Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் £122 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் £122 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் நேற்று இடம்பெற்ற யூரோ மில்லியன் லொத்தர் குழுக்களில் 122 மில்லியன் பவுண்டுகளை நபர் ஒருவர் அள்ளி சென்றுள்ளார் .

இதுவரை இடம்பெற்ற குழுக்களில் ஐந்தாவதாக அதிக கூடிய தொகையை பெற்ற நபராக இவர் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்

இவர் பெற்ற மொத்த தொகை £122,550,350.80. என அறிவிக்க பட்டுள்ளது

கொரனோ காலத்தில் அதிக தொகையை தட்டி சென்ற நபராக இவர் விளங்குகின்றமை குறிப்பிட தக்கது

The winning numbers are 04, 21, 34, 40, 47, and the Lucky Stars are 02 and 05.

    Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

    ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

    ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
    முக ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

    அதேநேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

    தேர்தலில் பண வினியோகத்தைக் கட்டுப்படுத்த பறக்கும் படையினர் வீதி வீதியாக சோதனை நடத்தி வரும் நிலையில், வருமான வரித்துறையினரும் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 16 இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடைபெற்றது.

    திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலுவை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்று இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்த கல்லூரியிலேயே சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் ஆகியோர் வசிக்கும் நீலாங்கரை வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 7 மணி அளவில் நீலாங்கரையில் உள்ள செந்தாமரை இல்லத்துக்கு சென்ற வருமான வரித்துறையினர் அங்கு பணம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடைபெற்றது.

    அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மோகன் எம்.எல்.ஏ.வின் மகன் கார்த்திக் மோகன் மற்றும் ஜி ஸ்கொயர் பாலா உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வருமானவரித்துறையினர் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.

    அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளரும் தொழில் அதிபருமான சந்திரசேகரன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.8 கோடி பணம் சிக்கியது.

    இதேபோன்று அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினரான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.8 கோடி வரை பணத்தை கைப்பற்றினார்கள்.

    இந்தநிலையில்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனுக்கு கார்த்திக் மோகன், ஜி ஸ்கொயர் பாலா ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

    அந்த அடிப்படையில் தான் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்ற அதே நேரத்தில் இவர்களது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

      Posted in Uncategorized

      இனப்படுகொலையில் ஈட்பட்டுள்ள எத்தியோப்பிய இராணுவம் – வெளியான ஆதாரங்கள்

      இனப்படுகொலையில் ஈட்பட்டுள்ள எத்தியோப்பிய இராணுவம் – வெளியான ஆதாரங்கள்

      எத்தியோப்பிய அரச இராணுவத்தினர் அப்பாவி மக்களை கைது செய்து படுகொலை செய்து வருகின்றனர்,

      இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை அடக்கி கொன்றது போன்ற இந்த படுகொலை ஒன்று அங்கும் அரங்கேறி வருகிறது

      சிறுபான்மையின மக்களை கொலை புரிந்த இராணுவத்தினர் அவர்களை கொன்று புதைத்த புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன

      வடக்கு எதியோப்பியாவில் Mahbere Dego பகுதியில் இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்கக் பட்டுள்ளன

      ,இது தொடர்பான நீதி விசாரணையா கோரி மக்கள் போராடி வருகின்றனர்

        Posted in Uncategorized

        பாரிய ரயில் விபத்து 36 பேர் மரணம் -72 பேர் காயம்

        பாரிய ரயில் விபத்து 36 பேர் மரணம் -72 பேர் காயம்

        தாய்வானில் இடம்பெற்ற சுரங்கவழி ரயில் விபத்தில் சிக்கி முப்பத்தி ஆறு பேர் மரணமாகியுள்ளனர்


        மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

        தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

        இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பல பலத்த சேதமடைந்துள்ளன ,குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in உலக செய்திகள்

          லண்டனில் கத்தி வெட்டு ஒருவர் மரணம் – இருவர் காயம்

          லண்டனில் கத்தி வெட்டு ஒருவர் மரணம் – இருவர் காயம்

          தெற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து ,மற்றும் வெட்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில் ஒருவர் மரணமானார் ,

          மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

          மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

          சமீப காலங்களாக லண்டன் பகுதியில் இவ்விதமான கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன ,

          காவல்துறையினர் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ள நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி ஆறு பேர் மரணம் – தொடரும் அவலம்

            அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி ஆறு பேர் மரணம் – தொடரும் அவலம்

            அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி ஆறு பேர் மரணம் – தொடரும் அவலம்

            அமெரிக்காவின் முக்கிய மாநகரங்களை இலக்கு வைத்து தாக்கி வரும் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை ஆறு பேர் மரணமாகியுள்ளனர்

            வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட காருக்குள் சிக்கியே இதில் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்

            மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர்

            பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர் மீட்பு போராட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன