Posted in சினிமா

வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு

– வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்துவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“வாழையடி வாழையென வளருமடா தமிழ்க்கூட்டம்” – வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
வைரமுத்து


தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலின்

மூலம் இவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்

பிடித்தார். இவர் இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.

வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி

தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் வைரமுத்து எழுதி வெளியிட்ட இந்தப் புத்தகம் அனைவரின்

பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் புத்தகத்தை படித்த ரஜினிகாந்த், வைரமுத்து குறித்து புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரன் இந்த புத்தகத்தை படிக்கும் வீடியோ

சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து வைரமுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,

“காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்

நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்

தமிழாற்றுப்படையோடும்
தமிழர் படையோடும்
வா மகனே”

என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    Posted in சினிமா

    இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு

    இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு

    ராஜபக்சே தப்பி ஓட்டம் சர்வதேச சமூகமே தமிழனின் வீரத்திற்கு தலைவணங்கு என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

    இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு
    வைரமுத்து
    இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரண மாக மக்கள் புரட்சி

    வெடித்துள்ளது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக சேர்ந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற குரல் இலங்கை தீவு முழுக்க எதிரொலிக்கிறது.


    இதனால் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் அவரது வீடு போராட்டக்காரர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டதால் வீட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறி திரிகோண மலையில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இதே மே மாதம் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் லட்சக்கணக்கான தமிழர்களும் கொல்லப்பட்டனர். இதன் பலனைத்தான் ராஜபக்சே

    தற்போது அனுபவித்து வருகிறார் என்ற பேச்சு, உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    வைரமுத்து

    நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் தாயகம் பிரியேன் தாய் மண்ணில் மரிப்பேன் என்ற பிரபாகரன் தமிழனின் பேராண்மை எங்கே.. ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்சே எங்கே… ஓ சர்வதேச சமூகமே இப்போதேனும்

    தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.
    இவ்வாறு கவிஞர் வைரமுத்து உணர்ச்சிப் பொங்க தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

      Posted in சினிமா

      ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும்.. வைரமுத்து

      ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும்.. வைரமுத்து

      இரண்டாவது நாளாக ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதை குறித்து வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

      ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும்.. வைரமுத்து பதிவு
      வைரமுத்து


      இரண்டாவது நாளாக ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கிவ்வை குறிவைத்து தாக்கும் ரஷ்ய படைகள் கிவ் மீது 36

      பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்ய படைகள் ஏவி தாக்கியதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4.20 மணிக்கு கிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டது.

      உக்ரைனின் கேர்சன் என்ற பகுதியை கைப்பற்றிய ரஷிய ராணுவம் கேர்சன் பகுதியில் உள்ள அரசு கட்டடத்தில் ரஷிய தேசிய கொடியை ஏற்றினர். முதல்நாள் போரில்

      ரஷியாவின் 800 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் என் மீது குறிவைத்து உக்ரைன் தலைநகரில்

      நுழைந்துள்ளது எனவும், என்னை அழித்தால் உக்ரைனை அழித்து விடலாம் என ரஷ்யா நினைக்கிறது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

      இந்தநிலையில் இந்த போர் குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நான் போரை வெறுக்கிறேன். அது உலகத்தின் விலா

      எலும்புகளையும் பாதிக்கும். கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும். ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும். ரஷ்யா மீது ஜி7 நாடுகளின்

      பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். நான் போரை வெறுக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு வைரலாகி வருகிறது.

      நான்
      போரை வெறுக்கிறேன்

      அது உலகத்தின்
      விலா எலும்புகளையும் பாதிக்கும்

      கீவ் நகரத்தில் விழுந்த குண்டு
      கீரிப்பட்டியின்
      கீரைக்காரி கூடை உடைக்கும்

      ரஷ்யா
      போரை நிறுத்திவிட
      வேண்டும்

      ரஷ்யா மீது
      ஜி7 நாடுகளின்
      பொருளாதாரத் தடைகள்
      நீக்கப்பட வேண்டும்

      நான்
      போரை வெறுக்கிறேன்

        Posted in சினிமா

        இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து

        இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து

        லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

        இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து உருக்கம்
        வைரமுத்து


        பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை

        8.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவு நாடு முழுவதும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

        ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், பல்வேறு இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்

        . அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

        அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

        “இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது. இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்துவிட்டது. லதா மங்கேஷ்கரின் பெருமை என்னவென்றால், தான் வாழ்ந்த

        காலத்தின் மீது தன்னுடைய இசை என்ற ஆதிக்கத்தைச் செலுத்தியது. அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல, ரோட்டுக் குடிக்கும் தான். உழைக்கும் மக்கள் அவர் பாடிய பாடலைக் கேட்டு தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள், காதலை

        வளர்த்திருக்கிறார்கள், தங்கள் வியர்வையை சுண்டி எறிந்திருக்கிறார்கள், தங்கள் துக்கத்தை மறந்திருக்கிறார்கள், மகிழ்ச்சியில் ஆடியிருக்கிறார்கள். இந்தியர்களின்

        வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்ட அந்த மாபெரும் இசையரசியின் புகழ் வாழ்க, அவர் பாடல்கள் வெல்க!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

          Posted in சினிமா

          மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து

          மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து

          ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

          மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து டுவிட்
          வைரமுத்து, ரஜினிகாந்த்


          நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள்

          ஐஸ்வர்யா ஆகியோர் அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து

          வெளியேறுவதைக் கண்ட ரசிகர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது.

          இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

          இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன்.

          அவர் குரலில் ஆரோக்கியம் – நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

            Posted in Uncategorized

            திருமண மண்டபத்தை வழங்குகிறேன் – வைரமுத்து அறிவிப்பு

            திருமண மண்டபத்தை வழங்குகிறேன் – வைரமுத்து அறிவிப்பு

            தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை

            ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

            இந்த நிலையில் பல அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு

            முடிவெடுத்தால் தனது திருமண மண்டபத்தை கொடுத்து உதவிட தயார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

            இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள்

            ‘பொன்மணி மாளிகை’ திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?’ என்று பதிவு செய்திருக்கிறார்.

              Posted in சினிமா

              இளம் பாடகியை பாராட்டிய வைரமுத்து

              இளம் பாடகியை பாராட்டிய வைரமுத்து

              தான் எழுதிய பாடலுக்கு கவர் பாடலை உருவாக்கிய இளம் பாடகியை பாடலாசிரியர் வைரமுத்து நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

              இளம் பாடகியை பாராட்டிய வைரமுத்து
              நக்‌ஷா சரண், வைரமுத்து
              சென்னையை சேர்ந்தவர் நக்‌ஷா சரண்.

              பாடல்கள் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், பல வருடங்களுக்கு முன்பு அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான்

              இசையமைத்து வெளிவந்த முதல் திரைப்படமான ரோஜா படத்தில் இடம் பெற்ற “புது வெள்ளை மழை” எனும் பாடல் ரொம்பவே ஈர்த்துவிட்டதாம்.

              இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் நக்‌ஷா சரண், தற்போது இந்த பாடலுக்கு தமிழ்,

              தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் புதிய வடிவிலான கவர் சாங் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.

              தனது வைர வரிகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட பாடலாசிரியர் வைரமுத்து, ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று

              கொண்டிருக்கும் இந்த கவர் பாடலை யூடியூபில் பார்த்துவிட்டு, நக்‌ஷா சரணை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

              Home » வைரமுத்து