Tag: பரீட்சை
O/L பரீட்சை பெறுபேறுகள்
O/L பரீட்சை பெறுபேறுகள்
O/L பரீட்சை பெறுபேறுகள் ,2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார்.
இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.
இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 சதவீதமாகும்,
மாகாண வாரியாக மாணவர் சித்தி சதவீதம் பின்வருமாறு,
மேல் 74.47%
மத்திய 73.91%
தெற்கு 75.64%
வடக்கு 69.86%
கிழக்கு 74.26%
வடமேல் 71.47%
வட மத்திய 70.24%
ஊவா 73.14
சப்ரகமுவ 73.47%
பாட வாரியாக சித்தி சதவீதம் பின்வருமாறு,
பௌத்தம் – 83.21%
சைவநெறி – 82.96%
கத்தோலிக்கம் 90.22%
கிறிஸ்தவம் 91.49%
இஸ்லாம் 85.45%
ஆங்கிலம் 73.82%
சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73%
தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03%
வரலாறு 82.17%
அறிவியல் 71.06%
கணிதம் 69.07%
அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34%
மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை
மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை
மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை ,2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சனிக்கிழமை (26) அன்று வெளியான நிலையில்,
பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02ஆம் திகதி முதல் மே 16ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி ,இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார்.
பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 2023ஆம் ஆண்டில் 64.33 சதவீதத்தை எட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 274,361 பரீட்சார்த்திகள் தோற்றியதாகவும், அவர்களில் 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், தேர்வில் 222,774 பள்ளி பரீட்சார்த்திகளும் 51,587 தனியார் பரீட்சார்த்திகளும் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், பரீட்சையில் 3 முக்கிய பாடங்களிலும் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பரீட்சை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர்
பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID
பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன்னதாகவே குறித்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை வினாத்தாள் வெளியீடு விசாரணையில் CID
அத்துடன், குறித்த வினாத்தாளுக்கான பரீட்சை இடம்பெறவுள்ள புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த வினாத்தாளின் கேள்விகள் மற்றொரு தாளில் கையாள் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானமை தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய நேர அட்டவணை
பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய நேர அட்டவணை
கொவிட் தொற்றால் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டு பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர (உயர்தரம்) பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்காக கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 01.11.2021 அன்று நடைபொற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
- கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேரஅட்டவணை
2021 ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் 06 மாதங்களின் பின்னர் முழுமையாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 2021 ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், கல்விப் பொதுத்தராதர (சாதாரண தர) மற்றும் கல்விப் பொதுத்தராதர (உயர்தர) மாணவர்களுக்காக 2021 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கபட்;ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டில் குறித்த பரீட்சைகளை நடாத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை
2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை
கல்விப் பொதுத்தராதர (உயர்தரம்) பரீட்சை
2022 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம்
2022 மார்ச் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை வரை
கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சை
2022 மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம்
2022 யூன் மாதம் 01 ஆம் திகதி புதன்கிழமை வரை
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் – பரீட்சை எழுதுவதற்கு மாணவர்களுக்கு வசதி
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் – பரீட்சை எழுதுவதற்கு மாணவர்களுக்கு வசதி
குளியாப்பிட்டிய பொலிஸ் எல்லைப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் உயர்தர பரீட்சைக்கு
தோற்றும் பரீட்சாத்திகள் தடையின்றி பரீட்சைக்கு தோற்ற முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு தேவையான ஆலோசணைகள் பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்;பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
இருப்பினும் நாளை (22 ஆம் திகதி) ஆரம்பிக்கப்படவிருந்த தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் குளியாப்பிட்டிய
மற்றும் கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இடம்பெறாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
மருத்துவர் சத்தியமூர்த்தி மகள் -OL பரீட்சையில் 8 A பெற்று சாதனை
மருத்துவர் சத்தியமூர்த்தி மகள் -OL பரீட்சையில் 8 A பெற்று சாதனை
2019 ம் ஆண்டுக்கான GCE / OL பரீட்சை முடிவுகள் வெளியாகின, இதில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருத்துவர்
சத்திய மூர்த்தியின் மகள் GCE / OL பரீட்சையில் 8A, B பெற்று அபார சாதனை படைத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் மத்தியில் கல்வியில் அதிக திறனோடு நமது தமிழ் மாணவர்கள்
சாதனை படைத்தது நிமிர்ந்து நிற்பதை இவை வெளிப்படுத்துகின்றன
அன்றாட கூலி வேலைக்கு செல்லுக்கும் பெற்றோர் ,அவர் தம் பிள்ளைகள் கூட
அபார வெற்றி படைத்து தமிழர் கல்வி நிலையை உலகுகிற்கு உணர்த்தி யுள்ளதையும் அவதானிக்க முடிகிறது
இவ்வாறு தமது அயாராத உழைப்பின் பயனாக மகத்தான வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாமும் வாழ்த்தினை தெரிவிப்போமாக.


















