மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்

இதனை SHARE பண்ணுங்க

மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன் என்று தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்


நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு

எதிராக போராடியவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்து உள்ளார். தனது சமூக வலைத் தள பக்கத்தில் கங்கனா

வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில், துரோகிகளை மன்னிக்க கூடாது என்று எழுதினேன். உள்நாட்டு

துரோகிகள் பணத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பதிவிட்டேன்.

கங்கனா ரனாவத்

இந்த பதிவுக்காக தீய சக்திகளிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஒருவர் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இத்தகைய மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன்.

நாட்டுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி தொடர்ந்து பேசுவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply