ஓடிய காரில் குதித்த பெண்
ஓடிய காரில் குதித்த பெண் சம்பவத்தால் கொழும்பு நகரமே பரபரப்பில் உறைந்து இருக்கின்றது.
இலங்கை ராத்மலான பகுதியில் கார் ஒன்றுக்குள் நுழைந்த திருடன் அந்த காரை திருடி செல்ல முற்பட்டுள்ளார்.
அப்பொழுது அந்த காருக்குள் 76 வயதில் மனைவியை விட்டு 80 வயது கணவன் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்று இருக்கின்றார்.
காருக்குள் திருடர்கள் நுழைந்ததை அடுத்து ,சுதாரித்துக் கொண்ட பெண் காரில் இருந்து குதித்து தப்பித்துக் கொண்டார்.
ஓடுகிற காரில் இருந்து குதிக்க வேண்டாம் என திருடன் பெண்ணுக்கு தெரியப்படுத்திய பொழுதும் ,அவர் அதனை பொருட்படுத்தாது காரில் இருந்து குதித்துள்ளார்.
அவர் காரில் இருந்து குதித்து தப்பிய பொழுதும் ,காரை திருடிக் கொண்டு திருடன் ஓடி விட்டான்.
குறித்த கார், தெஹிவளை பகுதியில் தங்க சங்கிலி அபகரிப்பிலும் ஈடுபடுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது திருடனை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்சம் ஊழல் கடத்தல் கொலைகள் .பாதுகாப்பு அச்சுறுத்தல் .இல்லாத ஒரு நாட்டை கட்டி காப்பார் என அனுரா அரசு கூறி இருந்தது.
ஆனால் வீதிக்கு வீதி மீட்டருக்கு மீட்டர் காவல்துறையினர் வீதியில் நிற்கின்ற பொழுதும் ,அது கடந்து ,அதை மறந்து, திருடர்கள் இவ்வாறு கைவரிசையை காட்டுவதே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக ஆளுகின்ற அனுரா அரசினால் நாட்டில் வாழ்கின்ற அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை .
என்பதையே இந்த கார் திருட்டுச் சம்பவமும், ஓடிய காரிலிருந்து 76 வயது மூதாட்டி குறித்து தப்பிய சம்பவமும் கோடிட்டு காட்டுகிறது.
இந்தச் சம்பவங்கள் உள்ளூராட்சி தேர்தலில் அனுரா ஆட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாக கூறப்படுகிறது.
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை









