Tag: துன்பங்கள்
மழைக்காலத் துன்பங்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 20/12/2023
மழைக்காலத் துன்பங்கள்
தட்டத் தட்டத் தீப்பெட்டியும்
தானா உதிர்ந்து பிய்யுது
சட்டைத் துணிகள் காயாமல்
தண்ணி தண்ணியா வடியுது
கொட்டும் பெரும்மழையால
கூரை பிஞ்சு ஒழுகுது
சட்டி பானை வைத்தாலும்
சருவம் நிரம்பி வழியுது
சொட்டு இடமும் மீதமின்றி
சேறாய் வழுக்கி விழுத்துது
குட்டி நாய்கள் ஆடுமாடு
குளிரும் கூடி அழுகுது
அட்டைப்பூச்சி மட்டைத்தேள்
அணிவகுத்து வருகுது
மட்டை ஓலை தேங்காயும்
மண்டையில விழுகுது
வெட்டி வெட்டி விட்டாலும்
வெள்ளம் வீட்டுக்க பெருகுது
விட்டு விட்டு இடுப்பு நாரி
விறைச்சுக் கால்கள் நோகுது
நட்டுவைச்ச பயிரெல்லாம்
நாசமாத் தான் புதையுது
விட்டுவிடாத இயற்கையால
வாழ்வாதாரம் சிதையுது
கஸ்ரபட்ட எங்களுக்கு
ஏன்தான் இப்படி நடக்குது
கட்டையில போகுமட்டும், இந்தக்
கட்டமாத் தானே இருக்குது !
-பிறேமா(எழில்)-
- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- 100 மி.மீ-க்கு மேல் கனமழை

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- தீபாவளியை முன்னிட்டு தமிழ்வழிப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை

- ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களுக்கு 20 மில்லியன் டாலர் வரை வெகுமதி சென்ட்காம்

- 2027 பட்ஜெட்டின் கீழ் PAYE வரி திருத்தப்படவுள்ளது: ஜனாதிபதி

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ருவன்வெலி மகா சேயா அருகே ‘சத்தியாகிரக’ முயற்சி இருவர் கைது

- ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின

- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

- கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

- போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்

- பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்

- அரசுக்கு எதிராக போராட்டம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை









