வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்
Posted in இலங்கை செய்திகள்

வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் ,எல்பிட்டிய, கனேகொட, இஹல ஓமட்டவில் உள்ள ஒரு வீட்டின மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் முன்பக்க ஜன்னல் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல வணிகங்களை நடத்தும் முன்னாள் இராணுவ வீரரின் வீட்டின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிராமத்தில் நன்கு அறியப்பட்ட நபராகவும், பாதாள உலகத்தினரிடமிருந்து அச்சுறுத்தல்களைப் பெற்ற முன்னாள் இராணுவ வீரரை அச்சுறுத்துவதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டின் உரிமையாளரான முன்னாள் இராணுவ வீரர், வீட்டில் இருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் வானில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கைது செய்துள்ளனர்.

காரில் பயணித்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்யச் சென்ற வேளையில் வானத்தை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
Posted in இலங்கை செய்திகள்

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்

மர்ம நபர்களால் திடீர் துப்பாக்கிப் பிரயோகம் வாகனம் பழுது பார்க்குமிடத்திற்கு முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது T56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும் வாகனங்கள் இரண்டும் சேதம் அடைந்துள்ளன.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No posts found.