Posted in சினிமா

சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
சூர்யா – ஜோதிகா


நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின்

வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன. இருந்தும் படத்திற்கு பல எதிர்ப்புகள்

எழுந்திருந்து. இப்படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன்பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் இருவரும், குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை என்று விளக்கமளித்தனர்.

சூர்யா – ஜோதிகா
சூர்யா – ஜோதிகா

இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்

நிறுவன தலைவர் சந்தோஷ் நாயக்கர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த புகாரில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்

வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம்,

படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல்,
கலை இயக்குனர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    Posted in சினிமா

    ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து

    ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து

    சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து
    ஜோதிகா


    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றிய அவர், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்

    மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

    தன்னுடன் பல படங்களில் நடித்த முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த

    ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

    இந்நிலையில் ஜோதிகாவின் 50வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதையொட்டி மெரீனா கடற்கரையில் ஜோதிகாவின் மணல் சிற்பம்

    ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜோதிகாவின் புகைப்படத்துடன் ‘உடன்பிறப்பே’ படத்தின் வெளியிட்டு தகவல் இடம்பெற்றுள்ளது. அதோடு வாழ்த்துக்கள் ‘ஜோதிகா 50’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

      Posted in சினிமா

      ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா

      ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா

      தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா, ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்க உள்ளாராம்.

      ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா
      ஜோதிகா, ஆர்யா, விஷால்
      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘உடன்பிறப்பே’. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடித்துள்ளார்.

      கத்துக்குட்டி படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

      இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘உடன்பிறப்பே’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி ஆயுதபூஜை பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      அதேபோல் விஷாலின் ‘எனிமி’, சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ ஆகிய படங்களும் ஆயுதபூஜை விடுமுறையில் வெளியாக உள்ளது. தற்போது இப்படங்களுக்கு போட்டியாக ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படமும் களமிறங்கி உள்ளது.

      Posted in சினிமா

      சந்திரமுகி 2 படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

      சந்திரமுகி 2 படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

      ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக இருக்கும் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

      சந்திரமுகி 2 படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை
      வாசு – லாரன்ஸ்

      ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்தார்.

      தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சந்திரமுகி படத்தில் மனோதத்துவ மருத்துவராக வரும் ரஜினிகாந்த்

      , பிளாஷ்பேக்கில் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக நடித்து இருந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி,

      ஜோதிகா உடலுக்குள் ஆவியாக புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதையை அமைத்து இருந்தனர். படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.

      இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும், வேட்டையனாக ராகவா

      லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார். சந்திரமுகியாக நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

      ஜோதிகா

      அந்த கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவே பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது. எனவே அவரை இரட்டை வேடத்தில்

      உருவாக்கி ஒரு கதாபாத்திரத்தை சந்திரமுகியாக மாற்றி, அதில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்

      வெளியாகி உள்ளது. ஆனால் இதில் ஜோதிகா நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை.

      சந்திரமுகி 2 படத்தில்
      சந்திரமுகி 2 படத்தில்
          Posted in சினிமா

          அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் – ஜோதிகாவுக்கு ஆதரவாக சூர்யா அறிக்கை

          அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் – ஜோதிகாவுக்கு ஆதரவாக சூர்யா அறிக்கை

          விழாவில் கோயிலைப் பற்றி ஜோதிகா பேசிய கருத்துக்கு ஆதரவாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

          அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் – ஜோதிகாவுக்கு ஆதரவாக சூர்யா அறிக்கை


          சென்னையில் நடந்த விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து விமர்சித்தார். இதற்கு பல கண்டனங்களும் ஆதரவும் எழுந்தது.

          இதுகுறித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று

          விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ

          ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது,

          நடிகர் சூர்யா அறிக்கை

          ‘கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.

          இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச்

          செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

          பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர்.

          கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது,

          அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.

          மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும்

          போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில்

          இச்சர்ச்சையைக் கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள்.

          எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

          அந்தக் கருத்தில் நாங்கள்
          அந்தக் கருத்தில் நாங்கள்