அடைத்து வைக்க வாவேண்டி

அடைத்து வைக்க வாவேண்டி
Spread the love

அடைத்து வைக்க வாவேண்டி

உன்னை நானும் பார்க்கையில
உள்ளம் வியக்குதடி
உந்தன் விழியை பார்க்கையில
ஊந்துகணை வெடிக்குதடி

சத்தம் போடும் கண் அசைவில்
சந்தம் ஒன்று பிறக்குதடி
சாதனை பேசும் பார்வையில
சங்கதி சொல்லுதடி

சிவந்த உதடு சிரிக்கையில
சில்மிஷம் மெல்ல தெரியுதடி
சிதறிய உந்தன் கூந்தலதோ
சிந்தனை தூண்டுதடி

அச்சமில்லா பேச்சதனில்
அற நெறி தெரியுதடி
அழகே உந்தன் சிலை உடலை
ஆக்கி படைத்தது யாரடி

மொத்த உடலை பார்க்கையில
மொழிந்திட உன்னை துடிக்குதடி
அழகே உந்தன் பேரழகை
அடைத்து வைக்க வாவேண்டி…!

ஆக்கம் -13-05-2025
வன்னி மைந்தன்