Posted in சினிமா

சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாய்பல்லவி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
சாய்பல்லவி


மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய

அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில்

ஒருவரானார். பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச்

சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷியாம் சிங்காராய் படம்

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.

அவரது கடைசி படமாக ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படங்களிலும் சாய் பல்லவி

நடிக்க சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாய்

பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்பதுதான் அந்த சந்தேகம்.
இது பற்றி இணையத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

    Posted in சினிமா

    மரணத்தில் இருந்து தப்பினேன் – பேசுகையில் கண்கலங்கிய ராணா

    மரணத்தில் இருந்து தப்பினேன் – பேசுகையில் கண்கலங்கிய ராணா

    சமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

    ரத்த அழுத்தம்…. இதயத்தில் பிரச்சனை – உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா
    ராணா டகுபதி


    ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி,

    பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ்

    என்ற பெண் தொழில் அதிபரை காதலித்து வந்த ராணா கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில், சமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “வாழ்க்கை

    மிக வேகமாகப் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு சிக்கல் வந்தது. பிறந்ததிலிருந்தே எனக்கு சில உடல் உபாதைகள் இருந்தன.

    ராணா டகுபதி

    ரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் சேர்ந்திருந்தது. சிறுநீரகங்கள் செயல் இழந்தது. இதனால் ரத்தக் கசிவு, பக்கவாதம்

    வருவதற்கான 70 சதவீதம் வாய்ப்புகள் இருந்தன. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன” எனக்கூறி கண்கலங்கினார் ராணா.