சிப்பது ஒரு வகையான ஆய்வகம்.
“விஷயங்களை முயற்சிப்பது ஒரு வகையான ஆய்வகம். இந்தியாவில் நிரூபிக்கப்பட்டால், அவற்றை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்.”
- இந்தியா மீது பில் கேட்ஸ்.
2009 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசு சாரா அமைப்பு PATH (ஆரோக்கியத்தில் பொருத்தமான தொழில்நுட்பத்திற்கான திட்டம்), ICMR உடன் இணைந்து, கர்ப்பப்பை வாயில் மருத்துவ பரிசோதனைகளை நடத்தியது.
நாசாவின் ராட்சத நிலவு ராக்கெட்டை டிரம்ப் ரத்து செய்யலாம்
நாசாவின் ராட்சத நிலவு ராக்கெட்டை டிரம்ப் ரத்து செய்யலாம்
நாசாவின் ராட்சத நிலவு ராக்கெட்டை டிரம்ப் ரத்து செய்யலாம்: எலோன் மஸ்க்கிற்கு இது என்ன அர்த்தம்
டொனால்ட் டிரம்பின் சமீபத்திய தேர்தல் வெற்றிக்குப் பிறகு, நாசாவின் ராட்சத மூன் ராக்கெட், விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்று வதந்திகளும் ஊகங்களும் பரவின. 1972 க்குப் பிறகு
முதன்முறையாக மனிதர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்குத் தேவையான பல முக்கிய கூறுகளில் ராக்கெட் ஒன்றாகும்.
ஆர்ட்டெமிஸ் III என அழைக்கப்படும் முதல் சந்திர தரையிறங்கும் பணிக்காக, SLS நாசாவின் ஓரியன் குழு காப்ஸ்யூலில் நான்கு விண்வெளி வீரர்களை அனுப்பும். ஓரியன் பின்னர் சந்திரனை நோக்கி பயணிக்கும். சந்திர
சுற்றுப்பாதையில் ஒருமுறை, ஓரியன் எலோன் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் வாகனத்துடன் (தனியாக ஏவப்பட்டது) கப்பல்துறைக்கு வரும்.
இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்டார்ஷிப்பில் மிதப்பார்கள், இது ஓரியனில் இருந்து வெளியேறி சந்திர மேற்பரப்பில் பயணிக்கும்.
சந்திரனில் நடந்த பிறகு, இரண்டு விண்வெளி வீரர்களும் ஓரியன் உடன் கப்பல்துறையில் உள்ள ஸ்டார்ஷிப்பில் சந்திர சுற்றுப்பாதைக்குத் திரும்புகின்றனர்.
இரண்டு மூன்வாக்கர்களும் தங்கள் பணியாளர்களுடன் மீண்டும் சேர்ந்து ஓரியன் மீது வீட்டிற்குச் சென்று, சந்திரனைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் ஸ்டார்ஷிப்பை விட்டுச் செல்கிறார்கள்.
அமெரிக்க விண்வெளி பத்திரிக்கையாளர் எரிக் பெர்கர் சமீபத்தில் X இல் பதிவிட்டுள்ளார்:
“தெளிவாக இருக்க, நாங்கள் எதையும் தீர்க்காமல் இருக்கிறோம், ஆனால் நான் கேள்விப்படுவதைப் பொறுத்து, நாசாவின் விண்வெளி ஏவுதள அமைப்பு ராக்கெட் ரத்து செய்யப்படும் என்று குறைந்தது 50-50 ஆகத் தெரிகிறது.”
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், அத்தகைய நடவடிக்கையானது ட்ரம்ப் நிர்வாகம் நாசாவைக் கெடுக்கக்கூடும்
என்ற முந்தைய ஊகங்களுக்கு ஏற்ப இருக்கக்கூடும், இதனால் அதன் பெரும்பாலான வேலைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தலாம்.
சிறப்பு பிரச்சாரங்களுடன் முடக்கப்பட்ட கணக்கு
சிறப்பு பிரச்சாரங்களுடன் முடக்கப்பட்ட கணக்கு
சிறப்பு பிரச்சாரங்களுடன் முடக்கப்பட்ட கணக்குகளை செயல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது
இதை அடைவதற்கு, செயல்படாத அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை
செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் சிறப்பு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகள் செயல்படாத அல்லது முடக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், செயல்படுத்தும் செயல்முறையை எளிதாகவும் சிக்கலற்றதாகவும் மாற்றுவதற்கு உடனடி
நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதை அடைவதற்கு, செயல்படாத அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை
செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் சிறப்பு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கூடுதலாக, ஆதார் தொடர்பான சேவைகளை வழங்கும் கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் புதுப்பிப்புகளை எளிதாக்க வங்கிகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இந்த முன்முயற்சி, கணக்கு வைத்திருப்பவர்கள்,
குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள், தங்கள் கணக்குகளை எளிதாக மீண்டும் செயல்படுத்துவதில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“செயல்படாத/ முடக்கப்பட்ட கணக்குகளை செயல்படுத்துவதற்கு வங்கிகள் சிறப்பு பிரச்சாரங்களையும் ஏற்பாடு செய்யலாம். தவிர, ஆதார் தொடர்பான
சேவைகளை வழங்கும் கிளைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் புதுப்பிப்புக்கும் வங்கிகள் உதவலாம்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் சிரமத்தைக் குறைப்பதற்காக அந்தந்த பிராந்தியங்களில் உள்ள நிலைமையை முன்கூட்டியே கண்காணிக்க மாநில அளவிலான வங்கியாளர்களின் குழுக்களுக்கு (SLBCs) தனித்தனி அறிவுறுத்தல்களை அது வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, பல முடக்கப்பட்ட அல்லது செயல்படாத கணக்குகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சொந்தமானது என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது.
அத்தகைய வழக்குகளைக் கையாள்வதில் ஒரு அனுதாப அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு வங்கிகளை மத்திய வங்கி வலியுறுத்தியது,
இந்த செயல்முறை இந்த வாடிக்கையாளர்களுக்கு எளிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.
“மொபைல்/இன்டர்நெட் பேங்கிங், வீடு அல்லாத கிளைகள், வீடியோ வாடிக்கையாளர் அடையாளச் செயல்முறை போன்றவற்றின் மூலம்
கேஒய்சியின் தடையற்ற புதுப்பிப்பை இயக்குவது உட்பட, இது போன்ற கணக்குகளை எளிதாகவும், தொந்தரவில்லாமல் செயல்படுத்தும் செயல்முறையும்” சேர்க்கப்பட்டுள்ளது.
8 இந்தோனேசிய பிரஜைகள் கைது
8 இந்தோனேசிய பிரஜைகள் கைது
8 இந்தோனேசிய பிரஜைகள் கைது விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவா எலியா பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 65 வயதுடைய இந்தோனேசிய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முத்துமால
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ் தெஹிதெனிய, நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
































