ஆளை கொல்லும் குளிருக்குள் அதி காலை வேளை பிள்ளை பெற்ற இளம் பெண் -பிறந்த பிள்ளையை பையில் சுற்றி வெப்பம் ஊட்டிய தாய் கண்ணீர் சம்பவம்
ஜெர்மன் Nuremberg பகுதியில் அதி காலை ஐந்து மணியளவில்
இருபது வயது இளம் வீடற்ற பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தார்
பிறந்த சிசுவை தான் வைத்திருந்த பையொன்றினால சுற்றி
பாதுகாத்த படி , ஐந்து மைனஸ் குளிர் வெப்ப நிலைக்குள் உறங்கியபடி இருந்துள்ளார்
மேற்படி சம்பவத்தை கண்ணுற்றவர்கள் அம்புலன்சுக்கு வழங்கிய
தகவலை அடுத்து தாயும் ,சேயும் மீட்க பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
உலக ஊடகங்களில் வெளியான இந்த செய்தியை அடுத்து அந்த இளம்
பெண்ணுக்கு உதவிட உலகில் பல மக்கள் முன்வந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது