Posted in சினிமா

நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்

நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்

பாடலாசிரியர் சினேகனின் திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடத்தி வைக்கிறார்.

நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்
சினேகன்


தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ள அவர், இதுவரை

2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். இவருடைய பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதுதவிர சில படங்களில் நடித்துள்ள சினேகன், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்ய உள்ளார். ‘தேவராட்டம்’ படத்தில்

நடித்துள்ள நடிகை கன்னிகா, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

வருகிற 29-ந் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் நடைபெற உள்ளது.

அன்று காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருமணத்தை

நடத்தி வைக்கிறார். இதில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், மக்கள் கட்சி நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

Posted in சினிமா

சினேகனுக்கு விரைவில் திருமணம்

சினேகனுக்கு விரைவில் திருமணம்

தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடலாசிரியராகவும் இருக்கும் கவிஞர் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் திருமணம்
சினேகன்


தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். இவர் யோகி மற்றும் உயர்திரு 420 ஆகிய படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு தமிழகமெங்கும் பிரபலமானார்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர் ஆரம்பித்த மக்கள்

நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து செயல்பட தொடங்கினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சினேகன்

இந்நிலையில் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், கட்சித்தலைவர் கமல்ஹாசனின் தலைமையில்தான் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

    Posted in சினிமா

    சினேகன் கார் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு

    சினேகன் கார் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு

    பிரபல பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் ஏற்படுத்திய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    சினேகன் கார் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு
    சினேகன்
    தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்

    கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது

    கட்சியில் இணைந்த சினேகன், முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார், மோட்டார்

    சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருண் பாண்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அருண் பாண்டி சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்திருக்கிறார். கார் ஓட்டிச் சென்ற சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல்

    மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில்

    தற்போது இளைஞர் அருண் பாண்டியன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    Posted in சினிமா

    தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்

    தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்

    பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் சினேகன், ரெனிகுண்டா புகழ் தீப்பெட்டி கணேசனை சந்தித்து உதவி செய்துள்ளார்.

    தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்
    தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்து பேசிய சினேகன்.


    ரெனிகுண்டா படத்தில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். இவர் சமீபத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டார்.

    அதில் தனது குடும்பத்துக்கு உதவி தேவைப்படுவதாகவும், இது அஜித்துக்கு தெரிந்தால் கண்டிப்பாக உதவுவார் என்றும்

    வீடியோவில் பேசினார். இதையடுத்து நடிகர் லாரன்ஸ், அஜித்திடம் இதை கொண்டு சேர்க்க முயற்சி செய்வதாகவும், அவரின் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில் பிரபல பாடலாசிரியருமான சினேகன் தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும் அவரின்

    சினேகம் செயலகம் அறக்கட்டளை சார்பில், தீப்பெட்டி கணேசனின் குடும்பத்திற்கு 2 வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களை

    வழங்கியதோடு, அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோல்

    கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலர் முன் வர வேண்டும் என மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

    தீப்பெட்டி கணேசனை
    தீப்பெட்டி கணேசனை