Tag: விபத்தில் குடும்பஸ்தர் பலி
Posted in இலங்கை செய்திகள்
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 23/09/2023
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி
வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் நேற்று (22 ) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
ஓமந்தையில் வெதுப்பகம் நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவர்
வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பறண்நட்டகல் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பேரூந்தை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற சி. தினேசன் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தனby நிருபர் காவலன்
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்by நிருபர் காவலன்
- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்by நிருபர் காவலன்
- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடிby நிருபர் காவலன்
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்by நிருபர் காவலன்












