Tag: பதுளை பண்டாரவளை
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
பதுளை- பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல ஹல்பே பகுதியில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த காரொன்று ஹாலி எல பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள பெரிய மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த 52 வயதுடைய நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பெண்கள் இருவரும், இரண்டு சிறுவர்களும் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி
சம்பவம் தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷவிடம் வினவிய போது, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
பதுளையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

- ஞானசார தேரருக்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை அமல்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

- போராட்டம் நடத்திய ஆறு பேர் கைது

- ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு மன்றங்கள்

- கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கை

- எரிவாயு விலையில் மாற்றம் இல்லை









