Tag: வீதியில் விபத்து
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
பதுளை- பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல ஹல்பே பகுதியில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த காரொன்று ஹாலி எல பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள பெரிய மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த 52 வயதுடைய நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பெண்கள் இருவரும், இரண்டு சிறுவர்களும் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
சம்பவம் தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷவிடம் வினவிய போது, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
பதுளையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- முக்கியமான PHP பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யுமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

- கன மழை வான் கதவுகள் திறப்பு

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- வங்காள விரிகுடாவில் மீன் பிடிக்க தடை

- ஈரான் மோதல் போன்ற போர்கள் யாருடைய நலனுக்கும் உதவாது பிரதமர் ஹரினி

- வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூட்டாளரை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பேருந்து பறிமுதல்

- இரண்டு இலங்கைப் பெண்களின் மரணத்தில் சந்தேகிக்கப்படும் முறைகேடு குறித்து குவைத் விசாரணை









