பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார் ..? video


பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார் ..? video

ஊரடங்கை போட்டு வைத்து
ஊரெல்லாம் அடக்கி வைத்து
ஏழைகளை வதைக்குது பார்
ஏறெடுத்தும் பார்கலை பார் …..

நாடாளும் மன்னர் என்று
நா கிழிய கத்துகிறார் …
ஒத்த வேளை உணவின்றி
ஓலை குடில் அழுகுது பார் ….

கத்துகிற இவர் சேதி
காதோரம் கேட்கலையோ ..?
சொத்தெழுதி கொடுக்க வேண்டாம்
சோறு போட முடியலையையோ ..?

வந்த கொரனோ அடக்கிடத்தான்
வழியேதும் தெரியலையோ …?
திண்ணையில அழுகிறவர் – குரல்
தெருவேதும் கேட்கலையோ …?

ஏ மனித உன் மனதை
எங்கு கொண்டு சிறை வைத்தாய் ..?
பாலகர்கள் பசிபோக்க
பைந்தமிழே முடியலையோ …?

பட்டினியால் ஊர் கதற
பாரதமும் காணலையோ ..?
கொட்டுகிற கண்ணீரில்
கொடுங்கோலும் கரையலையோ …?

ஒட்டு வாங்க ஓடி வந்தார்
ஒரு வரையும் காணலையே …
நம்பி நின்ற மக்களையே
நாடி வந்தும் பார்க்கலையே ….

தேம்பி தேம்பி அழும் பிள்ளாய்
தேவைகளை போக்கிடுவாய் …
தேவடியா பயலுகளா
தேர்தல் வந்தால் வருவீரா ….!

  • வன்னி மைந்தன்-
    -ஆக்கம் -09-05-2020