சம்பந்தன் விடை பெற்றார்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சம்பந்தன் விடை பெற்றார்

சம்பந்தன் விடை பெற்றார்

தேசத்தின் விடுதலைக்காய்
தெருவிறங்கி வந்தவராம் – எம்
தேசிய தலைவனையும்
தெருவெறிந்து போனவராம்

கூட்டமைப்பின் தலைவராய்
கூடு கட்டி வைத்தவரை
நாயிடை கேவலமாய்
நாவாட்டி நின்றவராம்

தேசத்தின் தலைமகனை
தெருவெறிந்து போனவனை
மனமிருத்தி பாடவோ – நீ
மா மனிதன் ஆனவானோ

குள்ளநரி காடையரின்
குழு தலைவனானவனே
பின்னாளில் தமிழ் அழிவின்
பிள்ளை கறி மணந்தவனே

அண்ணனவன் சொன்னதற்காய்
அன்னை தமிழ் ஏற்றதுவே
உந்தன் புத்தி மாறாது
உமிழ்ந்து திரிந்தவனே

இன்று இறந்து போனவனே
இறுதியிலே என் கண்டாய்
ஆனாலும் இரங்குகிறோம்
ஆழ்ந்த இரங்கல் உந்தனுக்கு ..!

ஆக்கம் 01-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

கவிதை #kavithai #kavithaigal #கவிதைகள்

மூத்த அரசியல் தலைவர் ,சம்பந்தன் 30-06-2024 விடை பெற்றார் ,அவருக்கு என் இரங்கல் பா

Posted in உலக செய்திகள்

வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்

வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்

பிறிதான் இரடாம் மகாராணி எலிசபெத் அவர்கள் ,உடல் இன்று வின்சன் கோட்டையில் நல்லடக்கம் செய்யப் பட்டது .

இன்றைய நாள் கண்ணீரால் நனைந்தது .பல லட்சம் மக்கள் கண்ணீரால் விடை கொடுத்து அனுப்பி வைத்தனர் .


எழுபது ஆண்டு காலம் மகாராணியாக வலம் வந்த எலிசபெத் விடை பெற்றார் .வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்

இவரது ஆட்சியில் ஆதிக்கம் நிறைந்ததும் ,அடக்குமுறை விரிந்தும் ,ஆனால் பிரிட்டன் மக்கள் செழித்து வாழ்ந்திட அளப்பரிய பாங்கினை ஆற்றியவராக திகழ்கிறார் என்கிறது கருத்தியல் .

எலிசபெத் அவர்களின் இறுதி நிகழ்வில் ,பல நாட்டு தலைவர்கள் விசேடமாக கலந்து கொண்டு தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர் .

கரி .வில்லியம் உள்ளிட்டவர்கள் அதிக கவலையில் தோய்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது .

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ,இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை இங்கே குறிப்பிட தக்கது .