Tag: விக்னேஷ் சிவன்
காதலனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா
காதலனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா
விக்னேஷ் சிவன், நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்
இப்படம் காமெடி ரொமான்ஸ் படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன்
இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர்
18-ம் தேதி ‘டூ.. டூ.. டூ’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்
அந்த டுவிட்டில் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என குறிப்பிட்டுள்ளார். இது நயன்தாரா கொடுத்த புதுபட்டம் என கூறப்படுகிறது.
நயன்தாரா குறித்த ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளும்… விக்னேஷ் சிவனின் பதில்
நயன்தாரா குறித்த ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளும்… விக்னேஷ் சிவனின் பதில்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 6 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
நயன்தாரா குறித்த ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளும்… விக்னேஷ் சிவனின் பதில்களும்
விக்னேஷ் சிவன், நயன்தாரா
சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற
படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.
இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான
கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார். அதன் தொகுப்பை காணலாம்.
கேள்வி: நயன்தாராவுக்காக உங்களின் முதல் கிப்ட் என்ன?
பதில்: தங்கமே… பாடல்
கேள்வி: நயன்தாராவுக்கு எந்த லுக் பொருத்தமாக இருக்கும், வெஸ்டர்ன், டிரெடிஷனல் உங்கள் விருப்பம் எது?
பதில்: அவர் புடவையில் இருப்பது ரொம்ப பிடிக்கும்.
கேள்வி: நயன்தாரா அழகின் ரகசியம் என்ன?
பதில்: பிரார்த்தனைகள்
விக்னேஷ் சிவன், நயன்தாரா
கேள்வி: நயன்தாராவுடன் உங்களது விருப்பமான இடம்?
பதில்: அவருடன் எங்கு சென்றாலும் அது உடனடியாக விருப்பமான இடமாகிவிடும்.
கேள்வி: நயன்தாரா நடிச்சதுல உங்க அபிமான திரைப்படம் எது?
பதில்: ராஜா ராணி
கேள்வி: நயன்தாரா, உங்களைப் பற்றிய சில ரகசியம்
பதில்: டின்னர் முடிந்ததும் வீட்டில் அனைத்து பாத்திரங்களையும் அவரே கழுவுவார்.
கேள்வி: நயன்தாரா கூட நடிக்க ஏன் முயற்சி பண்ணல?
பதில்: முயற்சி பண்றேன். ஆனா, அவங்க கண்டுபிடிச்சிடுறாங்க.
கேள்வி: நயன் சமைக்கிறதுல பிடிச்சது?
பதில்: கீ ரைஸ், சிக்கன் கறி
கேள்வி: ஒரு நாள் திடீரென, நீங்கள் நயன்தாராவாக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: ஷுட்டிங் போக வேண்டியதுதான்.
கேள்வி: நயன்தாரா பத்திதான் எல்லாரும் கேக்குறாங்க, என்ன பீல் பண்றீங்க?
பதில்: பெருமையா இருக்கு
தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா
தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா
விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.
விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன்
கேரளாவில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதற்காக தான் அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஓணம் பண்டிகையை கொண்டாட இருவரும், இதேபோல் தனி விமானத்தில் கேரளா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா, தற்போது ரஜினி – சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.
இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார்.

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா
திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவ… வைரலாகும் புகைப்படம்
திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன்,
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும்
கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம்
விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து
ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சில திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்கள்.
அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற
திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இந்த படத்தின்
வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த
நிலையில் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்
நேஷனல் திரைப்பட விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்படுகிறது.
கூழாங்கல் படக்குழுவினர்
இதற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்
. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பிஎஸ்.
வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திர்கு யுவன்ஷங்கர்
ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்
தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன், தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த தயாரிப்பாளரை வில்லனாக்கி இருக்கிறார்.
தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய
சமீபத்தில் வெளியான பாவ கதைகள் இணைய தொடரில்
விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்ரணும் படத்தில் அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார். முதல் படம் என்பது
தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்ததால் தொடர்ந்து வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் இவருக்கு குவிகிறது.
ஆனால் இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘என் தந்தை வேணு தெலுங்கு சினிமாவில் பிரபல
ஒளிப்பதிவாளர். தொடக்கத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தேன். 3 இந்தி படங்கள் இயக்கினேன். இந்தியில் படம் தயாரித்தபோது ஐஸ்வர்யா ராய் என் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது.
பதம் குமார்
உலக அழகி போட்டியில் வென்ற பின்னர் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் தயாரிப்பு, வினியோகத்தில் இறங்கிவிட்டேன். நானி, வாணி கபூர்
நடிப்பில் வெளியான ஆகா கல்யாணம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன், வரலட்சுமி நடித்த போடா போடி படங்கள் என் தயாரிப்பு தான்.
என் தயாரிப்பில் அடுத்து பங்கஜ் திரிபாதி நடிப்பில் இந்தி படம் தொடங்க உள்ளது. நீங்கள் என்னை இயக்குனராக்கினீர்கள். நான் உங்களை நடிகராக்குகிறேன் என்று விக்னேஷ் சிவன்
உணர்வுபூர்வமாக சொன்னதால் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்துள்ளது. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.






