Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி வீட்டில் திடீர் கூட்டம் – திட்டம் நிறைவேறுமா..?

மைத்திரி வீட்டில் திடீர் கூட்டம் – திட்டம் நிறைவேறுமா..?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

நாளை (08) குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று(06) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

    Posted in Uncategorized

    தப்பி சென்ற மைத்திரி

    முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, நீண்ட நாட்களுக்குப் பின்னர், ஊடகங்களிடம் சிக்கிக்கொண்டார்.

    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் பங்கேற்றிருந்தார்.

    நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்கள் அவரை சுற்றிக்கொண்டனர்.

    கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

    “குற்றச்சாட்டுகள் எவ்வளவு முன்வைக்கப்பட்டாலும் அதனை நான், கவனத்தில் எடுக்கமாட்டேன்” என்றார்.

    கேள்வி: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, அரசாங்கத்தில் இருக்கும் சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்களே?

    பதில்: “யாருக்குத்தான் குற்றச்சாட்டுகள் இல்லை, நான், அதனை கணக்கில் எடுக்கமாட்டேன், எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் கணக்கெடுக்கமாட்டேன்” என்றார்.

    கேள்வி: உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் உங்களுக்கு எதிராக பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவே?

    அக்கேள்விக்கு எவ்விதமான பதிலையும் அளிக்காது, கையை அசைத்தவாறு அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டார்

    Posted in இலங்கை செய்திகள்

    கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி

    கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு

    தலைவராகியுள்ளார் ,பரம்பரையாக ஆண்டு வந்த பண்டாரநாயக்காவின் கட்சி இப்பொழுது பறிபோயுள்ளது

    மைத்திரி தெரிவான நிலையில் மீளவும் சந்திரிக்கா மற்றும் ,மைத்திரிக்கு இடையில் மோதல் நிலை நீடித்து செல்கிறது

    மேற்படி கட்சியினுள் முக்கிய பதவி நிலைகளில் உள்ளவர்கள்

    பெரும்பாலானவர்கள் சிங்கள பபவுத்த இனவாத கொள்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    மைத்திரி சிக்கினார் – கோட்டா,மகிந்தா பழிவாங்கல் ஆரம்பம்

    மைத்திரி சிக்கினார் – கோட்டா,மகிந்தா பழிவாங்கல் ஆரம்பம்

    உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

    அடங்கிய அறிக்கையின் பிரதியொன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (23) கையளிக்கப்பட்டது.

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சார்பில், அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர இதைக் கையளித்தார்.

    அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

    சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சிகளை அடிப்படையாக வைத்து, குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில், சில முரண்பாடான நிலைமை இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது என, அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, ஆகையால்,

    அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டின் பேரில் செயற்படுவதற்கான தேவை இல்லை என்றும் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், ​முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு

    எதிராகவும் குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ், நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    8 ஆவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி ஆஜர்

    8 ஆவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி ஆஜர்

    முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

    தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (25) 8 ஆவது நாளாக ஆஜராகியுள்ளார்.

    அவர் இன்று முற்பகல் 10.00 மணியளவில் ஆணைக்குழுவில் ஆஜரானதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

    கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்

    தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    நேற்றைய தினமும் (24) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்

    Posted in இலங்கை செய்திகள்

    குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் இன்றும் விசாரணை

    குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் இன்றும் விசாரணை

    இலங்கையின் முன்னாள் நல்லாட்சி மைந்தர் என அழைக்க பட்ட

    மைத்திரி ஆட்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில்

    மைத்திரியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்துகிறது

    இன்றும் அவர் மீது இந்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளனவாம்

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் குண்டு எப்படி வெடித்தது மைத்திரியிடம் விசாரணை

    இலங்கையில் குண்டு எப்படி வெடித்தது மைத்திரியிடம் விசாரணை

    முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்

    விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

    முன்னிலையாகியுள்ளார்.

    வாக்குமூலமளிக்க வருமாறு அவருக்கு கடந்த 22ஆம் திகதி ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாளை (06)

    வாக்குமூலமளிக்க வருமாறு ஆணைக்குழுவால் அன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    Posted in இலங்கை செய்திகள்

    விசாரிக்க படும் மைத்திரி – கைதாவாரா ..?

    விசாரிக்க படும் மைத்திரி – கைதாவாரா ..?

    இலங்கையி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல்

    21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்

    ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

    இவர் தனது சடடதரணியுடன் அங்கு பிரசன்னம் ஆகியுள்ளார்

    கோட்டா அரசில் பழிவாங்கும் அரசியல் இடம்பெற்று வரும்

    நிலையில் இவ்விதம் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    வீட்டில் வைத்து மைத்திரி விசாரணை – சிறை செல்வாரா ..?

    வீட்டில் வைத்து மைத்திரி விசாரணை – சிறை செல்வாரா ..?

    முன்னாள் ஜனாதிபதியும் நல்லாட்சி மைந்தர் என அழைக்க பட்ட மைத்திரி ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம்

    பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்

    வீட்டுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

    அவர் அங்கு வைத்து தொடர் விசாரணைக்கு உட்படுத்த பட்ட வண்ணம் உளளார்

    இவர் விசரண்சிங்க்ளின் பின்னர் கைது செய்ய படுவார் என்ற பதட்டம் நிலவி வருகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    மைத்திரி ரணில் சிறை செல்லும் அபாயம்

    மைத்திரி ரணில் சிறை செல்லும் அபாயம்

    இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு வெடிகுண்டு தாக்குதலின் பொழுது உளவு பிரிவினருக்கு குண்டு வெடிப்பு தொடர்பாக தகவல் கிடைக்க பெற்ற பொழுதும்


    அதனை கவனத்தில் எடுத்து மக்கள் பாதுகாப்பை வழங்க மறுத்தமை தொடர்பில்


    பொறுப்புக்கூறும் வகையில் நீதி மன்றுக்கு ரணில்,மற்றும் மைத்திரி செல்லும் நிலை தோற்றம் பெற்றுள்ளது

    இந்தியா மூன்று முறை மேற்படி தகவலை வழங்கி இருந்தும் அதனை அவ்வேளை நாடாண்ட நல்லாட்சி என படும்

    ரணில் ,மைத்திரி ஆட்சி தடுக்க தவறியதன் விளைவாக பல நூறு மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

    இந்த விசாரணைகள் திட்டமிட்டபடி நடைமுறை படுத்த பட்டால் இருவரும் சிறை செல்லும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

    மைத்திரி ரணில் சிறை
    மைத்திரி ரணில் சிறை
    Posted in இலங்கை செய்திகள்

    சந்திரிக்காவின் கூட்டத்திற்கு சென்றவர்களை பணி நீக்கம் புரிந்த மைத்திரி கும்பல்

    சந்திரிக்கா தனது சுதந்திர கட்சியை மீட்கும் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டார் ,இவரது இந்த நடவடிக்கை மகிந்த கும்பலை மிரள வைத்தது ,,பல முக்கிய அமைச்சராக்கள்இதில் கலந்து கொண்டனர் ,

    சீற்றம் அடைந்த மைத்திரி தொகுதி அமைப்பாளர்களை தமது கட்சியில் இருந்து பணி நீக்கம் செய்துள்ளார்