
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு ,இருள் மூழ்கிய இலங்கை ஐம்பதாயிரம் பேர் தவிப்பு என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்து சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்று வரும் புயல், மழை,வெள்ளம், காரணமாக மின்சாரம் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்பு புயல் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் ,இதனால் மின்சார கம்பங்கள் முறிந்து விழுந்து ,வீடுகளுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பல வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இந்த மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மின்சாரத்தை வழங்கும் நடவடிக்கையில் மின்சார வாரியம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு மேல் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மின்சார கம்பிகள் முறிந்து விழுந்ததால் இந்த மின்சார துண்டிப்பு இடம்பெற்றது.
பாதிக்க பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் மீட்பு படைகள் செயலாற்றி பெறுவதால், விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மின்சாரம் மீள் எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் மக்கள் இயல்பு வாழ்க்கை என்பன இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.