ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
Posted in உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு

ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர் ஜோ பைடன் ரிஷி சுனெக் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் தொடர்பாக முக்கியமாக பேசியதாக தெரிவிக்க படுகிறது .

சமகால உலக அரசியல் மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் அந்த களத்தில் தாம் எடுக்க வேண்டிய நிலைகள் தொடர்பாக பேச பட்டுள்ளனவாம் .

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இவர்களிடம் உள்ளதாக நம்ப படுகிறது ,இந்த பேச்சில் அது தொடர்பாக பேச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு

அமெரிக்கா அதிபர் ஜுபைடன் பிரிட்டன் வந்தடைந்தார் .
இங்கு வருகை தந்த அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் மற்றும் ,
இளவரசர் சாள்ஸ் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் .

இந்த பேச்சின் பொழுது உக்ரைனுக்கு கொத்து குண்டு வழங்குதல் தொடர்பாக,
விவாதிக்க பட்டுள்ளது .

பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு


குறித்த ஆயுதங்களை வழங்குவதற்கு பிரிட்டன் எதிர்ப்பு,
தெரிவித்து இருந்தது .

அதனால் அது தொடர்பாக ஜோ பைடன் பேச்சில் ஈடுபட்டார் .
இதில் எட்டப்பட்ட முடிவுகள் வெளியாகிவில்லை .
வரும் மணித்தியாலங்களில் அது தொடர்பாக தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது .

Posted in Uncategorized

சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஜி-7 மாநாட்டிற்கு பிறகு பேசிய அதிபர் ஜோ பைடன், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
அதிபர் ஜோ பைடன்
பிரசல்ஸ்:

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ரஷியாவிற்கு சீனா உதவி வழங்கும் சாத்தியம் குறித்து, கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மிகவும் நேரடியான உரையாடல் நடத்தினேன்.

ரஷியாவுடன் இருப்பதைவிட அதன் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது
என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளதாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்

ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்.

உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக சிலவற்றில் இந்தியா நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்
ஜோ பைடன்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷியா போரை

நிறுத்தவில்லை. உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்த மாட்டோம் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் எந்த பயனும் இல்லை. இதற்கிடையே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷியாவுக்கு எதிராக உள்ளது. இதேபோல் குவாட் அமைப்பில்

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளது. இதில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் ரஷியாவுக்கு எதிராக உள்ளன.

ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்

இந்தியா ஐ.நா. சபயைில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. பொருளாதாரத்தடை காரணமாக

ரஷியா கச்சா எண்ணெயை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதனால் மலிவு விலையில் விற்க முடிவு செய்தது.

ரஷியாவின் மலிவு விலை கச்சா எண்ணெயை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதில் அமெரிக்காவுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

தங்களுன் நட்பில் உள்ள அனைத்து நாடுகளும் ரஷியாவுக்கு எதிராக இருக்கும்போது இந்தியா மட்டும் தனித்து இருப்பதாக அமெரிக்கா உணர்கிறது.

நேற்று வாஷிங்டனில் அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஜோ பைடன், ‘‘நேட்டோ மற்றும் பசிபிக் நாடுகள் ஒருங்கிணைந்து இருக்கிறது. ஆனால்

, குவாட் அமைப்பில் இந்தியா சிலவற்றில் நடுங்கும் நிலை உள்ளது. ஆனால், ஜப்பான் அதிக அளவில் எதிர்க்கிறது. ஆஸ்திரேலியாவும் அப்படித்தான் உள்ளது.

புதின் நேட்டோவை பிரித்து விடலாம் என நினைக்கிறார். அதற்குப் பதிலாக நேட்டோ அதன் முழு வரலாற்றிலும் இன்று இருப்பதை விட வலிமையாக ஒன்றுபட்டதாக இருந்ததில்லை’’ என்றார்

    Posted in Uncategorized

    ரஷிய அமீது பொருளாதார தடை விதிக்கப்படும்: ஜோ பைடன் மிரட்டல்

    ரஷிய அமீது பொருளாதார தடை விதிக்கப்படும்: ஜோ பைடன் மிரட்டல்

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தால் அந்த நாட்டின் அதிபர் புதின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மிரட்டல் விடுத்துள்ளார்.

    ரஷிய அதிபர் புதின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும்: ஜோ பைடன் மிரட்டல்
    ஜோ பைடன்
    வாஷிங்டன் :

    சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் தனிநாடாக உருவானது. ஆனாலும் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷியாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன். இப்போதும் ரஷிய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.

    உக்ரைன் தன் எல்லைகளை ஒருபுறம் ரஷியாவோடும், மற்றொரு புறம் ஐரோப்பிய நாடுகளுடனும் பகிர்ந்து கொள்கிறது.

    இந்த சூழலில் அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பு உக்ரைனை தன்னுடன் இணைத்து கொள்ள விரும்புகிறது. ஆனால் தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.

    உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்கா உடன்படாததால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

    ரஷியா இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும் இருநாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது ஜனாதிபதி ஜோ பைடனிடம் உக்ரைன் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

    அப்போது ஒரு பத்திரிகையாளர் “உக்ரைன் மீதான படையெடுப்பு விவகாரத்தில் ரஷிய அதிபர் புதின் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா?” என கேட்டார்.

    அதற்கு பதிலளித்த ஜோ பைடன் “ஆம், உக்ரைனுக்குள் ரஷியா ஊடுருவினால் நிச்சயமாக புதின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும்” என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர் “ரஷியா, உக்ரைன் மீது படையெடுத்தால் அது, 2-ம் உலக போருக்கு பிந்தைய மிகப்பெரிய படையெடுப்பாக அமையும். இது நடந்தால் மிகவும் மோசமான விளைவுகளை ரஷியா எதிர்கொள்ளவேண்டி வரும். போர் சூழல் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை, அமைதியான சூழலை ஏற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டால் அதை எங்கள் நாடு ஆதரிக்கும்’’ எனவும் கூறினார்.

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்கர்கள் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் – ஜோ பைடன்

    கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் – ஜோ பைடன் வேண்டுகோள்

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார்.

    அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.

    கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சினை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார் பைடன்.

    கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார்.

    இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க்

    அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ஏப்ரல் மாதம் வரை அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்மூலம்

    குறைந்தது 50 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்ற முடியும். எனவே, அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு

    அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு

    அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் அவர்கள் பதிவி ஏற்றுலாளர்

    டிரம்ப் பெயரம் நெருக்கடியை கொடுத்து வெள்ளை மாளிகையை விட்டு

    வெளியேற மறுப்பார் என நிலை நிலவிய நிலையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது ,ஆனல் அவை சுமுகமாக முடிவுற்று பதவி ஏற்றுக்கொண்டார்

    மேலும் எதிரிகளையும் னைத்து அறத்தை நாட்டுவேன் என சூளுரைத்தார் ,

    மக்களின் வாழ்வாதரம் ,பொருளாதரம் உள்ளிட்டவையில் அதிக கவனாம் செலுத்த பட்டு நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்வேன் என அவர் சபதம் எடுத்தார்

    அதேபோலவே அமெரிக்காவின் முதல் கறுப்பின பிரதி ஜனாதி பதியாக கமலா கரீஸ் தெரிவு செய்ய பட்டுள்ளார்

    Posted in உலக செய்திகள்

    கொரனோ தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஜோ பைடன்

    கொரனோ தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஜோ பைடன்

    வாரத்துக்கு முன் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட ஜோ பைடன், தடுப்பு மருந்தின் 2-வது டோசையும் செலுத்திக்கொண்டார்.

    பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்
    தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஜோ பைடன்

    உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக் கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

    கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பரவல் அதிகமானது. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

    சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். வரும் வாரத்தில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு நேரலையில் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது.

    இந்நிலையில், பைசர் தடுப்பூசியின் 2-வது டோசையும் ஜோ பைடன் செலுத்திக்கொண்டுள்ளார்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதே தனது முன்னுரிமையான பணி என தெரிவித்தார்

    Posted in உலக செய்திகள்

    ஜோ பைடன் மகன் வரி மோசடி- விசாரணைகள் ஆரம்பம்

    ஜோ பைடன் மகன் வரி மோசடி- விசாரணைகள் ஆரம்பம்

    அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்ய பட்டுள்ள ஜோ பைடன்

    மகன் ,தந்தையின் தேர்தல் பரப்புரையில் பொழுது நிதி கையாடல்

    புரிந்தார் என்ற குற்ற சாட்டில் அவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    தனது பதவி முடிந்து வெள்ளை மாளிகையை விட்டு செல்ல முன் புதிய ஜனாதிபதியை பழிவாங்கும் நகர்வில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்

    என்ற கருத்து இதன் மூலம் உருவாக்கம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்

    ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்

    ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 3 பேர் குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்

    அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

    அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி 20-ந் தேதி பதவியேற்கிறார்.

    இதையொட்டி தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனுக்கு மாற்றுவதற்கான

    ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஜோ பைடன் தரப்பில் அதிகார மாற்று குழு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சீரான அதிகார மாற்றத்தை உறுதி செய்ய தற்போதைய நிர்வாகத்தில் உள்ள முக்கிய கூட்டாட்சி

    அமைப்புகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் அதிகார மாற்று ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 3 பேர் குழுக்களின் தலைவராக

    நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் மஜும்தர் எரிசக்தி துறைக்கான ஏ.ஆர்.டி. குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதேபோல் ராகுல் குப்தா என்பவர் தேசிய மருந்து கட்டுப்பாட்டு கொள்கைக்கான ஏ.ஆர்.டி குழுவின் தலைவராகவும், கிரன்

    அஹுஜா என்பவர் பணியாளர் மேலாண்மை அலுவலகத்துக்கான ஏ.ஆர்.டி. குழுவின் தலைவராகும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை தவிர தேசிய பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி நிர்வாகம் உள்ளிட்ட 17 துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்திய

    வம்சாவளியினர் 17 பேர் அந்தந்த துறைக்கான ஏ.ஆர்.டி குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல் இந்த ஏ.ஆர்.டி. குழுக்களின் உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமானோர் பெண்கள் என்றும் கருப்பினத்தவர்கள்,

    மாற்றுத்திறனாளிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்தக் குழுக்களில் வாய்ப்பு

    அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜோ பைடனின் அதிகார மாற்று குழு தெரிவித்துள்ளது