Posted in சினிமா

அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
அனுஷ்கா


யோகா ஆசிரியையாக இருந்த அனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில்

65 படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் அனைத்து பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார். உடல் எடை கூடி பட வாய்ப்புகள் குறைந்தாலும் அனுஷ்கா மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. இந்த நிலையில்

அனுஷ்காவின் சொத்து மதிப்பு இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அவருக்கு ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அனுஷ்கா

ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் அனுஷ்காவுக்கு பல சொகுசு பங்களா வீடுகள் உள்ளன. ரியல் எஸ்டேட் துறையிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். பி.எம்.டபுள்யு, ஆடி போன்ற விலை

உயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார். ஏழைகளுக்கு உதவ அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகளும் வழங்கி வருகிறார். அனுஷ்காவின் தற்போதைய மாத வருவாயை கணக்கிடும்போது அடுத்த ஆண்டில் சொத்து மதிப்பு இன்னும் கூடும் என்கின்றனர்.

    Posted in சினிமா

    தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா

    தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா


    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

    தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?
    அனுஷ்கா


    ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம்

    குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த

    பிரபாசை மணக்க இருப்பதாக பேசப்பட்டது. பின்னர் ஐதராபாத் தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போவதாக செய்திகள் வெளியானது.

    தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை

    காதலிப்பதாகவும் தகவல் பரவியது. இதையெல்லாம் அனுஷ்கா மறுத்தார். “எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன்” என்றார்.

    அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு

    இயக்குனர் ஒருவரை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக புதிய தகவல் தற்போது பரவி வருகிறது.

      Posted in சினிமா

      சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா

      சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா

      பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

      சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?
      அனுஷ்கா


      ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார்.

      மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

      ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. நகைச்சுவை வேடத்தில் நடிக்க தன்னை படக்குழுவினர் அணுகி இருப்பதாக வடிவேலு அண்மையில் தெரிவித்திருந்தார்.

      அனுஷ்கா

      இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா ஏற்கனவே ‘சந்திரமுகி’ போன்ற திகில்

      கதையம்சம் உள்ள ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதலால் ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க அவரை அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது

      Posted in சினிமா

      குண்டான அனுஷ்கா… வைரலாகும் புகைப்படம்

      குண்டான அனுஷ்கா… வைரலாகும் புகைப்படம்

      ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது

      ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டு இருக்கிறது.

      சமீபத்தில் துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு திருமணம் நிச்சயமாகி

      உள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும் செய்திகள் வெளியானது.

      அனுஷ்கா

      இந்நிலையில் அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அனுஷ்கா

      மிகவும் குண்டான தோற்றத்தில் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டாக இருந்த

      அனுஷ்கா, உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது மீண்டும் குண்டானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

      Posted in சினிமா

      வயது குறைவான வரை திருமணம் செய்யும் அனுஷ்கா

      வயது குறைவான வரை திருமணம் செய்யும் அனுஷ்கா

      தமிழ் தெலுங்கு மொழி படங்களில் நடித்த மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றிய செய்தி ஒன்று தீயாய் பரவி வருகிறது.

      வயது குறைவான வரை திருமணம் செய்யும் அனுஷ்கா… தீயாய் பரவும் தகவல்
      அனுஷ்கா


      ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன.

      பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல்

      பரவியது. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இணைத்து பேசினர். இறுதியாக மனைவியை விவாகரத்து செய்த 44 வயது தெலுங்கு இயக்குனர் பிரகாஷ்

      கோவலமுடியை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் பேசப்பட்டது. இவற்றையெல்லாம் அனுஷ்கா மறுத்தார்.

      அனுஷ்கா

      சமீபத்தில் அனுஷ்காவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது எனக்கு தெரியவில்லை. திருமணம் முடிவானதும் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றார்.

      இந்த நிலையில் துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும்

      தெலுங்கு திரையுலகில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அனுஷ்கா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

        Posted in சினிமா

        நடிகர் மரணம் – அனுஷ்கா உருக்கமான பதிவு

        நடிகர் மரணம் – அனுஷ்கா உருக்கமான பதிவு

        பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை அனுஷ்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு செய்துள்ளார்.

        நடிகர் மரணம் – அனுஷ்கா உருக்கமான பதிவு
        அனுஷ்கா
        கடந்த 2007ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேதம்.

        தமிழில் இந்தப்படம் வானம் என்கிற பெயரில் சிம்பு, பரத், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. தமிழ், தெலுங்கு இரண்டு படத்திலும் ஒரே கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்திருந்தார்.

        வேதம் படத்தில் ராமு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நாகையா அழுத்தமான நடிப்பை கொடுத்திருந்தார். மேலும் அனுஷ்கா நடித்த பாகமதி உள்ளிட்ட படங்களிலும் நாகையா

        நடித்திருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வேதம் நாகையா சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

        அனுஷ்கா

        தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் தொடர்ந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகை அனுஷ்கா தனது சமூக

        வலைத்தள பக்கத்தில், “நல்ல ஆத்மா நம்மை விட்டு சென்றது. அவர் நிச்சயம் சொர்க்கத்திற்குச் செல்வார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பகிர்ந்துள்ளார்

          Posted in சினிமா

          பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா

          பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா

          தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் அனுஷ்கா, பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்து இருக்கிறார்.

          பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா
          அனுஷ்கா
          ஐதராபாத்தில் பெண் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடந்தது. இதில் 750-க்கும் மேற்பட்ட பெண் போலீஸ் அதிகாரிகள் கலந்து

          கொண்டனர். பெண் போலீசார் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில்

          நடிகை அனுஷ்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒரு பெண் போலீஸ் ஓட்டிய வாகனத்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தார்.

          அனுஷ்கா

          மாநாட்டில் அனுஷ்கா பேசும்போது, “சினிமா திரையில் எங்களை நட்சத்திரங்களாக காட்டினாலும் இந்த அறையில்

          உட்கார்ந்திருக்கும் பெண் போலீஸ் அதிகாரிகளாகிய நீங்கள்தான் உண்மையான நட்சத்திரங்கள். நாங்கள் சினிமா நட்சத்திரங்கள்.

          நீங்கள் நிஜமான நட்சத்திரங்கள். உங்களுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பினாலும்தான் நாங்கள் எல்லோரும்

          பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். உங்களுடைய தியாகங்கள் உயர்வானவை. ஒவ்வொரு பெண்ணும் ஆணுக்கு இணையாக உயர வேண்டும்’’ என்றார்