தமிழன் அழிந்த நாள் ….!

Spread the love

தமிழன் அழிந்த நாள் ….!

நந்தி கடலே நந்தி கடலே
நீயும் அழுவதா
நித்தம் குமுறி மடிவதா – நீயும்
நித்தம் குமுறி மடிவதா

ஆண்டு பல ஆகிப் போச்சு
ஆனாலும் என்ன ஆச்சு
உலகம் எல்லாம் பொய்யா போச்சு – எங்கள்
உணர்வுகளும் செத்து போச்சு

வல்லரசு ஆதிக்கம் தான்
வாலாட்டுது எங்கும் தான்
பலம் இழந்தால் இழிவாச்சு
பாதணியாய் கிழிவதாச்சு

படு கொலையை புரிந்தாரை
பாடையிலே ஏற்றலையே
தீர்ப்பெழுத மறந்தவரே
தீர்வென்ன கூறாயோ

ஆதிக்க இன வெறியான்
அரசாண்டு மகிழ்வதுவோ
இனம் அழித்தான் இனவெறியன்
இன்றாழ விடுவதுவோ

முள்ளிவாய்க்கால் முடிவிற்கு
முன் தீர்ப்பு எழுதிவிடு
நாம் வாழும் நாடொன்றை
நலமுடனே தந்து விடு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply