Tag: ஆசிரியர்களுக்கு
ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்
ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்
இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு கூறியுள்ளது.
இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அலட்சியத்துடன் பழையபடி அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்
எவ்வாறாயினும், சேவையின் நிமித்தம் காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு உபரி ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினிby நிருபர் காவலன்
- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறதுby நிருபர் காவலன்
- தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்by நிருபர் காவலன்
- தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டனby நிருபர் காவலன்
- 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்by நிருபர் காவலன்













