வெற்ற பெற தனித்திரு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வெற்ற பெற தனித்திரு

வெற்ற பெற தனித்திரு

நேற்று என்னுடன் நேர்மையாய் இருந்தவர்
நெஞ்சில் ஏறி நேர் மிதித்தார்
பண்புடன் நாளுமே பழகி திரிந்தவர்
பாதியில் பகையாய் ஏனோ முளைத்தார் ..?

அன்பு காட்டியே அறநிலை சொன்னவர்
அந்தோ அவர் எதிரியாய் நின்றார்
இந்த நிலையில் இதயங்கள் மாறிட
இன்று இவ் நிலை ஏனென்று கூறார்

ஏதோ ஒன்றை ஏற்க மறுத்ததால்
எதையோ ஒன்றை எடுக்க முனைந்ததால்
ஆத்திர நிலையால் அலை கடலானர்
அக்கினி குழம்பாய் அப்படி கொதித்தார்

எத்திசை திரும்பினும் எழுந்தே வெடித்தார்
ஏனென்றெ கேள்விக்கு ஏதோ சொன்னார்
புத்தியை கிழித்தெரு புலனை மேய்ந்தால்
புன்னகை சொன்னது தப்பினாய் என்று

அப்படி சிந்தை அகலம் தந்தது
அப்படி நீயே தனித்திரு என்றது
வென்றிட தனிமையே தீரம் என்றது
வேகமாய் சிந்திக்க இதுவே உகந்தது

முடிவில் சோதனை முற்று பெற்றது
மூலமே வென்றிட தனிமையே என்றது
இறுதியில் தனிமையே எம்முடன் என்றது
இதனை உணர்ந்தே பயணி என்றது ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-04-2024

பாயும் பெண் புலி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பாயும் பெண் புலி

பாயும் பெண் புலி

காடு காத்த கரும்புலியை
கா தழைத்து கொன்றவரே
செய்த செயல் தவறாச்சு – சிசு
செம்புலியாய் பாய்ந்திருச்சு

கோட்டையிலே கொடி கட்டி
கொடுமைகளை உடைத்தெறிய
வீரமுடன் வந்திருச்சு – திறன்
விவேகமது கொண்டிருச்சு

நான் என்ற ஆணவத்தில்
நாடாண்ட கோமகனே
முடி தரித்த உன் ஆட்சி
முள் வேலியில் வீழ்ந்திருச்சு

அவள் அழுத கண்ணீர் துளி
அனலாக கொத்திருக்கு
குற்றவாளி உங்களை தான்
கூண்டில் அடைக்க வந்திருக்கு

வால் ஆட்டி திரிந்தவரும்
வாயாட்டி நகைத்தவரும்
சிறை புகும் காலமிது
சிரித்து இன்று மலர்கிறது

ஆதிக்க வெறி என்றும்
அரங்கமதில் நிலைக்காது
நீதியின் வெற்றிடங்கள்
நிரம்பிடா உறங்காது

வீரப்பன் விழிக்கின்றான்
விடுதலையை அழைக்கின்றான்
சத்திய தேவதை யோ
சரிதம் எழுத வருகிறாள்

நாம் தமிழர் ஆட்சியில்
நல்லாட்சி செய்திடுவாள்
நலிந்த மக்கள் மகிழ்ந்திடவே
நல்லுதவி புரிந்திடுவாள் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-03-2024

23-03-2024 நாம் தமிழர் கட்சியில் 40 வேட்பாளர் போட்டியில் வீரப்பன் மகள் சத்தியா போட்டியிட்ட செய்தி அறிந்த பொழுது …

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்
Posted in கவிதைகள்

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்

வீர வேங்கை இவர்கள் தான் |புரட்சி கவிதை |காசா எழுச்சி கவிதைகள்

சொல்லி சொல்லி அடிக்கின்ற
சொந்தங்களை பார்க்கையில
கண் இரண்டில் நீர் வடியும்
கரை தேடி அவை ஓடும்

பன்முகத்து ஆளுமையாய்
படை நகர்த்தும் அவர் கண்டு
விண்ணுலகே வியக்கு தின்று
விடி காலை சிவக்கிதின்று

மண் பறிக்க வந்தவரை
மண்டியிடா நெஞ்செழுந்து
வீழ்த்துகின்ற இவரை தான்
வின்வெளியே அளக்குது

அடிமைகளை உடைக்கின்ற
அக்கினி குஞ்சுகளாய்
வெடிக்கின்ற இவர்களது
வேகத்தை பாடி விடு

உரக்க வெடிக்கின்ற
ஊந்துகணை அதிர்வினில
அரக்கர் படைகள் எல்லாம்
அழிகிறது அவ்விடத்தில்

இன்றைய நாள் குறிப்பில்
இரக்கம் இலார் இவரென்று
எழுதி வைத்த வரலாறு
எண் திசையும் பாடுகிறது

அச்சு பிசகாத
அழகிய சாதனையை
விதைத்த இவர்கள்
வீர வேங்கை தான் …!

கவிதை வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க