கட்டுநாயக்க விமானநிலையத்தில் நால்வர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க விமானநிலையத்தில் நால்வர் கைது

கட்டுநாயக்க விமானநிலையத்தில் நால்வர் கைது

கட்டுநாயக்க விமானநிலையத்தில் நால்வர் கைது, செய்யப்பட்டுள்ளதாக சுங்க துணைக்கல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக விலை கூடிய வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த நால்வரும் இலங்கை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு எடுத்துவரப்பட்ட அந்த சீக்ரட்களின் மொத்த விலை 60 மில்லியன் இலங்கை ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விதமான பெருந்தொகையிலான சிகராட்டுக்களை இவர்கள் வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்து, இங்கே அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்குடன் வந்துள்ளதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

அதனை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

கைதானவர்கள் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறையில் ஈடுபட்டு வருகின்றனர் .

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது பண்டாரநாயக்கா விமான நிலையத்தை பயன்படுத்தி ,இவ்விதமான கடத்தல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் .

அதனை தமது சுங்க பிரிவினர் வெற்றிகரமாக தடுத்து வருவதாகவும் இலங்கை கட்டுநாயாக்க அதிகாரிகள் இப்படியும் தெரிவித்தனர்.

சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது
Posted in இலங்கை செய்திகள்

சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது

சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது

சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது ,கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நோக்கி, வியாழக்கிழமை (10)

இரவு புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 01 மணித்தியாலங்கள் 35 நிமிட பயணத்தின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-265 215 பயணிகளுடன் 10/10 மாலை 06.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 10/10 இரவு 07.50 மணிக்கு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

இங்கு சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்குச் செல்ல வேண்டிய விமானப் பயணிகளை வேறு, மாற்று விமானங்கள் மூலம் அனுப்ப ஸ்ரீலங்கன்

ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்ததுடன், மீதமுள்ள விமானப் பயணிகளை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறில் சிக்கிய ஏ.330 விமானம் தற்போது பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய (15) மதிய உணவு நேரத்தில் விமான நிலைய வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

       கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட "விமான நிலைய கூட்டு தொழிற்சங்கம்" இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  பதற்றம் 

         இந்தப் போராட்டத்தின் பின்னர் பேசிய விமான நிலைய கூட்டுத் தொழிற்சங்கத்தின் தலைவர்  தம்மிக்க பெர்னாண்டோ, “எங்களின் இந்தப் புதிய தொழிற்சங்கத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பேணி வருகின்றார். 
எங்கள் சமூகம் எந்த ஒரு தாய் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல.  

              எங்களுக்கான சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதே இன்று இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களுக்கு 06 வருடங்களாக சம்பள உயர்வு கிடைக்கவில்லை” என்றார். 

            “எனவே, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பள உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகையை அங்கு குறிப்பிட வேண்டும்.

 இதனை நிறைவேற்றாவிட்டால் 2024 ஜனவரி 03 ஆம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

         இன்று குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களையே இந்த போராட்டத்திற்கு அழைத்துள்ளோம் என்றும், விமான நிலையத்தின் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

         அதன் பின்னர், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அஜித் கல்கெட்டியவிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.  
கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

விமான நிலையத்தில் சலசலப்பு

விமான நிலையத்தில் சலசலப்பு

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பு இன்று (26) மதியம் முதல் செயலிழந்துள்ளதையடுத்து வெளிநாடுகளுக்குச் செல்ல வந்த ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு பல தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், சரியான பராமரிப்பு இல்லாததால், இது ஒரு மாதத்திற்கு பல முறை இதுபோன்று செயலிழந்து வருவதாகவும் குடிவரவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் சலசலப்பு

        மேலும், இந்த கணினி அமைப்பு சர்வதேச இன்டர்போல் பொலிஸுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், அதன் வேகம் குறைவதால் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் கணினி அமைப்பு பலவீனமடையும் என்று பேச்சாளர் கூறினார்.

          11/26 நண்பகல் 12.20 மணியளவில் கணினி அமைப்பு படிப்படியாக மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விமான நிலையத்தில் அதிக பயணிகள் போக்குவரத்து சிறிது தளர்த்தப்படுவதாகவும் பேச்சாளர் மேலும் கூறினார்.

           11/26 பிற்பகல், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல விமானங்களும் அவ்வாறான இடங்களிலிருந்து விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்களும் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் பேச்சாளர் எச்சரித்தார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க விபத்தில் ஸ்தலத்திலேயே இருவர் பலி

கட்டுநாயக்க விபத்தில் ஸ்தலத்திலேயே இருவர் பலி

கொழும்பிலிருந்து கட்டுநாயக ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

நேற்று (23) இரவு இடம்பெற்ற இவ்விபத்தினால் பிரதேசவாசிகள் அமைதியின்மையை ஏற்படுத்தினர்.

எனினும், பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து சம்பந்தமாக கட்டுநாயக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.

நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ. எல். 225 என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு. எல். 454 என்ற விமானம் இன்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டதாக தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று இரவு 11.40 மணியளவில் இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல். 141 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மும்பையிலிருந்து இன்று காலை 05.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து நேற்று இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமானம் MU-231, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி பெய்த கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலே விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

நேற்று மாலை 06.10க்கு குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-230 தாமதமாகி இன்று காலை 07.33க்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Error: View 9293b2au4w may not exist
Posted in இலங்கை செய்திகள்

கமராக்கள் நிறுத்தி வைக்கவில்லை – விமான நிலையம் அறிக்கை

கமராக்கள் நிறுத்தி வைக்கவில்லை – விமான நிலையம் அறிக்கை

இலங்கை கட்டு நாயக்க விமான நிலையத்தில் உள்ள கமாராக்கள் நிறுத்தி

வைக்க பட்ட பின்னரே அங்கிருந்து அவன்கார்ட் தலைவர் மற்றும் முக்கிய

மகிந்த குடும்பத்தினர் தப்பித்தனர் ர் என தெரிவிக்க பட்ட நிலையில் அவை

வெறும் போலி பரப்புரைகள் எனவும் அவ்விதமான செயல் பாடுகளில் விமான நிலையம் ஈடுபடவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

சமுக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக

சொல்வதெல்லாம் உண்மை பாணியில் விமான நிலையம் தெரிவித்துள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    கட்டுநாயக்க விமான நிலைய வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

    கட்டுநாயக்க விமான நிலைய வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

    கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் இன்று (06) முதல் திறக்கப்பட்டுள்ளன.

    இதன்படி வர்த்தக நிலையங்கள் காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த விமானப் பயணிகளுக்காக

    மாத்திரம் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் முன், விமான நிலையத்தை தொடர்பு

    கொண்டு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் நபர்கள், தாம் தனிமைப்படுத்தப்பட்டமைக்காக நிலையங்கள் வழங்கிய சான்றிதழ்கள் அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு

    உட்படுத்தப்பட்டமைக்காக பொது சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தவிர கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் விமான நிலையத்தின் பணத்தை பரிமாற்றம் செய்ய சந்தர்ப்பம் தற்போது இல்லை என்பதால், பொருட்களை

    கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர்களை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இல்லை எனின், கடன் அட்டைகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறப்பதில் தாமதம்

        கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறப்பதில் தாமதம்

        ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு பின்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவும், இதர சேவைகளுக்காகவும் விமான

        நிலையத்தை மீள திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

        அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கும்

        விதமாக ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை

        காட்டிலும் சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்கு வருவதற்கு இதுவரையில் பதிவு செய்துள்ளார்கள்.

        வெளிநாடுகளில் தொழில் புரியும் 50 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு வருவதற்கு தூதரகத்தின் ஊடாக பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் நாட்டுக்கு கொண்டு வருவது

        அரசாங்கத்தின் கொள்கையாகும். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், நாட்டில் தற்போது உள்ளோர் தொடர்பிலும் அதிக

        கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலையினை அரசாங்கம் மிகவும், அவதானத்துடனும், பொறுப்புடனும் கையாள்கிறது.

        ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறப்பதற்கு எதிர்பார்த்தோம். ஆனால், சுகாதார

        தரப்பினரது அறிவுறுத்தலுக்கு அமைய தீர்மானம் காலதாமதமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயிலும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி விமான நிலையத்தை முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளோம்.

        சுற்றுலா துறையினை ஊக்குவிப்பதும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதுமே இதன் பிரதான நோக்கமாகும். நாட்டுக்குள்

        வரும் சுற்றுலா பயணிகள் அவர்களது நாட்டில் முதலில் பி. சி. ஆர். பரிசோதனையை செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.

        அத்துடன் அவர்கள் எமது நாட்டுக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் பி. சி. ஆர் பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.

        பரிசோதனையின் முடிவு கிடைக்கும் வரையில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். சுற்றுலாத்துறை அதிகார சபையில்

        பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரமே சுற்றுலா பிரயாணிகள் தங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.