Tag: நீதவான்
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ,கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணி
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மேலும், கியூ வீதியில் வசிப்பவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே அந்த வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியை இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைச்சாலை வைத்தியசாலை
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவப் பரிந்துரையின்
பேரில் மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். எனினும், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐந்து விசேட வைத்தியர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வருகிறது.
அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்து அந்தக் குழு பரிந்துரைகளை வழங்கவுள்ளது.
உயிரிழந்த சிசுDNA பரிசோதனைக்கு நீதவான்உத்தரவு
உயிரிழந்த சிசுDNA பரிசோதனைக்கு நீதவான்உத்தரவு
உயிரிழந்த சிசுDNA பரிசோதனைக்கு நீதவான்உத்தரவு ,மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த DNA பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச இன்று உத்தரவிட்டுள்ளார்.
டி.என்.ஏ பரிசோதனை
தமது சிசு தொடர்பில் டி.என்.ஏ பரிசோதனை செய்யுமாறு பெற்றோர்கள் கோரியபோது, வைத்தியசாலையின் பணிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பின்னணியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச வைத்தியசாலைக்கு வந்து, வைத்தியசாலை அதிகாரிகள் பெற்றோரிடம் காட்டியதாகக் கூறப்படும் சிசுவின் சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.
சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவு
மேலும் , சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
மதுஷானி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட தினமே குழந்தையை பிரசவித்திருந்த நிலையில், குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தையின் பெற்றோருக்கு இதில் சந்தேகம்
ஆனால் குழந்தையின் பெற்றோருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலை அதிகாரிகள் சிசுவின் சடலத்தை பெற்றோரிடம் காட்டாமல் இருந்ததும், மற்றும் இது குறித்து அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான
கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், பெற்றோர் டி.என்.ஏ பரிசோதனைக்கு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Featured
3 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி
3 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது.
மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்திற்கான கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று நீதி ,
சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.




















