சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது

விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது

விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (31) பிற்பகல் திடீரென நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் தொடர்புபட்டுள்ளதுடன், ஏனைய இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது

காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 சிறுமி ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயாருக்கு சிறுமியின் காதலனும் அவனின் நண்பனும் வாள் மற்றும் கூரிய ஆயதங்களுடன் தொலைபேசி டிக் டொக் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து இருவரையும் சனிக்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள் மற்றம் பஞ்ச சக்கரம் கொண்ட கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு வீரம் கொண்ட

காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது

பாடல்களை பதிவு செய்து கையடக்க தொலைபேசியில் டிக் டொக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து; சம்பவ தினமான சனிக்கிழமை காலையில் 17 வயதுடைய இருவரையும பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து மாலையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது

3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது

எல்பிட்டிய, அவிட்டாவ பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தமை மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபருக்கு எதிராக மத்துகம, களுத்துறை மற்றும் அல்பிட்டி நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பணத்தை மோசடி செய்த இருவர் கைது

பணத்தை மோசடி செய்த இருவர் கைது

வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர், கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு குவைட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 இலட்சத்து 50,000 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

No posts found.
வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது

வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 17 பேரை நேற்று (15) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ்கிராமத்திலுள்ள வீடு ஒன்றை சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.

இதன் போது சட்டவிரோத ஆள் கடத்தல் மாபியாவைச் சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 16 பேரிடம் பணத்தை வாங்கி கொண்டு மட்டக்களப்பு கடலில் இருந்து படகு மூலம் அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக

தெரிவித்து அவர்களை அழைத்து வந்து மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கு கடந்த ஒரு மாதகாலமாக தங்க வைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 17 பேர் கைது

இதில் 3 சிறுவர்கள் 3 கர்ப்பிணி பெண்கள் உட்பட 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு வீடு வாடகைக்கு பெற்றுக் கொடுத்து உதவி புரிந்து வந்த ஒருவர் உட்பட 15 பேரை கைது செய்ததுடன் படகு மூலம் செல்வதற்காக

கொள்வனவு செய்யப்பட்டு வைத்திருந்த சமபோசா, பிஸ்கற் பக்கற்கள் சீனி போன்ற பொருட்கள் மற்றும் ஆடைகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களை இன்று (16) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குறற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது

மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது

கண்டி பொக்கவெல பகுதியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் 15 இலிருந்து 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் பாடசாலை விடுதிக்குள் வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபரால் ஒழுக்கக் கேடு காரணமாக இரக்கமின்றி தாக்கப்பட்டதையடுத்து கண்டிப் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஐந்து மாணவர்கள் இரகசியமாக பாடசாலையின் பெண்கள் விடுதிக்குள் நுழைந்ததனால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் பட்டதாக விசாரணைகளில் தெரிய வருகிறது. ஐந்து

மாணவிகளை சந்திக்க அவர்களின் சம்மதத்துடன் குறித்த மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

மாணவர்கள் மீது வன்முறை; அதிபருடன் அறுவர் கைது

சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பதுடன் அவர்களின் தலைமுடியும் வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களுள் விடுதி காப்பாளர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப் பட்ட பின்னர் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

No posts found.
ஈரானில் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய 100 பேர் கைது
Posted in உலக செய்திகள்

ஈரானில் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய 100 பேர் கைது

ஈரானில் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய 100 பேர் கைது

ஈரானால் பாடசாலைகளுக்கு நச்சு புகை வீசிய
நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்த நச்சு புகையினால பல நூறு மாணவர்க்ள ,
பாதிக்க பட்ட நிலையிலும் ,பாடசாலைகள் அடித்து மூட் ப்பட்ட நிலையில் ,
நடத்த பட்ட கண்காணிப்பு தேடுதல் நடவடிக்கையில் ,
இந்த குற்ற செயலை புரிந்த நூறு பேர் கைது செய்ய பட்டு,
உரிய முறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

குற்றம் நிரூபிக்க பட்டால் இவர்களுக்கு ,
மரண தண்டனை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவி துஷ்பிரயோகம் அதிபர் கைது | இலங்கை செய்திகள்

மாணவி துஷ்பிரயோகம் அதிபர் கைது | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய 50 வயதுடைய அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன்,
பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

சந்தேக நபர் தப்பியோட்டம் – 4 பொலிஸ் அதிகாரிகள் கைது|இலங்கை செய்திகள்

சந்தேக நபர் தப்பியோட்டம் – 4 பொலிஸ் அதிகாரிகள் கைது|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

போலியான பெயரில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபர், பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் ​சென்றுள்ளார்.

இந்த சந்தேக நபர் கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதுடன்,
அவருக்கு எதிராக விமானப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

No posts found.
விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்| இலங்கை செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உதையால் கரு அழிந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்திற்குரிய கடற்படை சிப்பாயின் சகோதரி ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் இந்த கடற்படை சிப்பாயும் கலந்துகொண்டார்.

இந்த கடற்படை சிப்பாயின் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகமடைந்த இராணுவ வீரர், தன்னையும் தாக்கியதாகவும், கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் பலமுறை உதைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

உதைக்கப்பட்ட கர்ப்பிணி தரையில் வீழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.கர்ப்பிணிப் பெண்ணை உதைத்ததாகக் கூறப்படும் கடற்படைச் சிப்பாய்
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதுடன் அவர் புல்முடே பிரதேசத்தில் உள்ள முகாமில் பணிபுரிந்து வந்தார்.

வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை
Posted in இலங்கை செய்திகள்

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுத்தையைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த போது நான்கு சந்தேக நபர்களையும் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலின் ஒரு பகுதியையும் பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (14) கைது செய்தனர்.

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது

சந்தேகநபர்கள் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பகுதியில் வசிப்பவர்கள் என்பதுடன், அதனை அண்டிய சமனல இயற்கை சரணாலயத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் இரை தேடி தேயிலை தோட்டத்திற்கு வரும்போது கம்பிக்கூடு அமைத்து பிடித்து கொன்றுள்ளனர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சிறுத்தையின் உடல் பாகங்கள் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No posts found.
இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்

வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்

இலங்கை வெலிபென்ன பகுதியில் 34 வயது வாலிபரை அடித்து கொன்ற குற்ற சாட்டில்16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதான மூவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுளள்னர்.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது

சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது

சிறுமிகள் இருவரை துஸ்பிரயோகப்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று(14) கைதுசெய்யப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட்- வெஞ்சர் தோட்டத்தைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறை நிமித்தம் தனது வீட்டுக்கு வருகைத் தந்துள்ளதுடன், குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 8 வயது சிறுமிகள் இருவரை தேயிலை மலைக்கு அழைத்துச் சென்று, துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது

இதன்போது ஒரு சிறுமி அவரிடமிருந்து தப்பியோடி வந்தததை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேகநபரை பிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமிகளின் பெற்றோரால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ​செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் விசேட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கிளி​நொச்சி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்த பொலிஸார்,
அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளின் பின் கைது

மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளின் பின் கைது

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்.

பின்னர், அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதன்போது, ​​சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டு பின்னர் அவர் வழக்குக்கு ஆஜராகவில்லை.

மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளின் பின் கைது

அதன்படி, அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அதன் பிரகாரம் 08 மே 2012 அன்று உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து திறந்த பிடியாணை பிறப்பித்தது.

இதேவேளை, சந்தேகநபர் நேற்று (23) அத்தனகல்ல
கஹடோவிட்ட பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின்
அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
அவரை நாளை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது

சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது

பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்றுவந்ததாகக் கூறப்படும் சிறுநீரக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று (17) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் என கூறப்படுபவரும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பிரதான தரகர் ஒருவர் என கூறப்படுபவரும்,

வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்; மற்றும் ராஜகிரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகிய சந்தேக நபர்கள் நேற்று (17) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்இமுகத்துவாரம்இ மட்டக்குளிய பிரதேசத்தில் வறுமையில் வாடும் மக்களை சிறுநீரகம் தானம் செய்வதற்கு தூண்டிய தரகர் ஒருவர் என்று மனு தொடர்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர்களும் போலியான கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை வழங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சுந்தேகநபரான் ஒரு கிராம உத்தியோகத்தர், அபுதாபி பிஜை ஒருவருக்கு சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழை வழங்கியுள்ளார். இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளபோதிலும் அவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த கிராம உத்தியோகத்தர், சிறுநீரகம் தானம் செய்வதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை, ராஜகிரிய பிரதேசத்தில்; வசிப்பவர் எனக்கூறி போலியான சான்றிதழை வழங்கியுள்ளார் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது மிகவும் பாரதூரமானதொரு செயல் ஆகும். நீதிமன்றங்களில் பிணைக்கும் இவ்வாறான போலி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

இதன்படி, சந்தேகநபர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபருக்கு பயணத்தடை விதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த நபருக்கு வெநிநாட்டு பயணத்தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட எதிமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சய தர்மதாச பொலிஸ் மா அதிபரினால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார அண்மையில் 600க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது

முன்னதாக, மொனராகலையில் உள்ள எஸ்.எஸ்.பி.யின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கஞ்சா செடிகளுடன் எஸ்.எஸ்.பி, இரண்டு பொலிசார் மற்றும் மூன்று சிவிலியன்களை STF கைது செய்தது.

பின்னர், எஸ்எஸ்பி சிசிர குமார ஐஜிபி சி.டி. விக்கிரமரத்ன.

பொலிஸ் அத்தியட்சகர் குமார, எதிமலே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தர்மதாச மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் சாரதி சசிந்து மதுஷன் உள்ளிட்ட சந்தேக நபர்களை ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொனராகலை மாவட்ட நீதிபதி சஜினி அமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது

வவுனியாவில் தெரு ரவுடிகள் 8 பேர் கைது

வவுனியாவில் தமிழ் தெரு ரவுடிகள் ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

வவுனியாவில் பல்வேறு பட்ட சமூக விரோத குற்ற செயல்களில் ,ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த ,நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் ,18 வயதுடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர் .

இவர்கள் கெத்து பசங்க என்ற தெரு ரவுடி குழு இயங்கி வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது .

இவர்கள் போதை மாத்திரைகள் ,வாள்வெட்டு மற்றும் கொலை ,கொள்ளை ,கடத்தல் ,மிரடடல் என்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகியுள்ளது .

கைதானவர்கள் காவல்துறையின் ,சிறந்த உரியமுறை விருந்து ஏற்பாட்டில் கவனிக்க பட்டு வருகின்றனர் .

No posts found.
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை அகதிகள் உள்ளிட்ட 27 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை அகதிகள் உள்ளிட்ட 27 பேர் கைது

ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை அகதிகள் உள்ளிட்ட 27 பேர் கைது

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ,இரண்டு லொறிகளுக்குள் மறைந்திருந்து கங்கேரிக்குள் நுழைய முயன்ற 27 அகதிகள் மடக்கி பிடிக்க பட்டனர் .

இவ்விதம் அகதிகளாக நுழைய முயன்ற பங்காளதேஸ் ,இலங்கை மற்றும் எரித்திரியாவை சேர்ந்த அகதிகள் கங்கேரிய காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

இதில் இலங்கையை சேர்ந்த 11 பேர் சிக்கியுள்ளனர் அவர்கள் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .

கைதானவர்கள் தடுத்து வைக்க பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தி செல்ல முற்பட்ட இரண்டு லாரிகளும் தடுத்து வைக்க பட்டுள்ளன .

கம்பிகள் மற்றும் உலோகோங்கள் ஏற்றப்பட்ட லொறிக்குள் மறைந்திருந்து பயணிக்க முயன்ற பொழுதே மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

கம்பளை நகரில் இருக்கும் பிரபல பாடசாலைக்குள் கஞ்சா சுருட்டை பிடித்த நால்வர் கம்பளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை(16) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பாடசாலையின் இரவு நேர காவல் தொழிலில் ஈடுபடும் காவலாளியின்

உதவியுடன் சந்தேகநபர்கள் நால்வரும் பாடசாலைக்குள் இச்செயலில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

குறித்த பாடசாலை வளாகத்தில் இரவு நேரங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, கம்பளை

பொலிஸாரால் பாடசாலை சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை, கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது,
தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No posts found.
பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் (18) தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் பேசாலை, வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று (18) மாலை தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு, 16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.