பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்


பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்

பிரபல இந்தி நடிகையும், தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவருமான சோனம் கபூர், விமான நிறுவனம் மீது சரமாரியாக விமர்சித்து புகார் கூறியிருக்கிறார்.

பிரபல விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்
சோனம் கபூர்
இந்தி நடிகை சோனம் கபூர். அனில்கபூரின் மகளான இவர்

தனுசுடன் ராஞ்சனா என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

சோனம் கபூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த மாதம் மூன்று முறை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது உடமைகளை இழந்து விட்டேன். அதை வேறு விமானத்தில்

அனுப்பி வைத்து விட்டனர். இதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். இனி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இதை அந்த விமான நிறுவனத்துக்கும் டேக் செய்திருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்டுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான

நிறுவனம், லக்கேஜ் தாமதத்துக்கு வருந்துகிறோம், இது பற்றி சரியாக தகவல் அளித்துள்ளீர்களா?’ என்று கேட்டிருந்தது.

சோனம் கபூர் ட்விட்

பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்

இதற்கு சோனம் கபூர் ‘எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள்தான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மோசமான நிர்வாக செயல்பாடு’ என்று கோபமாக பதில் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த விமான நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளது. விரைவாக உங்கள் உடமைகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

நடிகை பூஜா ஹெக்டேவும் இதை ஆமோதித்துள்ளார். அவர் ‘கடந்த மாதம் எனது 2 உடமைகளை தொலைத்து

விட்டார்கள். பின்னர் கூரியர் மூலம் அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு இது வாடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

இவரது சமூக வலைதள பதிவில் இவரது ரசிகர்களும் இந்த விமான சேவையை பயன்படுத்தாமல் விலகி கொள்ளுங்கள்

என் அப்பரப்புரை புரிந்து வருகினறனர் .

அம்மணி செய்த வேலையால் பிரபல விமான சேவை நிறுவனத்திற்கு நஷ்ட்டத்தை ,அவ பெயரை ஏற்படுத்தி விட்டதாக பார்க்க படுகிறது .

சில விமான நிறுவனங்கள் பயணிகளை இவ்வாறு சீண்டி பார்ப்பதில் முன் நிலை வகிப்பது குறிப்பிட தக்கது

பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம்