Posted in சினிமா

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது தலைவி

படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கங்கனா

தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள்

, நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    Posted in சினிமா

    பிரபல நடிகைகளை சாடிய கங்கனா

    பிரபல நடிகைகளை சாடிய கங்கனா

    உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி தீரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது.

    அவர் பேசும்போது, “இளைய தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிகிறார்கள். இளம்பெண்களும் அணிகிறார்கள்.

    நான் விமானத்தில் பயணித்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். அவரால் சமூகத்தில் நல்ல தாக்கத்தை எப்படி உருவாக்க முடியும்’’ என்றார்.

    அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் நடிகைகளும், இளம்பெண்களும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்துள்ள தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “கிழிந்த ஜீன்ஸ் அணிய விரும்பினால் இந்த புகைப்படத்தில் குளிர்ச்சியாக இருப்பது போன்ற ஜீன்ஸை அணியுங்கள்.

    அது ஸ்டைலாக தெரியும். அதற்கு மாறாக வீடு இல்லாத பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம். இளசுகள் பலர் தற்போது இப்படித்தான் அணிகிறார்கள்” என்றார்.

    இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் கங்கனா அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இன்னும் சிலர் தீபிகா படுகோனே, சாரா அலிகான், டாப்சி, ஆலியா பட் உள்ளிட்டோரின் கிழிந்த

    ஜீன்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களைத்தான் கங்கனா ரணாவத் சாடி உள்ளார் என்று பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.

      Posted in சினிமா

      நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை

      நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை

      தேச துரோக வழக்கில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது.

      நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை
      கங்கனா ரணாவத்
      நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருதுக்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இந்தி பட உலகில் போதை

      பொருள் புழக்கம் உள்ளது என்றும் போலீஸ் விசாரணை நடத்தினால் முன்னணி நடிகர்கள் சிக்குவார்கள் என்றும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். மராட்டிய அரசையும், மும்பை

      போலீசையும் சாடினார். இதையடுத்து அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. இதனால் மும்பையில் பாதுகாப்பு இல்லை என்று

      வெளியேறிய அவர் பல மாதங்களுக்கு பின்பு மீண்டும் மும்பை திரும்பி இருக்கிறார்.

      கங்கனா ரணாவத்

      இந்த நிலையில் கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து நேரில் அழைத்து 2

      மணிநேரம் விசாரித்தனர். இதையடுத்து தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கனாவும், ரங்கோலியும் மும்பை

      கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 25-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதுவரை கங்கனா மற்றும்

      ரங்கோலியை விசாரிக்கவும், கைது நடவடிக்கை எடுக்கவும் தடைவிதித்து உத்தரவிட்டார்