Posted in இலங்கை செய்திகள்

கல்முனையில் மயக்கமருந்து தெளித்து கொள்ளை

கல்முனையில் மயக்கமருந்து தெளித்து கொள்ளை

கல்முனையில் வீடொன்றுக்குள் நேற்றிரவு (27) புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்துக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயக்கம் வருவதற்கான திராவகம் தெளிக்கப்பட்டே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வீட்டில் இருந்த நால்வரே பாதிக்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை போன்ற காரணங்களால் பல பிரதேசங்களிலும்
அதிகமான திருட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Posted in Uncategorized

132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்

132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்

இலங்கையில் இருந்து தப்பி சென்ற 132 பேருக்கு இண்டர்போல் சிவப்பு பட்டியலில் சேர்க்க பட்டுள்ளனர்


இவர்களை கண்ட இடத்தில கைது செய்யும் பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளது

இவர்கள் போதைவஸ்து உள்ளிட்ட மிக முக்கிய குற்ற செயல்களில் தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்- நாமல்

    அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்- நாமல்

    ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துப்படி அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள்

    முன்னுதாரணமாக செயற்பட்டால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும்

    தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையைய குறைக்குமாறு தெரிவித்திருந்தார்.

    அப்படியானல் அவர்கள் முன்னுதாரணமாக தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தால் நான் பதவி விலகத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சர்வதேச விமான சேவைகள்

      இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சர்வதேச விமான சேவைகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 55 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

      மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று (27) காலை 08:47க்கு தரையிறங்கியது.


      தீயணைப்பு வாகனங்கள் இரண்டு, தண்ணீரை பீச்சியடித்து முதலாவது விமானத்தை வர​வேற்றன.

        Posted in இலங்கை செய்திகள்

        மகிந்த குடும்பத்தை எதிர்க்கும் எவருடனும் இணைய தயார் பாட்டாளி

        ராஜபக்ஷக்களுக்கு எதிராகச் செயற்படக்கூடிய எந்தவொரு அரசியற் கட்சிகளுடனும் செயற்படத் தயார் என 43ஆவது படையணின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு விடுத்துள்ளார்.

        ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளவர்கள் அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என ராஜபக்ஷக்களை எதிர்க்கும் எவருடனும் இணைந்து செயற்படத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

        தற்போது ஆட்சியில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்குப் பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது காலத்தின் தேவை. அதனால் பாரிய புதியக் கூட்டணி ஒன்றை

        உருவாக்குவதற்கு நாம் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

        ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, எங்களின் அழைப்பை ஏற்று 43ஆவது படையணி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதனாலேயே கடந்த

        வெள்ளிக்கிழமை ஐ.தே.க.வினால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளோம். மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி


        ஆகியக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்காலத்தில் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்தார்.

        Posted in இலங்கை செய்திகள்

        மின்னல் தாக்குதலில் சிக்கிக் 25 பேர் காயம்

        மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் பெண்ணின் சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியுள்ளது

        இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

        மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளனர்.

        மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் பெண்ணின் சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியுள்ளது

        இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கை வரும் இந்தியா வெளியுறவு மந்திரி

          இலங்கை வரும் இந்தியா வெளியுறவு மந்திரி

          இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோக பூர்வ வியத்தினை மேற்கொண்டு வருகிறார்

          இவர் இரண்டு நாள் இலங்கையில் தங்கி இருந்து உயர் மட்ட பேச்சுக்களில் ஈடுபடுவார் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          பறங்கி அற்று – மணல் கொள்ளையர்கள் கைது

          முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பறங்கியாற்று பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் அதன் சாரதிகள் நட்டாங்கண்டல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது

          நட்டாங்கண்டல் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

          கைது செய்யப்பட்டுள்ள குறித்த இரு உழவு இயந்திரங்ளையும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாகன சாரதி இருவரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

          முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்கு பொலிஸாரின் ஆதரவுடன் மணல் கொண்டு செல்லப்படுவதாக கடந்த மாத பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்களால் குற்றச்சாட்டுகள்

          முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வில்
          ஈடுபடும் வாகனங்கள் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            வரியை உயர்த்தி நாட்டை காப்பாற்றுக – இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் இடித்துரைப்பு

            இலங்கையின் பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

            சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது Article iv அறிக்கையை நேற்று (25) வெளியிட்டது.

            இலங்கையின் பொருளாதார நிலை குறித்து நீண்ட ஆய்வுக்கு பின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

            நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்பதற்கு நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை தேவை என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

            பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதன் மூலம் வறுமையைக் குறைக்க சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், வருமானத்தை மேம்படுத்த வரிகளை உயர்த்த வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.

            இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடனுக்கு இடையிலான விகிதம், வரி குறைப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக 95 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

            இலங்கை மத்திய வங்கியும் இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு பின்னர் அந்த அறிவிப்பை மீளப்பெறுவதாக தெரிவித்திருந்தது.

            மத்திய வங்கி தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            248 கைதிகளுக்கு கொரனோ

            248 கைதிகளுக்கு கொரனோ

            இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள 248 கைதிகளுக்கு கொரனோ

            நோயானது தொற்றியுள்ளதாக சிறைச்சாலை நாயகம் தெரிவித்துள்ளார்

            இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை வந்தடைந்த இரு எண்ணெய் கப்பல்

            கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 12 நாட்களாக நங்கூரமிட்டிருந்த டீசல் ஏற்றிச் வந்த கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

            டொலர் தட்டுப்பாடு காரணமாக 20,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் வந்த கப்பல் சுமார் 12 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டிருந்தது.

            கப்பலின் உரிமையாளரான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தப்பட்டதை அடுத்து டீசலை இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

            35,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

            குறித்த பெட்ரோல் தொகை இந்திய கடன் வசதியின் கீழ் பெறப்பட்டது

            Posted in Uncategorized

            துப்பாக்கி சூட்டில் இருவர் மரணம்

            .கடவத்தை 9 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.

            நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரே இவ்வாறு இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

            பேலியகொட பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

            கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            கோட்டா வை சந்தித்து பேசும் கூட்டமைப்பு

            கோட்டா வை சந்தித்து பேசும் கூட்டமைப்பு

            நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) முற்பகல் 10.30க்கு இடம்பெறவுள்ளது.

            கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட சந்திப்பு, கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது.

            எனினும், ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அந்த சந்திப்பு பிற்போடப்பட்டது.

            இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ என அறியப்படும் தமிழீழ விடுதலை கழகம் பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

            தீ குளித்த
            Posted in Uncategorized

            கொழும்பில் -தீயில் எரிந்த 23 வீடுகள்

            கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் சுமார் 23 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.

            இந்த தீ விபத்து நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

            கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 தீயணைப்பு இயந்திரங்களை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

            இந்த தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்

            Posted in இலங்கை செய்திகள்

            போராட்டத்தில் கைகோர்த்த தமிழர்கள்

            போராட்டத்தில் கைகோர்த்த தமிழர்கள்

            ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளர் ஶ்ரீபால் வன்னிஆராய்ச்சியினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

            அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு எதிராகவும், அது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

            வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட தமிழ் மக்களும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

            தீபந்தங்களை ஏந்தியவாறு மத்துகம நகர் மத்தியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

            அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு
            எதிராக நடத்திய முதலாவது போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது

            Posted in Uncategorized

            இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா

            இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா

            டொலர் பிரச்சினையைக் காரணங்காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்.

            ஈராக், நோர்வே, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை தற்போதைய அரசாங்கம் மூடியுள்ளது. சைப்பிரஸில் ஆயிரக்கணக்கான

            இலங்கையிர்கள் வாழ்கிறார்கள் இவ்வாறான நிலையில் அங்குள்ள தூதரகத்தையும் அரசாங்கம் மூடியுள்ளதாக சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவித்தார்.

            Posted in இலங்கை செய்திகள்

            மனைவிக்காக பலாக்காய் பறிக்க சென்ற நபர் கொலை

            மனைவிக்காக பலாக்காய் பறிக்க சென்ற நபர் கொலை

            பலாக்காய் ஒன்றை பறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவமொன்று எல்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

            எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் 2ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

            கர்ப்பிணி மனைவியின் பசியை போக்குவதற்காக காணியின் அருகில் இருந்த பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

            அப்போது பக்கத்து வீட்டுக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் பின்னர் பக்கத்து வீட்டுக்காரர் குறித்த நபரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

            படுகாயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            ஒருவர் வெட்டி கொலை

            ஒருவர் வெட்டி கொலை

            அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

            நேற்று (22) பிற்பகல் கிரான்ட்பாஸ், வெஹரகொடெல்ல சந்திக்கு அருகில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            சந்தேக நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இறந்தவருக்கு வானொலியை அடகு வைத்துள்ளார்.

            அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

            உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய வெஹரகொடெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

            சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

            Posted in உலக செய்திகள்

            ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை

            ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை#

            எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மோசடி மற்றும் நீதிமன்ற

            அவமதிப்புக்காக 9 ஆண்டுகள் கடுகாவல் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

            ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013-ம் ஆண்டு அலெக்ஸி மீது வழக்குத் தொடரப்பட்டது.

            இந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த வருடம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.


            தனது தண்டனையை எதிர்த்து கடந்த சில மாதமாகவே அலெக்ஸி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

            Posted in இலங்கை செய்திகள்

            அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் வாங்கும் இலங்கை

            அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் வாங்கும் இலங்கை

            அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார்.

            வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார்.

            பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக இந்த கடன் கோரப்படுவதாக அவர் தெரிவித்தார்.

            இதேவேளை, இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுள்ளதுடன்,
            சீனாவிடமும் 2.5 பில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது