Tag: பொலிஸாரை தாக்கிய நபர்
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும் , அவர் பொலிஸ் நிலையம்
செல்லாததால் , வியாழக்கிழமை குறித்த நபரை கைது செய்வதற்கு , பருத்தித்துறை பொலிஸார் , அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது
இதன் போது அவர் பொலிஸாருடன் முரண்பட்டு , பொலிஸர்ரை தாக்கியும் உள்ளார். அதனை அடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , அச்சுவேலியில் இருந்து மேலதிக பொலிஸார்
அங்கு விரைந்து , பருத்தித்துறை பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்காby நிருபர் காவலன்
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்by நிருபர் காவலன்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.by நிருபர் காவலன்
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்by நிருபர் காவலன்
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவுby நிருபர் காவலன்













