மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா
மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா
நடிகை மீனா 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா
மோகன்லால், மீனா
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி
பெற்ற படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை
காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.
இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில்
கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
மோகன்லால், மீனா
தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். இந்த படத்திலும்
மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். மீனா நடிப்பாரா? இல்லையா? என்பது கேள்விக்குரியாக இருந்தது.
இந்நிலையில், திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் மீனா நடிப்பதை நடிகர் மோகன்லால் உறுதிப்படுத்தி உள்ளார். இன்று பிறந்தநாள்
கொண்டாடும் நடிகை மீனாவிற்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மோகன்லால், திரிஷ்யம் 2 படத்தின் செட்டிற்கு
உங்களை வரவேற்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார். திரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
சொந்த வீட்டிலேயே திருட்டு… தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்
சொந்த வீட்டிலேயே திருட்டு… தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்
சொந்த வீட்டிலேயே கணவனுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த நடிகை ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த வீட்டிலேயே திருட்டு… தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்
சுசித்ரா
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சீரியல் நடிகைகளுக்கும்
இவர் கார் ஓட்டி வந்துள்ளார். அந்த வகையில்தான் தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ராவுடன் மணிகண்டனுக்கு பழக்கம்
ஏற்பட்டுள்ளது. காதலித்து வந்த இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் செலவுக்கு பணமின்றி இருவரும்
தவித்துள்ளனர். அப்போது தனது சொந்த ஊருக்கு மனைவி சுசித்ராவை, மணிகண்டன் அழைத்துச் சென்று பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
மணிகண்டன் அங்கு சில நாட்கள் மனைவியுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை பார்த்ததும் கணவனிடம் அந்த பணத்தை
கொள்ளையடித்து சென்னைக்கு சென்றுவிடலாம் என நடிகை சுசித்ரா ஐடியா கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து குறும்படம் எடுத்து யூடியூப்பில் சம்பாதிக்க திட்டம் போட்டுள்ளார்.
சுசித்ராவின் கணவர் மணிகண்டன்
இதையடுத்து சுசித்ராவை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்த மணிகண்டன், சில நாட்களுக்கு பின் மனைவி சொன்னபடி பணம்
மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளார். வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனதை அறிந்த மணிகண்டனின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
விசாரணை நடத்தியதில் மணிகண்டன் தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
கணவன் மாட்டிக் கொண்டதை அறிந்த நடிகை சுசித்ரா தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப்
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப் தகவல்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் அதிபர்
டிரம்ப் கூறும்போது, தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபர் மாதத்தில் வந்து விடும் என்று தெரிவித்தார்.
நவம்பர் 3-ந்தேதி நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை கொண்டு வந்து விடவேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் தடுப்பூசியை போடுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தடுப்பூசி தயாராகி
விடும். நீங்கள் உண்மையை அறிய விரும்பினால் முந்தைய நிர்வாகம் தடுப்பூசிக்கு ஒப்புதல்களை பெற பல ஆண்டுகளை எடுத்திருக்கும்.
ஆனால் அந்த ஒப்புதலை நாங்கள் சில வாரங்களிலேயே பெற்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை வெளியிட்டால் அது தனக்கு சாதமாக அமையும் என்று டிரம்ப் கருதுகிறார்.
ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு
ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு
தேர்தலுக்கு முன்னதாக ரஜினிகாந்த் 2 மாநாடுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு வெளியிட திட்டம்
நடிகர் ரஜினிகாந்த் பொது ஊரடங்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய அரசியல்
கொள்கைகள் மற்றும் முடிவுகள் பற்றி அறிவித்தார். அதன்பின் பொது முடக்கம் தொடங்கியதால் அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட முடியவில்லை.
ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாலும் பொது முடக்கத்திலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும்
ரஜினியின் அரசியல் இனி வேகம் எடுக்கும் என்று அவருக்கு நெருக்க மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மேலும் கூறியதாவது:-
‘ரசிகர்களும் நிர்வாகிகளும் கடந்த சில நாட்களாக போஸ்டர் மூலமாக ரஜினிக்கு அரசியல் அழைப்பு விடுத்து வந்தனர். இது சமூகவலைதளங்களில் சர்ச்சையானதால் இனி தன்னிச்சையாக
யாரும் போஸ்டர் அடிக்க கூடாது என்ற உத்தரவு போடப்பட்டது. அதே நேரம் தலைமையிடம் இருந்து நிர்வாகிகளுக்கு சில
அறிவுறுத்தல்களும் இடப்பட்டன. அதில் நிர்வாகிகள், ரசிகர்கள் உற்சாகம் அடையும் வகையில் முக்கிய செய்தி சொல்லப்பட்டது.
கொரோனாவால் முடங்கி போயிருந்த ரஜினி விரைவில் வெளியில் வருவதோடு அரசியலிலும் தீவிரமாக இயங்க உள்ளார் என்பதே
அந்த நல்ல தகவல். இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு இருப்பதால் அவரது அரசியல் இன்னும் வேகம் எடுக்கப்போகிறது.
நவம்பரில் கட்சி தொடங்குவதும், அவரே முதல்வர் வேட்பாளராக களம் காண்பதும் உறுதி. ரஜினியின் தொடக்க கால திட்டமே கட்சி
அறிவிப்பை பெரிய மாநாட்டில் வெளியிட வேண்டும் என்பதுதான். இதன் மூலம் களத்தில் இறங்கும்போதே பலமாக இறங்க திட்டமிட்டுள்ளார்.
எனவே வரும் நவம்பரில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாடு வேலூர் அல்லது மதுரையில் நடை பெறலாம்.
ரஜினி தான் முதல்வர் வேட்பாளராக நிற்க விருப்பம் இல்லை என்று சொல்லியதால் நிர்வாகிகள் சற்று உற்சாகம் குறைந்தனர்.
அவர்களை உற்சாகப்படுத்தினால் தான் நவம்பர் மாநாட்டில் பெருந்திரளான கூட்டத்தை கூட்ட முடியும்.
எனவே அவர்களை மாநாட்டுக்கு தயார்படுத்தும் விதமாக அக்டோபர் முதல் வாரத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை
வெளியிடலாம். அப்போதே மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். அடுத்த ஒரு மாதம் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாகும். இதுதான் ரஜினியின் திட்டம்.
கட்சியை இனி தான் தொடங்க வேண்டுமா? அல்லது வேறு பெயரில் தொடங்கப்பட்டு விட்டதா? என்பதில் இன்னும் சஸ்பென்ஸ்
நீடிக்கிறது. அது மாநாட்டில் ரஜினியின் அறிவிப்பில் தான் முடிவுக்கு வரும். முதல்வர் வேட்பாளர் என்பதால் நிச்சயம் அவர் தேர்தலில் போட்டியிடுவார்.
அப்படி போட்டியிட்டால் வேலூர், சோளிங்கர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றாக அமையும்.
இப்போதைக்கு ரஜினி இந்த 4 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் கூட களம் இறங்கலாம்.
தேர்தலுக்கு முன்னதாக 2 மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளவர் ஒன்றை மதுரையிலும் இன்னொன்றை சென்னைக்கு அருகில் வேலூர் அல்லது திருவண்ணாமலையில் நடத்தவும் முடிவு
செய்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா அல்லாத பிற கட்சிகள் வந்தால் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்.
கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், தனக்கு இருக்கும் உண்மையான செல்வாக்கு, பூத் கமிட்டிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை என பல வகைகளில் ஆராய்ந்து
கூட்டணிக்கான முடிவை எடுப்பார். அக்டோபர் மாதத்துக்கு பின்னர் தமிழக அரசியலின் முகமாக ரஜினி மாறப்போகிறார்’.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
லொக்டவுனுக்கு தயாராகும் பிரிட்டன் – பீதியில் மக்கள்
லொக்டவுனுக்கு தயாராகும் பிரிட்டன் – பீதியில் மக்கள்
பிரிட்டன் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து
விரைவில் முழு லொக் டவுன் ஆகும் நிலைக்கு பிரிட்டன் செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது
இந்த முழு அடைப்பு பிரிட்டன் பொருளாதாரத்தில் மிக பெரும் இடியை தரும் என ஆளும் அரசு தெரிவித்துள்ளதுடன்
மக்களின் பொருளாதாரத்தை மீள கட்டி எழுப்பும் நடவடிக்கைக்கு அரசு
செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .இதனால் புதிய வியாபாரிகளை
உருவாக்க வேண்டிய நிலைக்கு அரசு செல்ல நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது
எதிர் வரும் எட்டு வாரங்கள் முதல் இந்த லொக் டவுன் ஏற்படும் நிலைக்கு செல்ல கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
பிரிட்டனில் கொரனோ கடும் தாக்குதல் -ஒரே நாளில் 20 பேர் பலி -3,991 பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ கடும் தாக்குதல் -ஒரே நாளில் 20 பேர் பலி -3,991 பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக மீள பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இருபது பேர் பலியாகியுள்ளனர்
மேலும்3,991 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .
மக்களுக்கு விடுக்க பட்ட வேண்டுதல்களை புறக்கணித்து மக்கள் வீதிகளில்
முகக் கவசம் இன்றியும் ,சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்கின்றனர்
இதனை அடுத்து ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த படும் நிலைக்கு அரசு
செல்ல கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் ,
எதிர்
வரும் எட்டு வாரங்களுக்குள் பிரிட்டன் முழு முடக்க நிலைக்கு வர கூடும் என அஞ்ச படுகிறது
மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின்
நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு விதித்துள்ள தடைகளை உடைக்கும்
வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளதோடு, அலங்கரிக்கப்பட்டிருந்த
நினைவேந்தல் இடத்தில் இருந்த திலீபனின் திருவுருப்படம் மற்றும் பதாதைகளை இரவோடு இரவாக தனது காவல்துறையினைக் கொண்டு அகற்றியுள்ளது.
தியாகி திலீபனை நினைவுமூகூருதல் என்பது, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை நினைவுகூரும் செயல் என இன்று செவ்வாய்கிழமை யாழ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா அரச கட்டமைப்பின் இத்தகையை தடைகளை உடைக்கும் வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென்பதனையே மேற்படிச் சம்பவங்கள் மீண்டும்
வெளிக்காட்டி நிற்பததாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற தியாகி தீலீபனின் முழக்கம், இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு
பின்னரும் மக்கள் எழுச்சியனதும், மக்கள் போராட்டத்தினதும் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது என தெரிவித்துள்ளது.
பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரப்பு செய்துள்ள சிறிலங்கா அரச கட்டமைப்பானது, அபிவிருத்தி, இனநல்லிணக்கம் என்ற பெயரில் தமிழத்
தேசியத்தினை நீக்கம் செய்ய முனைவதோடு, தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து நிரந்தர அடிமைகளாக
வைத்திருக்கும் செயலிலே ஈடுபட்டு வருகின்றது. சிறிலங்காவின் நீதித்துறையினாலோ அல்லது அதன் கட்டமைப்புக்கள் ஊடாகவோ தமிழர் தேசம் இதனை எதிர்த்துப் போராடிவிட முடியாது.
மக்கள் போராட்டத்தின் ஊடாகவே சிறிலங்காவின் அனைத்து தடைகளையும் உடைக்க முடியும் என்ற நிலையினையே
விடுதலைப்பசியோடு தியாகி தீலிபனின் இருந்த இன்றைய முதன்நாள் நினைவுகள் உணர்த்தி நிற்கின்றது என நாடுகடந்த
தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி
கொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார்.
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும்,
திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார். இவர் என்கிட்ட
மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி
உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.
பாஜகவில் இணைந்த ப்ளோரன்ட் பெரேரா
கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்
பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.
12 நாள் சிசுவை கடித்து கொன்ற நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
12 நாள் சிசுவை கடித்து கொன்ற நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் 12 நாட்களான சிசு ஒன்றை அவர்கள் வளர்த்த நாய்
ஒன்று கடித்து கொன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெற்றவர்களின் அலட்சிய போக்கினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சிசுவை கோரமாக கடித்து குதறியது ,
உடலில் பலத்த
காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி சிசு இறந்துள்ளது
கொலை குற்ற சாட்டில் பெற்றவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
பெற்றோல் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு – சிதறி ஓடிய மக்கள்
பெற்றோல் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு – சிதறி ஓடிய மக்கள்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போர்ன் பகுதியில் உள்ள எரிபொருள்
நிலையம் ஒன்றுக்குள்
புலி இனத்தை சேர்ந்த நச்சு கொடிய பாம்பு ஒன்று புகுந்துள்ளது
இதனை கண்ணுற்ற மக்கள் பெட்ரோல் அடிப்பதை இடை நிறுத்தி விட்டு ஓடி விட்டனர்
அவுஸ்ரேலியாவில் அதிக வெப்பம் காரணமாக இவ்விதமான கொடிய விச யந்துக்கள் உலவி வருகின்றமை குறிப்பிட தக்கது

பதாதைகள் ஏந்திய பெண் பொலிஸார் நீக்கம்
பதாதைகள் ஏந்திய பெண் பொலிஸார் நீக்கம்
வீதி ஒழுங்குச் சட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் பதாதைகளை வீதிகளில் காட்சிப்படுத்திய பெண் பொலிஸார் அக்கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனால், போக்குவரத்து பிரிவின்
அதிகாரிகளுக்கு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பதாதைகளைக் காட்சிப்படுத்துவதற்கு, பெண் பொலிஸாரை பயன்படுத்தியமைத் தொடர்பில் சமூக
வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, அவர்கள் இந்த கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
காணி விவகாரம்: இராணுவ உயர் அதிகாரிகள் ஆஜர்
காணி விவகாரம்: இராணுவ உயர் அதிகாரிகள் ஆஜர்
ஹட்டன்-நுவரெலியா வீதி, கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலிருக்கும் காணியை அபகரித்தமை தொடர்பிலான விவகாரம் தொடர்பில், ஹட்டன் நீதவான் நீதிமன்றம் ஆஜராகுமாறு
விடுக்கப்பட்ட நோட்டீஸ்க்கு அமைவாக, இராணுவ அதிகாரிகள் பலர், நீதிமன்றத்தில் நேற்று (15) ஆஜராகியிருந்தனர்.
இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, உள்ளிட்ட அப்படையணியின் கேர்ணல்கள் இருவரும் இன்னும் சில அதிகாரிகளும் நீதிமன்றத்தில்
ஆஜராகியிருந்தனர். அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சிலரும் ஆஜராகியிருந்தனர்.
மேற்படி விவகாரம் தொடர்பிலான வழக்கு, ஹட்டன்- மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜே. ட்ரொக்ஸி, முன்னிலையில், செப்டெம்பர் 3ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது,
செப்டெம்பர் 15ஆம் திகதியன்று ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டு, வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
கொழும்பு வணிக உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி, கொட்டகலை கொமர்ஷல் பகுதியிலுள்ள காணியை இராணுவத்தினர் கையகப்படுத்திவிட்டனர். அத்துடன்,
அக்காணியிலிருந்த சில கட்டடங்களையும் ஆக்கிரமித்துவிட்டனரென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் போது, தனிமைப்படுத்தப்பட்ட மய்யங்களாக மாற்றுவதற்காக, நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டது. ஜூலை மாதம் வரை
மட்டுமே தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்குமென அறிவிக்கப்பட்டது. அத்துடன், இராணுவ வீரர்களை அங்கு
நிலைநிறுத்தியது மற்றும் கட்டடங்களை இராணுவ முகாமாக மாற்றிவிட்டதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வணிக உயர் நீதிமன்றத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் வாடிக்கையாளர், 50 வருட காலத்துக்கு அந்த நிலத்தை வைத்திருக்கிறார் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, அந்த நிலத்தை அந்த வாடிக்கையாளரிடமே ஒப்படைக்குமாறு, மனுவின் ஊடாக கோரியிருந்தார்.
இந்த வழக்கில், இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 58 பேர், பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவ்வாறான வழக்கொன்று இராணுவத்தினரால் இம்மாதிரியான நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த முடியாதென
இராணுவத்தின் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி ஜயகித் மாதுரன்ன, இலங்கை இராணுவத்தின் சட்டப்பிரிவு சட்டத்தரணிகள், திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதேவேளை, வழக்கின் பிரதிவாதிகளா குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினர், திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்த எதிர்ப்பை,
எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறு கோரி, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு வழக்கை, ஹட்டன்- மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜே. ட்ரொக்ஸி ஒத்திவைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச் சபை அமர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச் சபை அமர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச்சபை அமர்வு நேற்று நியுயோர்க் நகரில் ஆரம்பமானது.
எதிர்காலச் சவால்களை வெற்றி கொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்த அமர்வின் தலைவர் வொல்க் பொஸ்கிர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக கொவிட்-19 போன்ற தொற்று நிலைமையில் இந்த எண்ணம் மிகவும் பலமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பல்நோக்கு செயல் திட்டமொன்று அவசியம் .என்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த மாநாடு கடும் சட்டங்களுக்கு அமைய இடம்பெறுகிறது. இதனால், பல உலகத்
தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை. உலகத் தலைவர்கள் வீடியோ தொழில்நுட்பம் மூலம் இந்த அமர்வில் உரையாற்ற உள்ளனர்
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி நிர்மாணப்பணிகள் 2024ல் நிறைவு
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி நிர்மாணப்பணிகள் 2024ல் நிறைவு
பிரதான வீதிகளின் இருபுறமும் உள்ள நடைபாதைகளில் வாகனம் நிறுத்துவது முற்றாகத் தடை…
சிறிய பாலங்கள் கம்பிப் பாலங்கள்இ மரப் பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள்…
வீதிகளின் இருபுறமும் இரண்டு மில்லியன் மரக் கன்றுகளை நட திட்டம்….
ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024ல் நிறைவு செய்து முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும்.
போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்வுபுள் காரணமாக வினைத்திறனானதும் உயர் தரத்துடனானதுமான வீதி முறைமை
ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கு ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் சுற்றாடலைப் பாதுகாக்கும்
வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று
(15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறிய பாலங்கள்இ மரப் பாலங்கள் மற்றும் கம்பிப் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களில் 8,000
கிலோமீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 400 கிலோமீற்றர் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
வீதி நிர்மாணப் பணியின்போது பயன்படுத்தப்படும் மண், கல், மணல் போன்றவற்றை தேவையானளவு தயார்படுத்தும் பொறுப்பை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்குவதாக
ஜனாதிபதி தெரிவித்தார். வளங்களை வழங்குகின்றபோது அனுமதி அளிக்க வேண்டிய சுற்றாடல், வன ஜீவராசிகள், வனப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும்
மாவட்ட மட்டத்தில் ஒன்றுகூடி முன் அனுமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதான நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் இரண்டு மில்லியன் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நாட்டுவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
நிர்மாணப் பணிகளுக்கு தடைகள் மற்றும் தாமதங்கள் எந்த வகையிலும் ஏற்படுவதற்கு இடம் வைக்கக்கூடாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். வீதி நிர்மாணப் பணிகளை
கண்காணிக்கும் பொறுப்பு அரசாங்கத்தினதும் ஒப்பந்தக்கார்கள் இருதரப்பினர்களினாலும் நடைபெற வேண்டும். உப
ஒப்பந்தங்களை வழங்குவதற்கு ஒரு போதும் இடமளிக்காது இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அனைத்து பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகள்இ சந்தைத் தொகுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது வாகனத் தரிப்பிடத்திற்கான இடவசதியை ஏற்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோஇ இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின்
செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வாழை தோட்டம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜு, பப்பாசி போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (15.09.2020) இடம்பெற்ற ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப்
பொருளிலான கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த வருடம் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய கலந்துரையாடலிலும் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் பதில் அளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஏற்கனவே 6 விதமான பயிர் செய்கைகளுக்கு நஸ்டஈடு வழங்கும் ஏற்பாடுகள் மாத்திரம் விவசாய அமைச்சில்
காணப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைய, மேற்குறிப்பிட்ட பயிர் செய்கைகளுக்கும் இயற்கை
அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, எதிர்காலத்தில் குறிப்பிட்ட பயர்செய்கைகள் பாதிக்கப்படும் போது உடனடியாக நஸ்டஈடு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விவசாய அமைச்சின் குறித்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்ததுடன், அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட
பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு ஜனாதிபதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த அமைச்சரவையில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அம்பன் புயலால்
பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஸ்டஈடு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றல்
நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றல்
நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று ஆரம்பமாக இருந்த நிலையில், நிகழ்வுகளுக்கு நேற்றைய தினம் நீதி மன்றம் தடை விதித்திருந்தது.
இதனையடுத்து நேற்று மாலை முதல் நல்லூரிலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் இருந்த திலீபனின் திருவுருவ படங்கள்,
பதாகைகள், கொடிகள் என்பன அகற்றப்பட்டு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், அவ்விடங்களுக்கு யாரும் சென்று வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு செய்தி சேகரிக்க சென்ற
ஊடக்வியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு பொலிஸிரால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
50-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்
50-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது ஐம்பதாவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார்.
50-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்
90-களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார்.
2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன்
உண்டு. 50-வயதைத் தொட்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அதை மறைக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு தான்
குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணனுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை
பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்
சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை
விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம்
வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால்
அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது.
மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத
தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர் உபகரணங்கள் உள்ளிட்ட 5 பொருட்களை
அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
கோப்புப்படம்
வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், கொரோனா வைரஸ் தற்போது டிக் டாக் செயலி என அமெரிக்கா- சீனா இடையிலான மோதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.
இந்த சூழலில் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருக்கும் உய்கூர் இன முஸ்லிம்கள் மீது
சீனா அரசு வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
மேலும் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுவர்கள், பெண்கள் உள்பட சிறுபான்மை மக்களை கட்டாய தொழிலாளர்களாக பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
எனவே ஜின்ஜியாங் பிராந்தியத்தில் கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர்
உபகரணங்கள் உள்ளிட்ட 5 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த தடையின் மூலமாக அமெரிக்க வினியோக சங்கிலிகளில் சட்ட விரோத, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் நடைமுறைகளை
நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்கிற செய்தியை சர்வதேச சமூகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்- புதிய சட்டம்
முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்- புதிய சட்டம்
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு
கல்லறைகளை தோண்ட வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது.
முக கவசம் அணியாதவர்கள் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும் – நூதன தண்டனை அறிவிப்பு
கோப்புப்படம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக
கவசம் அணியாத நபர்களுக்கு சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்பட்டு விடுகிறது.
இந்த நிலையில் இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் கல்லறைகளை
தோண்டவேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது. அந்த நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் தான் இந்த நூதன தண்டனை வழங்கப்படுகிறது.
அங்கு முக கவசம் இல்லாமல் பிடிபடும் நபர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள்
தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முக கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை
அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டேன்” என்று கூறினார்.
மேலும் அவர், “கொரோனா காலத்தில் முக கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது
விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் கூறினார்.







