Tag: ஷில்பா ஷெட்டி
நடிகை மோசடி சொத்து முடக்கம்
நடிகை மோசடி சொத்து முடக்கம்
நடிகை ஷில்பா ஷெட்டி மோசடி வழக்கில் அவரது 97 கோடி சொத்து முடக்கம்,திரை பிரபலங்கள் நடிகை செயலினால் அதிர்ச்சி .
பிட்காயின் மோசடியில் ஷில்பா ஷெட்டி
பிட்காயின் மோசடியில் நாடிகை ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தெரிவித்து வருமானவரி நடத்திய சோதனையின் பொழுதே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .
தனது திரையுலக புகழை மைய படுத்தி, இவர் இந்த பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைனில் பிட்காயின் Mining Farm
உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட் கொயினை வாங்கியுள்ளார் .
அதன் இன்றைய சந்தை மதிப்பு 150 கோடி ரூபாய் என தெரிவிக்க பட்டுள்ளது .திட்டமிட்டு பிட்கொயின் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
நடிகை கோடி சொத்து பறிமுதல்
இந்த மோசடி வழக்கின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா பறிமுதல் செய்ய பட்டன .
அவற்றுடன் கணவர் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்குகளும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
இந்திய திரையுலகில் நடிகை ஷில்பா ஷெட்டி சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதால் ,மேலும் பல திடுக்கிடும் விடயங்கள் வெளிவர கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இவர்களானால் பாதிக்க பட்டவர்கள் வழங்கிய இரகசிய தகவலை அடுத்தே, இந்த வேட்டையில் அமுலாக்கள் பிரிவு ஈடுபட்டு ,இந்த பறிமுதல் செய்த்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நரேந்திர மோடி ஆடசியில் நடக்கும் மிரட்டல்
நரேந்திர மோடி ஆட்சியில் இவ்வாறு பிரபலகள் மிரட்டப்பட்டு அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்டு வருவதாக ,சில சமூகவலை பதிவுகள் தெரிவிக்கின்றன .
பல அரசியல்வாதிகள் வீடுகள் ,தொழில் நிறுவனங்கள் வீடுகளில் நடத்த பட்ட அமலாக்க படையின் தேடுதலின் பொழுது, கோடி கணக்கில் பணம் வாங்க பட்டதான செய்திகள் வெளியான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனால் நடிகை ஷில்பா ஷெட்டியம் அரசியல் பழிவாங்கல் ஊடாகவே பழிவாங்க பட்டுள்ளனர் எனவும் ,ஏனைய திரை பிரபலங்களுக்கும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் பாசிகர், பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில்
விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் மேக்கோரினா என்ற பாடலுக்கு தோன்றி அனைவரையும் கவர்ந்தார். இவருடைய தந்தை 2015-ஆம் ஆண்டு பர்ஹத் அம்ரா
என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். 2017-ஆம் ஆண்டு திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்த அவர் இறந்துவிட்டார். அந்த கடனை அவரின்
குடுத்திடம் திருப்பி கொடுக்கும் படி கடன் வழங்கியவர் கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க முன்வராததால் ஷில்பா ஷெட்டி, அவர் தாயார் சுனந்தா மற்றும் சகோதரி
சமிந்தா ஷெட்டி ஆகியோர் மீது மும்பை ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி வரும் 28-ம் தேதி ஷில்பா ஷெட்டி, சகோதரி சமிந்தா ஷெட்டி, தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்தார். ஷில்பா ஷெட்டியின் கணவர் மீதும் ஆபாச
வீடியோ தயாரித்து மொபைல் செயலி மூலம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷில்பா ஷெட்டி கணவரின் மாஸ்டர் பிளான் – ஆபாச வீடியோக்கள் பல கோடி ரூபாய்க்கு பேரம்.
ஷில்பா ஷெட்டி கணவரின் மாஸ்டர் பிளான் – ஆபாச வீடியோக்கள் பல கோடி ரூபாய்க்கு பேரம்.
ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் மாஸ்டர் பிளான் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.ஷில்பா ஷெட்டி – கணவர் ராஜ்
குந்த்ராஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை
போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரியும் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குந்த்ராவுக்கு 2 மாதம் கழித்து நேற்று மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.
ஆபாச வழக்கில் தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட சில நிமிடங்களில், நடிகை ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மோசமான புயலுக்குப் பிறகு அழகான விஷயங்கள் நடக்கலாம் என்பதை நிரூபிக்க வானவில் உள்ளன என கூறி இருந்தார்.
ஷில்பா ஷெட்டியின் கணவர்
தற்போது வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக குந்த்ராவின் செல்போன், லேப்டாப் மற்றும்
ஹார்ட் டிரைவ் ஆகியவற்றிலிருந்து சுமார் 119 ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த வீடியோக்களை ரூ.9 கோடிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு
கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு
கணவர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு?
ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த ஜூலை மாதம் கைது
செய்யப்பட்டார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜ்
குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற, நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜ் குந்த்ராவை
பிரிந்து, அவர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து நடிகை
ஷில்பா ஷெட்டியிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ஆபாசப் படங்களைத் தயாரித்த- ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
ஆபாசப் படங்களைத் தயாரித்த- ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது
ராஜ் குந்த்ரா
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ராஜ்
குந்த்ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது எனவும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
என்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் கொரோனா… பிரபல நடிகை
என்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் கொரோனா… பிரபல நடிகை
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா
ஷெட்டியின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.
இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய
பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் என்னுடைய கணவர்
உள்பட எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
ஷில்பா ஷெட்டி
ஆனால் அதே நேரத்தில் கடவுளின் அருளால் எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என
ரிசல்ட் வந்துள்ளது. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா விதிமுறைகளை
கடைப்பிடித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அனைவரும் மருத்துவர்களின் அறிவுரையின்படி சிகிச்சை பெற்று குணமாகி வருகின்றனர் என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.









