Posted in சினிமா

காஜல் அகர்வால் கர்ப்பம்- கணவர் செய்த வேலை

காஜல் அகர்வால் கர்ப்பம்- கணவர் செய்த வேலை

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்
கணவருடன் காஜல் அகர்வால்


நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த காஜல் அகர்வால்,

அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர உமா என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமடைந்துள்ள தகவலை அவருடைய கணவர்

கௌதம் கிச்சலு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    Posted in சினிமா

    புதிய தொழில் தொடங்கிய காஜல்

    புதிய தொழில் தொடங்கிய காஜல்

    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

    புதிய தொழில் தொடங்கிய காஜல் அகர்வால்
    காஜல் அகர்வால்
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். காஜல் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ’ஆச்சார்யா’ படத்திலும் தமிழில் ’இந்தியன் 2’

    மற்றும் பேய் படம் ஒன்றிலும் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த

    சில வாரங்களுக்கு முன் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடிய காஜல், தற்போது மீண்டும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

    இந்த நிலையில் காஜல் அகர்வால் தன் கணவருடன் இணைந்து வீட்டு உள் அலங்கார பொருட்கள் விற்பனை மற்றும் இண்டீரியர் டெக்கரேட் பிசினஸ் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் மூலம்

    வீட்டை அலங்கரித்து தருவதுடன். வீட்டுக்கு தேவையான மெத்தை, தலையணை உள்ளிட்ட அலங்கார பொருட்களை ஆன்லைனிலும்

    விற்பனை செய்கிறார்கள். அதோடு, இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பர படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார் காஜல்.

    காஜல் அகர்வால்

    பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகியிருக்கிறார்கள். உதாரணமாக அசின், ஜெனிலியா போன்றவர்களைச் சொல்லலாம். தற்போது காஜல் புது தொழில்

    தொடங்கியிருப்பதைப் பார்த்து, ரசிகர்கள் இவரும் நடிப்பை விட்டு விலகப்போகிறாரா என சந்தேகித்து வருகின்றனர்.

    Posted in சினிமா

    கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல்

    கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல்

    கொரோனா நமக்கு பாடத்தை உணர்த்தி இருக்கிறது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.

    கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல் அகர்வால்
    நடிகை காஜல் அகர்வால்


    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் கடைசியாக மகிழ்ச்சியான

    வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை

    என்று இந்த கொரோனா காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.

    எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும்

    என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது

    வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான்

    நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன். இப்போது கொரோனாவால்

    மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும்.

    இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

    கொரோனா நமக்கு
    கொரோனா நமக்கு